Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 155  (Read 2937 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 155
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:03:14 AM by MysteRy »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
தொடக்கத்தில் தண்டில் உதித்து
இறுதியில் மண்ணை சேரும்
இலைகள் போலவே

தொடக்கத்தில் அன்னை மடியில்
தவழ்ந்து இறுதியில் மண்னின்
பிடியில் நாம்

இது தெரியாத மனிதர்கள் இல்லை
வாழ்கை சக்கரத்தில்
நாட்கள் நகர
மாதங்கள் கடக்க
வருடங்கள் உருண்டோட
குழந்தை பருவம்
பள்ளி பருவம்
வாலிப பருவம்
நடுத்தர வயது
முதுமை பருவம்
என்று எல்லா பருவங்களையும்
எல்லா மனிதர்களும் கடந்து  தான் ஆகவேண்டும்
இது மறுக்க முடியாத உண்மை தான் 

எல்லாம் அறிந்திருந்தும்
ஒரு வயதுக்கு மேல் அம்மா அப்பா
செய்வது தவறு
உங்கள் வயதுக்கு என் இந்த வேலை
என்ற திட்டுகள் பல

உங்களுக்கு இப்போ என தெரியும்
என்று ஒதுக்கியே வைத்து விடுகிறோம்
இந்த நவீன உலகில் இதற்கு தீர்வு
முதியோர் இல்லகள்.

பெற்று பாலூட்டி சீராட்டி வளர்த்த
பாவத்துக்காக  பெற்றோர்க்கு
இந்த நிலை
இதே நிலை தான் நாளை உனக்கும்
என்று அறிவாயோ மனிதா!

"காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்
ஒருநாள் தானும் காவோலை ஆவேன் என்பதை மறந்து"

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
வாழ்க்கை எனும் வட்டத்தில்
காலெடுத்து வைத்தவர்கள் நாம்
மீளமுடியா சுழட்சியிலே
விதிவிலக்கில்லா மாற்றங்கள் நாம்

பருவங்கள் எனும் பெயர் கொண்டு
காலம் நடத்தும் போட்டியிலே
கருவறையில் உயிர் கொண்டு
கல்லறையில் முடிந்துவிடுகிறோம்

தொடங்கிடும் இடம் ஒன்றே
முடிந்திடும் இடம் ஒன்றே
இடையிலே நடக்கும் புதிரை
விடுவிக்கும் திறன் நம்மிடமே

துளிர் விடும் இலை அறியுமோ
அது வளரும் நாட்களில்
உணவாய் மருந்தாய் நிழலாய்
உறைவிடமாய் உதவும் என்பதை
அதை கூட தாண்டியும் சருகாய் வீழ்கையிலே
வேர்கொண்ட மரத்தின் விடியலுக்காய்
கை கொடுக்கும் பசளையாய் மாறும்  என

மனித பிறவியின் மகத்துவம் அறியா
மனிதர்களாக வாழ்ந்தது போதும்
உலகம் போற்றும் சிறந்தவனாய்
இறக்கும் போது பெயர் சூடிக்கொள்
அதுவே நீ பிறந்ததன் அர்த்தம் என
வாழும் வாழ்க்கையில் புரிந்துகொள்

                             **விபு**

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1030
  • Total likes: 3402
  • Total likes: 3402
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
குழந்தையாய் பிறந்து முதியவராய்
மடியும் இடைப்பட்ட காலம் தான்
மனித வாழ்க்கை

துளிர் விட்ட இலை
காய்ந்து மடிந்து உரமாகும்
இடை பட்ட காலம் தான்
இலையே உன் வாழ்க்கை

துளிர்விடும் இலை  பார்க்க அழகு ,
பாலூட்டி வளரும் குழந்தை ,
நீர் ஊற்றி வளரும் இலை .

படிப்பு , வேலை காதல் , உறவு
சங்கடங்கள் ஏராளம் நமக்கு
வெயில், புயல்,  சூறாவளி காற்று
சங்கடங்கள் இலைக்கும் உண்டு

நீர் ஊற்ற நாம் தவறினாலும்
காற்றும், நிழலும் தர அது
மறப்பதில்லை மறுப்பதும் இல்லை

இலையுதிர் காலம் உனக்கு
முதியவர்கள் புதியவர்களுக்கு
வழி விடும் நேரம்
ஆம் புது உயிர் துளிர் விடும் நேரம்

