Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 194  (Read 3318 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 194
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 01:44:01 PM by MysteRy »

Offline JeGaTisH

இரு வீட்டார்  சம்மதத்தோடு
நம் இரு உள்ளங்கள் இணைகின்றன .

உன்னையும் என்னையும்   சேர்த்து வைக்க
வந்தவர்கள இந்த சொந்தங்கள்

என்னவளின் அன்பு என்னை ஈர்க்க
பண்பு அவளின் அழகை ஆட்கொள்ள
அவள் சிறைக்கைதி  ஆனேன்

ரவி வர்மன் படைத்த
சிற்பங்களும்  தோற்றுவிடும்
அவள் சிற்றிடையின்   அசைவில் 

வட்டம் போட்டு வாழ்ந்த என்னை
திட்டம் போட்டு வாழ வைத்தாள்

உன் அன்புக்கு ஈடு இணை இல்லை
நீ தாய்மை என்னும் இடத்தை அடைந்தாய்
நானும் உனக்கு முதல் குழந்தையானேன்

எனக்கென்று யாருமில்லை என்ற  எண்ணம்
என் மனதில் இடம்கொண்ட தருணம்
நானிருக்கிறேன்  என்று சொல்லி நம்பிக்கையூட்டியவள்

மனைவி என்பவள்  ,வெளியில்  அழகானவள் வேண்டாம்
சிந்தையில் சிறந்தவளும்  அகத்தில் அழகானவளும்
மனைவி என்னும் ஸ்தானத்தை அழகுபடுத்துபவளும்  போதும்

அழகான மனைவி அன்பான துணைவி .




அன்புடன் உங்கள் தம்பி ஜெகதீஸ்
« Last Edit: July 23, 2018, 02:17:56 PM by JeGaTisH »

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
பல அழகிய ஆண்டுகள் முன்பு...
  என் நெஞ்சில் கலந்தது உன் அன்பு...!
இதயத்தில் அன்று சில்லென பனிமழை...
   உன் பார்வையால் வீசினாய் காதல் வலை...

என் உயிரை உன் உயிரும்
  இதமாய் நெய்ததே...
உன் நினைவுகளால் மனமும்
  தித்திப்பாய் மாறியதே...

என் வெளிச்ச பகல்கள் நீயானாய்...
  என் கருமை இரவுகளும் நீயானாய்...
என் அடைமழை நீயானாய்...
  என் கோடை வெயிலும் நீயானாய்...

என் ஒரு வரி அகராதி நீ தானே...
  ஒரு துளி சாகரமும் நீ தானே...
அழகின் தொடக்கம் நீதானே...
  என் இளமையின் வரமும் நீதானே...

இரவுகளின் கனவுகளின்
   சுகம் உன்னால் உணர்ந்தேன்...
கடிகார முட்களின் ஓட்டத்தையும்
   உன்னால் மறந்தேன்...

ஆளில்லா சாலையில்
  சிற்பமென பதிந்தன நம் தடங்கள்...
நம் வாசம் காணாது
  ஊரிலில்லை இடங்கள்...

என்னிதயம் தொட்டு கண்களில் பட்ட
  வஞ்சி மலர் உன்னை,
கரம் பிடிக்க எத்தனை காலம்
  காத்திருந்தேன் கண்ணே...
உன் புன்னகையால் மின்னல் எனை
  கொள்ளையடித்த உன்னை,
என் வாழ்நாள் முழுவதும்
  தங்கத்தட்டில் தாங்குவேன் பெண்ணே...

தேவலோக பூமழை நம் மேல் பொழிய,
  சொந்தம் எல்லாம் கூடி வாழ்த்துரைக்க,
நாம் மணமேடை காணும் இந்நாளில்,
   ஆண்டவன் சாட்சியாய்
உன் கழுத்தில் நான் கட்டிய தாலியும்
   உன் நெற்றியில் நான் இட்ட குங்குமமும்
என் இறுதி சுவாசம் வரை
  உன்மீது கொள்ளும் உண்மை காதலை
வரலாறு காணாத காதல் காவியமாய்
பிரதிபலிக்கும்...!!!

