1st 8th placeக்கு மட்டும் தான் IT la chance கிடைக்கும்னு எனக்கு late"ah தான் தெரிஞ்சிது 😓 நான் place பன்னும் போது எனக்கு 13th தான் கிடைச்சி இருக்கு...!
என் song வருமானு தெரியல but 13th place பிடிச்சது waste ஆக கூடாதுல அதனால எனக்கு பிடிச்ச song"ah போடுறேன்...!
படம்:-ஜோதா அக்பர்(2008)
இசை:-AR ரகுமான்
பாடியவர்:-ஸ்ரீநிவாஸ்
பாடல் வரிகள்:-நா.முத்துக்குமார்
இந்த படத்துல வர எல்லப்பாடலும்
சிறப்பு வாழ்ந்ததா?என்றால் நிச்சயம் அல்ல ஆனால் இந்த ஒரு பாடலின் தனித்துவத்தை புறக்கணிக்க முடியாது,
"முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்"
இப் பாடல் முதல் முறை கேட்டதும்
"ஒரு பெண்ணை இத்தனை அழகாக வார்ணிக்க முடியுமா?
என்ற கேள்வியே எனக்குள் எழுந்தது"
ஒவ்வொரு வரியும் அத்தனை கவிதைத்துவம் வாழ்ந்ததாக எழுதி இருப்பார்
நா.முத்துக்குமார் இவ்வரிகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இசைப்புயல் AR.ரகுமான் இசை அமைத்திருப்பார் கேட்பவர்களை சுண்டி இழுக்கும் அளவுக்கு இப்பாடலை ஸ்ரீநிவாஸ் பாடியிருப்பார்...!
இப்பாடலில் வரும் எந்த ஒரு குறிப்பட்ட வரிகளை பிரித்து வைத்து இது அழகான வரி என்று வகைப்படுத்த முடியாது because அத்தனை வரிகளும் அவ்வளவு அழகு நிறைந்தது,
முழுமதிகளை வர்ணிக்க வார்த்தையை தேடிக்கொண்டிருக்கும் அத்தனை அக்பர்களுக்கும் இந்த பாடலை dedicate செய்கிறேன்...!❤️