உன்னை பற்றி நாங்கள் அதிகம் கவலை
படுவதில்லை

மழையின் உதவியால் துளிர்விட்டு
செடியாகி , மரமாகி , காய், கனி நீ தந்தாலும்
வெயிலில் நீ நின்று  இளைப்பாற நிழல்
நீ தந்தாலும்
நாங்கள்  சுவாசிக்க காற்று நீ தந்தாலும்

உன்னை அழித்து ஒரு ஆடம்பர வீடு கட்டவே
நினைக்கும் மனிதர்கள்  நாங்கள்

வளர்த்த தாய் தந்தையை வயதானதும்
போற்றி பாதுகாக்காமல்
முதியோர் இல்லம் அனுப்பும்
மனிதர்களிடம்என்ன எதிர்பார்ப்பது

உண்ட பழத்தின் எச்சத்தை விதையாக விதைக்கும்
காக்கை குருவிகளின் அறிவு
மனிதா  நமக்கு இல்லாமல் போனதே !

சுவாசிக்க காற்று இல்லாமல்
மரணம் உன்னை நெருங்கும் முன்
விழித்திடுவோம் மனிதா !

வீட்டுக்கு ஒரு செடியேனும்
வளர்ப்போம் நாளை நம் சந்ததி
செழித்து வளர்ந்திட

வா மனிதா !!!


********ஜோக்கர்********

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SunRisE

பச்சை பட்டாடை நீ
உன்னை உடுத்திருக்கும்
மரங்களுக்கு

ஆத்தங்கரையையும்
அரச மர இலையையும்
பாடாத கவிஞர்கள்
பசுமை மறத்து போன
மூடர்கள் என்பேன்

இளைப்பாற இடமளித்து
அள்ளி அணைத்துதென்றல் தூவி
அன்னை  மடி தரும்
அற்புத தாய் நீ

நீ மக்கி மண்ணுக்குள்
மறைந்தே போனாலும்
மீண்டும் உயிர் கொள்கிறாய்
மற்ற ஜீவனுக்கு உரமாய்

வாழும் நாட்களும்
வானுயரும் நீ
மறைந்த பின்னர்
மலரச் செய்கின்றாய்

இலையுதிர்க் காலம்
பட்டாடை கலைந்து
புத்தாடை பூண்டிட
நீ கொண்டாடும் நாட்கள்

உன் வண்ணம் கலைந்து
சருகாய் மாறி
இயற்கை அன்னைக்கு
விருந்து கொடுப்பாய்

சூரியனும் சந்திரனும்
காற்றும் மழையும்
பறவைகளும் பூச்சிகளும்
காலம் காலமாய்
உன்னை
காதலிக்கும் போது
நான் மட்டும் வதிவிலக்கா!
« Last Edit: July 26, 2017, 01:06:41 PM by SunRisE »

Offline SweeTie

விடியலில் ஒரு பனித்துளியில்
தளிராய்  துளிர்த்து  வந்தவள்
விண்ணவர் போற்ற பிறந்து
குறும்புகள் ஜாலங்கள் செய்து
குழந்தைப் பருவம் கடந்தவள்

பச்சிலைப் பருவமதில் பள்ளி சென்று
எண்ணையும்  எழுத்தையும் கண்ணெனக் கற்று
தொன்மொழியாம் தமிழ் மொழியின் அறிவும் பெற்று 
தந்தை தாய் ஆசான் சொற் பதம்  பணிந்து
நன் மகள் நாமமும் கூடவே பெற்றவள். 

பருவம் அடைந்தாள் பச்சிலையாள்
பல்கலை கற்கவே கல்லூரி  சென்று
நல்லதும் கெட்டதும்  கலந்தே கற்று
நீரையும் பாலையும்
நிதானமாய் அறியும் பக்குவம் பெற்றவள்

இலைகளின் பசுமை இயற்கையின் அழகு
காதலின் மயக்கம் இளமையின் விருந்து 
தன்னை மறந்து நிலை தளர்ந்து
சிறைப்பட்டாள்  தலைவனிடம்
போர்த்திட்டாள்  குடும்பம்  எனும் போர்வை.

காலங்கள் சுழல காதலும் குறைய
குடும்ப பாரமும்  கனக்க   
வாலிபம் மறைந்து முதுமையின் கோடுகள்
சுருக்கங்கள்  வேகமாய் பரவ
பழுத்த இலையானாள் பசுந்துளிர் 

பிரிந்தனர் துணைவனும் மக்களும்
வந்ததே முதுமையில்  தனிமை.
வேண்டவே வேண்டாம் இந்த கொடுமை
காற்றிலே  அசையும் காய்ந்த சருகு
எப்போது வீழும் யார் அறிவாரோ!