Offline thamilan

உயிரே
நீ என்மனதில் ஓவியமாய்
என் இரத்தத்தில் அணுவாய்
என் சுவாசக்காற்றாய் மாறிய கதை இது
ஒரு புகைப்படம்
என் வாழ்வின் வசந்த காலங்களை
அசைபோட வைக்கிறது
எனது இறந்தகாலத்துக்கு என்னை
இழுத்துச் செல்கிறது

எங்கோ  பிறந்து 
எங்கோ வளர்ந்த நம்மை
முன்பின் அறியாத முகவரி தெரியாத நம்மை
ஒரு பார்வை ஒன்று சேர்ந்ததே
இன்றும் விசித்திரமாகவே இருக்கிறது எனக்கு

காதலின் வாசமே தெரியாமல்
கன்னிகளின் மேல் ஈர்ப்பில்லாமல்
கவலைகள் அற்று காற்றாற்று வெள்ளமாக
கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த நான்
கடவுளின் விளையாட்டால்
கண்டேன் அவளை ஒருநாள்

கண்ட ஒரு நொடியில்
கட்டுண்டேன் அவள் கண்களுக்குள்
கண்களா அது காந்தம் அது
அவள் கண்களைக் கண்ட
அந்த ஒரு நொடியில்
உலக  சுழற்சியே
நின்றது போன்றதொரு பிரமை         
மின்னலைவிட மின்சாரம்
தாக்கியது போன்றதொரு உணர்வு
 
மானிடம் மாட்டிக்கொண்ட வேடன் ஆனேன் நான்
அவள் கண்களுக்குள் 
ஆயுள் கைதியானேன் நான்
அந்த ஒரு நிமிடம் என் மனம் சொல்லியது
இவள் உனக்கானவள் உனக்கே உனக்கானவள்
உனக்காகவே பிறந்தவள்
உனக்காகவே உருவாக்கப்பட்டவள் என

அந்த ஒரு நிமிடம்
என் உணர்வுகள் சொல்லியது
வாழ்ந்தால் இவளுக்காக வாழ வேண்டும்
வாழ்நாள் முழுவதும்
இவள் காலடியில் கிடக்கவேண்டும் என

காதல் என்றால் என்னவென்று புரியாத நான் 
காதலின் வாசம் அறியாத நான்
என்காதலை அவளுக்கு உணர்த்த
பட்டபாடு அப்பப்பா
பலபேர் கூடியிருக்கும்
மேடைகளில் கூட ஏறி பயப்படாமல் பேசிவிடுவேன்
அவள் ஒருத்தியின் முன்னே
வாயிருந்தும் ஊமையானேன் நான்
அவள் கண்களைப் பார்க்கும் போதெல்லாம்
நாக்கு மேல்தாடையுடன் ஒட்டிக்கொள்ளும்
காதலை சொல்லப்போய்
பேச்சு வராமல் நின்றது தான் மிச்சம்

ஒரு நாள்
எனக்கே அதிசயமாக இருந்தது
சொல்லிவிட்டேன் என்காதலை அவளிடம்
மறுப்பு சொல்லவில்லை அவளும்
ஏற்றுக் கொண்டாள் என்னையும் என்காதலையும்

எத்தனை போராட்டங்கள்
எத்தனை சோதனைகள்
எத்தனை தடைகள் 
எதிர்த்து நின்றோம் நாங்களும்
தடைகளை உடைத்தெறிந்தோம்
மதங்களை தூக்கி எறிந்தோம்

வாழ்வோ சாவோ பிரிவதியிலை என்ற
எங்கள் மனதின் உறுதி
காதலில் கொண்ட நம்பிக்கை
எங்கள்  உண்மையான அன்பு
ஒரு நாள் எங்களை ஒன்று சேர்த்து

குடும்பத்தார் நண்பர்கள் முன்னிலையில்
பெரியவர்கள் ஆசியுடன்
அவள் எனக்கு மனைவியானாள்
நான் அவளுக்கு கணவன் ஆனேன்

உண்மைக் காதலும்
மனஉறுதியும் இருந்தால்
எந்தக் காதலும் தோற்ப்பதில்லை
« Last Edit: July 23, 2018, 01:53:37 PM by thamilan »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 956
  • Total likes: 3069
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
முதல் நாள் பாரத்தோம் அன்றே அறிமுகம் ஆனோம்..!

இரண்டாம் நாள் அன்பில் கலந்தோம்..!

மூன்றாம் நாள் முழுதும் புரிந்தோம்..!

நாளுக்கு நாள் கதைகள் பேசி.!

கேலியிலே பொழுதை கழித்தோம்..!

கிண்டல் செய்து சீன்டி பார்ப்போம்..!

அடிக்கடி சண்டை வரும்..!

ஆனால் பேசாமல் ஒரு நாள் கடந்தது இல்லை !

வாரம் முழுவதும் அலுவலக வேலை
ஓர் நாள் உன்னுடன் வீட்டிலிருக்க ஆசை  எனக்கு !

வாரம் முழுவதும் வீட்டு  வேலை
ஓர் நாள் என்னுடன்  இவ்வுலகை ரசிக்க ஆசை உனக்கு !

சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் விளையாட்டாய்
கடந்தது  நம் காதல் முன் !

