காலம் உள்ள காலம் வரை மட்டும் அல்ல
கவிதை உள்ள காலம் வரையும்
கவிதை என்றதுமே " கவி " அவள் புகழ்
காவியமாய் நிலைத்து நிற்கும்
என கணித்து வைத்த கணிப்பு
காலாவதி ஆகிடுமோ என ஒரு தவிப்பு
கலக்கலாய் ,கனிவாய் ,கலைகட்டலாய்
கவின் புது கவிதைகள் முழக்கம்
சுடராய், ஓவியமாய் , சிறப்பு இயற்கையாய்
எத்துனை தான் புதுக்கவிகள் வந்தாலும்
தனக்கு நிகர் தான் தான் என நிரூபித்தும்
நிரூபித்துகொண்டிருக்கும் "கவி"அவள்
புகழ் காலம் காலம் வரை மட்டும் அல்ல
காலமே காலம் ஆகும் வரை
ஜீவிதமாய் நிலைக்கும் .
தாயோடு சேர்ந்து சேயும் பிறந்த நாள்
கொண்டாடுவது அபூர்வம் தான்
அந்த அபூர்வ நாளில் இருக்கும் அபூர்வமே !
மனமார்ந்த வாழ்த்துக்கள் !
என் (எங்கள் ) செல்ல
" கவி " குழந்தையே !