Author Topic: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!  (Read 21320 times)

Offline சாக்ரடீஸ்

கழுதை கெட்டால் குட்டிச் சுவர் 


விளக்கம் :

கழுதையின் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது புண் போன்று ஏதாவது வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை விட பாதி சேதமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை அதன்மேல் தேய்த்துக் கொள்ளும். காரணம் நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது. எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சேதமடைந்த சுவர்களையே நாடும். இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம். இதுவே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.




Offline சாக்ரடீஸ்

தனி மரம் தோப்பாகாது   


விளக்கம் :

பல மரம் சேர்ந்து நின்றால் தான் அதை தோப்பு என்பார்கள். ஒற்றை மரத்தை தோப்பு என்று சொல்ல முடியாது. அது எப்போதுமே ஒற்றை மரம்தான். அதே போல சமூகத்தில் மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் அதை சமூகம் என்று சொல்ல முடியும். தனிமையாக வாழும் ஒருவரது வாழ்க்கை நிறைவு பெறாது. ஒற்றுமை குடும்பத்திலும் சமூகங்களிலும் மிக மிக அவசியமான ஒன்று. சமூகத்தில் ஒருவராக தனிமையில் வாழ முயற்சி செய்தால் அது பெரும் வெற்றி அடைவதில்லை. ஆனால் பலரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் அவர்கள் பெரும் வெற்றி அடைந்துவிடுவார்கள். இதுதான் இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.






Offline சாக்ரடீஸ்

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?


விளக்கம் :

உண்ண உணவு தந்தவர்கள் வீட்டிலேயே திருடுவது மிகப்பெரிய தவறான செயலாகும். உணவு தந்த வீட்டுக்கு கேடு தரும் செயலை நினையாமல் இருக்க வேண்டும். அவர்கள் நம்மை நல்லவர்கள் என நம்பி போற்றி உணவும் தந்தால் அவருக்கே கேடு செய்வது நம்பிக்கை துரோகமாகும். உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.






Offline சாக்ரடீஸ்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் 


விளக்கம் :

ஒருவரது மனநிலையை அவரது முகத்தைக் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். மனிதருக்கு முகபானைகள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும் என்பது இதன் விளக்கம் ஆகும்.





Offline சாக்ரடீஸ்

உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு


விளக்கம் :

கடம்பு என்பது இங்கே கடம்ப மரத்தையும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலையும் குறிக்கிறது. கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் உடல் நிலை எப்போதும் சீராக இருக்கும் என்பதே இதன் விளக்கம் ஆகும்.




Offline சாக்ரடீஸ்

இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு


விளக்கம் :

எள் கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும்இ பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால்இ உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.