இசைத் தென்றல் ரசிகர்களுக்கும், இசைத்தென்றல் தொகுப்பாளினி Tinu மற்றும் குழுவினருக்கும் வணக்கம்..
தொகுப்பாளினி Tinu அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்..அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.....
இந்த வாரம் நான் தேர்வு செய்துள்ள பாடல் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் வரும் "கண்ணின் மணியே "எனும் பாடல்..
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்..
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், கல்வி பல கற்றாலும், வானில் பறந்தாலும் பெண்களின் துயர் என்றும் மாறப்போவதில்லை.. என்பதை வெளிப்படுத்தும் சிறப்பான பாடல் இது...
கவிஞர் வாலியின் கைவண்ணத்தில், ஒவ்வொரு வரியிலும் தைரியத்தை புகட்டி அநீதிகளுக்கு எதிராக பெண்களை போராடச் சொன்ன பாடலிது...
பெண்களின் பெருமைகளை, ஆண்களின் மனதில் பசுமரத்தாணி போல பதிய வைத்த ஒரு சில பாடல்களில் முதல் வரிசையில் இப்பாடலை வைக்கலாம்.....
பாடகி சித்ரா அவர்கள் தன்னுடைய குரலில் பெண்களின் வலிகளை இந்தப் பாடலில் அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்..
இப்பாடலை, தினமும் சவால்களைச் சந்தித்து போராட்டத்தையே வாழ்வாகக் கொண்ட அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்...