மாலை மட்டும் மாற்றி கொள்ளவில்லை
நம் சுகம் துக்கம் இரண்டையும் தான் மாற்றி கொண்டோம்

நதியில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும்
ஒன்றுதான் , இரண்டும் தத்தளித்துக் காெண்டே இருக்கும்
கரை சேரும் வரை.

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வது
வாழ்க்கையல்ல!!
சிறிய சிறிய சந்தோஷங்களையும் ரசித்துக் கொண்டு வாழ்வதே
வாழ்க்கை...!!

நாம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்
என் விரல்களின் இடைவெளி உன் விரல்கள் கோர்க்க
காத்திருக்கிறது அன்பே வா!

****ஜோக்கர் ****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
                       இருமனம்  இணையும் திருமணம் !

அன்புள்ள மணமகனே!
காதல் தேவதை உனக்கு மனைவியானாள்!
மாலையிட்டவளை  என்றும் நினைவில்
மறக்காமல் வைத்து இரு !....
ஏன் எனில் உறவுகளை துறந்து
உன் வழி நடக்க வந்தவள் அவள்..
 
மாலை மயங்கும் நேரத்தில் மங்கையவள் விருப்புடன்
மஞ்சள் முகம் மினுங்க ..மங்கள கும்கும் வைத்தே
மலர் சூடிய மதி வதனமாய் ...
மன்னவனே உன் வரவுக்கு காத்து  இருப்பாள்!

தெய்வங்கள் சாட்சியாய் வந்தவளை
தேவை இன்றி வதைக்காமல்...
வாழ்நாள் முழுதும் பொக்கிஷமாய் ..காத்து விடு..
இப்பூவுலகில் உனக்கு சொர்க்கத்தை காட்டுவாள்..

அன்புள்ள மணமகளே .....
ஊர் ஆணின் வெற்றிக்கு பின்னால்....
ஊர் பெண் இருப்பாள்...உண்மைதான் !
பொறுப்பற்ற காளையை திரிந்த அவன்
இன்று.. 
பொறுப்புள்ள கணவன் ஆனான் உன்னால் ...

சுற்றம் நட்பும் சூழ உன்னை ஏற்று கொண்டவன்
உன் குறை நிறைகளையும் ஏற்று...
இனி உன் மனம் அறிந்து நடப்பான் !
உன் வாழ்வின் பாதியை அவனிடம் கொடு!..

அன்புள்ள மணமக்களே!
மலரும் மணமும் போல...
வானும் நிலவும் போல..
அன்பு இழைகள்...உங்கள் வாழ்வில்
நேசம் கலந்து பின்னட்டும்!
அன்றில் பறவைகளாய் என்றும் வாழ ...
வாழ்த்துகிறோம்..வாழ்க வளமுடன் !
 
இனிய வசந்த காலம்தான் என்றுஎன்றும்!





Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 962
  • Total likes: 2693
  • Karma: +0/-1
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதருக்கு அழகு !
என்னவளே
இதுவரை  உன்னை கண்டிராத
என் விழிகள் ...
இருந்தும் களவு போனது
என் இதயம் ....
என்னவென்று சொல்ல
எங்கு கற்றாய் இந்த
வித்தையை .....
பட்டப்பகலில்
விழித்திருக்கும் போதே
என் இதயத்தை
களவாடி சென்றாய்
என்னவளே ....

என்னவளே
என் அன்பும் நீயாக
என் கிறுக்கல்களும் நீயாக
என் உறவும் நீயாக
என் உணர்வும் நீயாக
என் உயிர்மெய்யும் நீயாக
முழுமையாக  நான்  நீயாக  மாறிப்போனேன்
என்னவளே
உயில் எழுதி தருகிறேன்
உறங்காத என் உள்ளத்தில்
என்றும்
உறங்காது உன் நேசம் ....

என்னவளே
இந்த ஒரு பிறவி போதாது
உன்னை நேசிக்க
பலநூறு பிறவி வேண்டும்
இந்த ஆசை நிறைவேறுமா
என்று தெரியாமல்
இந்த பிறவியிலே
நூறுபிறவின் நேசத்தை
உனக்கு தந்து வாழ்ந்திட
உதவிடு என்னவளே
உன் இதயத்தில் என் இதயத்தை பூட்டிவிடு

உன் விழியாக மாறிட ஆசை
உன் மொழியாக மாறிட ஆசை
உன் நிழலாக மாறிட ஆசை
உன் எண்ணங்களாக மாறிட ஆசை
இன்னும்    சில நாட்களில்
என் சரிபாதியாய்  வந்துவிடுவாய்
என்று அறிந்தும்
உன்னை  ரசித்து கொண்டிருக்கிறேன்
உன் சேட்டைகளை
உன் மழலை சிரிப்பை
என் செல்ல ராட்சஷியே
உன் விரல் கோர்த்து
உன் நெற்றியில் குங்குமம் வைத்து
உன் கழுத்தில்
தாலி கட்டினால்  போதும்
என் அன்பே ....


