Author Topic: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!  (Read 21325 times)

Offline சாக்ரடீஸ்

இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்

நாம் அறிந்த விளக்கம் :

இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா? என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்

விளக்கம் :

பசியால் வாடிய சிவனடியார் ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின் வழியே சென்றபோது அங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொண்டு சென்றார்இ பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால் கிடைக்கவில்லை அந்த ஏமாற்றத்தால் அவர் சொன்ன சொல் பழமொழியாகி விட்டது.

Offline சாக்ரடீஸ்

இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்

நாம் அறிந்த விளக்கம் :

ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல என்று சொல்லப்பட்ட பழமொழியாக நாம் கருதுகிறோம்.


விளக்கம் :

மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவதுஇ எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாகஇ சிக்கனமாக முடிப்பார்கள் என்பது இந்தப் பழமொழியின் மூலம் அறியும் உண்மை விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று

நாம் அறிந்த விளக்கம் :

பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல என்பது இந்த பழமொழியின் நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள் என்பது தான் இத உண்மை விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

கோல் ஆடஇ குரங்கு ஆடும் 

நாம் அறிந்த விளக்கம் :

எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

நல்லொழுக்கங்களையும்இ நல்ல பண்புகளையும் வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும். அப்போது தான் அதனை கடைபிடிப்பார்கள் என்பது இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

குப்பையும் கோழியும் போல குருவும் சீடனும்

நாம் அறிந்த விளக்கம் :

கோழி குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோலஇ சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

சீடன் கோழியென்றால் குரு குப்பை என்று பொருளல்ல. கோழி குப்பையை கிளறும் உவமை சீடனுக்காகக் கூறப்பட்டதுஇ குருவுக்காக அல்ல. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குப்பை போன்றதாகையால் தகுந்த குருவை அணுகி அவர் மூலம் தன் குப்பையை கிளறி உண்மையை அறியவேண்டும் என்பது இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்

நாம் அறிந்த விளக்கம் :

ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகுஇ உப்புஇ கடுகுஇ தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர்இ நெருப்புஇ விறகு. இது அனைத்தும் இருந்தால் சமையல் அறியாத பெண்கூட சமையல் கற்றுக் கொள்வாள் என்பது பொருள் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தட்சிணையா? 

நாம் அறிந்த விளக்கம் :

ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்குஇ குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

குறுணி என்பது எட்டுப்படி கொண்ட பழைய முகத்தல் அளவை. தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது இதன் உண்மையான விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

சாகிற வரையில் வைத்தியன் விடான் செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன் 

நாம் அறிந்த விளக்கம் :

வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமட்டான். ஆனால் பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் பிராமணனோ ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான் என்பது இந்தப் பழமொழியின் நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

வைத்தியரின் வருமானம் சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பது சுட்டப்படுகிறது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.



Offline சாக்ரடீஸ்

பருவத்தே பயிர்செய்

விளக்கம் :

பருவம் என்பது குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கிறது. உரிய காலத்தில் எந்தச் செயலையும் செய்தல் வேண்டும். இல்லையென்றால்இ எதிர்பார்த்த பலன் கிடைக்காது. படிக்கிற பருவத்தில் செம்மையாக படிக்க வேண்டும். அதேபோல அந்தந்தப் பருவத்தில் பயிர்களை விதைத்துஇ மழைஇ காற்றில் வீணாகாமல் பருவத்தே அறுவடை செய்ய வேண்டும். இது போன்ற காலம் தவறாமல் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.


Offline சாக்ரடீஸ்

காலம் பொன் போன்றது

விளக்கம் :

உடல் வலிமையும்இ செல்வமும் மட்டும் மனிதனுக்கு வெற்றியைத் தேடித் தந்து விடாது. செய்யும் செயல்தான் வெற்றிக்கு அடிப்படை. காலம் கருதி செய்வதே வெற்றியை கொடுக்கும். ஏனெனில் காலத்தை தவறவிட்டால் மீண்டும் பெற முடியாது. எனவேதான் காலம் பொன் போன்றது என்றனர் நமது சான்றோர்கள்.



Offline சாக்ரடீஸ்

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை 


விளக்கம் :

இளமையில் நல்லவற்றை கற்பதுஇ மழைக் காலத்தில் நாற்று நடுவது போன்றதாகும். மாணவப் பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்டவன்இஇளமைப் பருவத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியும். பருவம் தவறி விதைத்தால்இ பயனைப் பெற முடியாது. இளம் பருவத்தில் வேரூன்றும் பழக்கங்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். தீய பழக்கங்களும் அப்படிப்பட்டவையே. அது ஆபத்தானது என்பதை வலியுறுத்தத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்றார்கள்.

Offline சாக்ரடீஸ்

எறும்பு ஊர கல்லும் தேயும் 


விளக்கம் :

முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்போ நுண்ணியது. கற்களின் வலிமைக்கு முன் எறும்பின் பலம் குறைவானதுதான். ஆனால் எறும்பு ஊர்ந்து ஊர்ந்துஇ தொடர்ந்து பயணிப்பதால் வலிமையான கல்லிலும் தேய்மானம் உண்டாகும். அதுபோலவே தொடர்ந்து முயற்சித்தால் மிகக் கடினமான செயலாக இருந்தாலும் எளிமையாக கூடி வரும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.

Offline சாக்ரடீஸ்

ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி


விளக்கம் :

ஆல் என்பது ஆலமரம். வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும்இ வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் துலக்க பல்வளம் சிறக்கும். இப்போது இரண்டாவது அடியான நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பதில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன. நாலு என்பது நல்லது கெட்டது நாலும் என்றும் இரண்டு என்பது உண்மையான விஷயங்களை பேசுதல் நன்மையான விஷயங்களை பேசுதல் என்பதைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து. மற்றொரு கருத்து நாலு என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றது.

Offline சாக்ரடீஸ்

குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா?


விளக்கம் :

எங்கிருந்தாலும் உயர்ந்த விஷயங்கள் உயர்ந்த விஷயங்களாகவே இருக்கும். இடத்தைப் பொருத்து அதன் தன்மையோஇ தரமோ மாறாது என்பதற்காக சொல்லப்பட்ட விஷயம்தான் இது. ஆனால் இங்கு சரியாக சொல்லப் போனால் இந்தப் பழமொழியின் வடிவம் குப்பையில் கிடந்தாலும் குன்றி மணி நிறம் போகுமா என்று வரவேண்டும். உச்சரிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பழமொழியின் அந்த குறிப்பிட்ட வார்த்தை வடிவம் மாறி விட்டது. இருப்பினும் குண்டுவோ குன்றியோ இங்கு பழமொழி தரும் விளக்கம் மாறிப்போக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Offline சாக்ரடீஸ்

பிள்ளையார பிடிக்கப்போயி குரங்க பிடித்த கதையாயிடுச்சி 


விளக்கம் :

களிமண்ணில் பிள்ளையார் சிலை செய்ய எண்ணி நம் கைகளால் பிடித்து சிலையை செய்து பார்த்தால் அது குரங்கு போல் இருக்கிறது. நாம் செய்ய நினைத்ததோ பிள்ளையார் சிலை. ஆனால் இறுதியில் கிடைத்ததோ குரங்கு சிலை. இதைப்போலதான் வாழ்க்கையிலும் நல்லது செய்ய எண்ணி ஒரு செயலை செய்தால் கடைசியில் அது தீயதாக வந்து முடிகிறது.