துளிர்த்த இலைகள் சிரிப்பதும் 
பழுத்த இலைகள் .வீழ்வதும்
மறுக்க முடியாத நியதி
தொடரும் சாகரம் முடிவின்றி. 


 
« Last Edit: July 28, 2017, 07:32:13 PM by SweeTie »

Offline Maran




வாழ்க்கையும் - அதன்
கடந்துவந்த காலமும்
கொத்தித் தின்ன
சருகாய்....
மஞ்சளும் செஞ்சிவப்புமாய்
பரவிய இலைகள் நடுவில்
கணங்கள் கடுக்க நிற்கிறேன்.

வாழ்ந்த நினைவாய்
வடுக்களை விட்டுக்
காலடிவந்து விழுகின்றன
இலைகள்.

பிரியமாட்டேனெனச் சொன்ன
பாசத்தின் உச்சமாய் இருக்கலாம்
கவிழ்ந்து காலடி நசியும் இந்தத் தண்டனை.

காலாவதித் தேதியிட்டு
அடைபட்ட புட்டிப்பால்போல
அவதிப்படும் பாசம்.

நிராதரவின் வார்த்தைகளில்
இறுகச் சாத்திய கதவுகளில்
முறுக்கிக்கொண்ட அகம்பாவம்
சாவிகளில் துருவேறியபடி.

தராத தண்டனைகளின் வலி அதிகம்
நீயே தண்டித்துக்கொள் என்பதாய்.

உன் சொற்களின் அகங்காரம் சில
என் மனதில் தக்கையாய் மிதக்க
ஆழப்புதைகிறதுன் மிகை அன்பு.

மீண்டும் புதைத்துவிடு
குளிரில் நடுங்கி நிற்கிறேன்
மஞ்சள் நிற இலைகள் நடுவில் மரத்த மனதோடு
இன்னுமொருமுறை
ஆசைத் துளிரேதும் வராதபடி திருகிவிடு
என் நுனியை.

நிரம்பிய துளி நான்
திரும்பிடப் போவதில்லை
இனி!!!





Offline JeSiNa

மரத்தின்  கிளையில் கொழுந்தாய் தொடங்கி  இலையாய் வளர்ந்து  மருந்து  காற்று  மழை  நிழல்  உணவு  பல  உதவிகளை  உன்னிடம்  இருந்து  பெற்று  கொண்டு  பருவங்கள்  மாற  பயன்களை  தந்து  கொண்டு  இருக்கிறது  காலங்கள்  கடந்த  பின்பு  முதிர்வடைந்து  மண்ணில்  மடிகிறது..!!!

தாய்  வயிற்றில்  கருவாகி  தந்தை அணைப்பில் உருவாக்கி விடுவிக்கும்  வாழ்க்கை என்ற பயணத்தில் பயணிக்கும் பொழுது நட்பின் உதவியில் காதல் தோல்வி கனவாய் கலைந்திட  இளம்  பருவம்  இனிமையாய் முடிந்திட..!!

காலங்கள் நடத்திய போட்டியில் திறமை கயிற்றில்  முயற்சியை நிலைநாட்டி வெற்றியை நிலையாகி  திருமணம் என்ற பந்தத்தில் உறவாகி உயிருக்குள் உயிர் சேர்த்து சில உறவு எனும் ஜந்துக்கள் சந்தோசமாக  இருக்க  தாய் தந்தை உணர்வுகளை  கல்லாகி  கருணை  இன்றி  காயப்படுத்திய நாட்கள்...

உலக உருண்டை சுழன்று  கொண்டே தான் இருக்கிறது நாட்கள்  யாவும் அன்றே முடிந்து விடாது   காலங்கள் மாறின அவன்  பெற்ற  பிள்ளைகள்  அவனை  தூக்கி  எறிந்தான்...!!

விடுவிக்கும் வாழ்க்கை  விடை  தெரிந்து  கொள்ள  பலவருடங்கள்  ஆகிய பின்பு முதிர்வடைந்து மண்ணில்  மடிகிறான்...!!! 

பிறக்கும்  பொழுதும் எதையும்  கொண்டு வரவில்லை இறக்கும் பொழுது எதையும் கொண்டு சேர வில்லை இந்த இடை பட்ட காலத்தில் சுயநலம் சூழ்ந்த உலகத்தில் நாம்  ஒருவர் மனதில்  அன்பும்  நட்பும் சேர்க்க  முடிந்தால்  அதுவே  வாழ்க்கை...!!

JesiNa...
« Last Edit: August 08, 2017, 09:46:50 PM by JeSiNa »