ஆனால் இன்று     
இவை அனைத்தும்
கானல் நீராய் பகல் கனவாய்
மாறியது
விதியின் விளையாட்டு
திருமணம்  கலைந்து
இன்று
நாம் இருவரும்
இருவேறு திசைகளில்

எண்ணங்கள் யாவும்
எண்ணிக்கையில்  அடங்காமல்
எதிர்மறையாய் ஏற்பட்டு
எண்ணங்கள் அனைத்தும்
எதிர்பார்ப்போடு விழிகளில் நிற்கும்போது
எக்கச்சக்கமாய் சிக்கிக்கொள்கிறேன்
எச்சில் விழுங்கி
எழுந்திட முயற்சிக்கிறேன்
என்னவளே

கலையாத 
கனவு வேண்டும் என்று
தினம் தினம் தூக்கத்தை
தொலைக்கிறேன் ....

இன்றும் என்றும்
எனக்கு நீ
விதி தந்த வரமே !

Offline SweeTie

சுகமான நினைவுகளை
கவிதைகளாய்  கோர்த்து
பாமாலையாய்  தொடுத்து 
உன் தோழ் சேர்த்த நாட்கள்

உன் குரல் கேட்கும்  தருணங்கள்
என் நினைவுகளை மறந்து
பட்டாம்பூச்சிபோல்  சிறகடித்து
உன் முகம் காணத் தவித்த நாட்கள்.

என்னவனாய் என்றும் நீ என்னருகில்
உன்னவளாய் நான் உன் உயிரினிலே
என்றென்றும்  வேண்டுமென
ஏங்கித்  தவமிருந்த நாட்கள்.

காத்திருந்தோம்  காலம் கனியுமென
வாராதோ  சீக்கிரமே அந்த  நன்னாள்
விடியாத  இரவுகளை விடுவிக்க
வந்த  பொன்னாள் இத் திருநாள்.

கண்ணோடு கண் நோக்கி   எதிரெதிரே
மாலையும் கையுமாய் நின்றிருந்தோம்
வேதியர் மந்திரம்   கேட்கவில்லை
நம் உயிர்களின் சங்கமம்   தெரிகிறது

சொந்தமும் பந்தமும் நண்பரும்  வாழ்த்திடவே
ஈருயிர் ஓருடலாய்   என்றுமே  வாழ்ந்திடுவோம்
ஊடலும் கூடலும் காதலும் பெருகவே 
பெற்றெடுப்போம்  ஓர் ஆணும்  ஓர் பெண்ணும்
 
« Last Edit: July 27, 2018, 01:49:35 AM by SweeTie »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 528
  • Total likes: 1040
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
இருமனம் ஒரு மனம் ஆகும் நாள்
நினைத்து நினைத்து காத்திருந்த நாள்
ஆறுவருட கனவு அது
என்னவன் உரிமையோடு என்
கரம்  கோர்க்கும் நாள்

அம்மா அப்பா நான் என்றிருந்த
என் குடும்பத்தில் இன்று
உறவாய் என்னவனும்
இணையும் நாள்

ஓற்றை பிள்ளையாய் வாழ்ந்த நான்
இன்று தொடக்கம் பல உறவுகளோடு
வாழ தொடங்க போகும் நாள்

உற்றார்உறவுகள் நண்பர்கள் சூழ
சிகை அலங்காரம்  கழுத்தில்  நகை அலங்காரம்
கையில் மருதாணி கோலம் என நானும்
பட்டு வெட்டி சட்டை  என்னவனும்
மணவறையில் இருக்க

மந்திரங்கள் ஓதி
இறுதியில் என் கழுத்தில்
அவன் கட்டிய  திருமாங்கல்யம்.
என் வாழ்வில் இன்னுமோர் அதிகாரம்
ஆரம்பம் என எண்ணிய நேரம்
.
.
.
என் அலைபேசி  சிணுக்களில்
கண்வழித்தேன்.

அலை பேசியில் என் தோழியின் குரல்
திருமணத்திற்கு வரவில்லையா?
அப்போது தான் சுயத்தை உணர்ந்தேன்
ஆம் இன்று என்னவனின் திருமணம்
 
நானும் சென்றேன் மணப்பெண்ணாக அல்ல
மணப்பெண்ணின் தோழியாக
எல்லா கனவுகளும் நிஜமாவதில்லை .....