Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 298  (Read 2177 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 298

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Sun FloweR

இது ஒன்றும் புதிதல்ல..
காலம் காலமாய்
தொடர்ந்து வரும் ஒன்று தான்..
செழித்து வளர்ந்த காதலையும்
தூய நேசத்தையும் விழுங்கி
கொண்டு ஏப்பம் விடும்
விதி நடத்தும் துரோக நாடகமே இது...
பகைமை எனும் அரக்கனுக்கு
பலியாக்கப்பட்ட இதயங்களின்
சரித்திர சரிவு இது...

அப்போது தெரிந்திருக்காது
இவர்களுக்கு தாங்கள்
மறைந்தும் வாழ்ந்து கொண்டிப்போம்
என்ற உண்மையை..
உலக காதலுக்கெல்லாம்
தங்கள் காதல் அச்சாரமாகப் போகிறது
என்ற உண்மையை...
தங்களின் காதலைச் சொல்லியே
உலக காதல் வாழும், வளரும்
என்ற பேருண்மையை....

காதல் ஜெயிப்பது எல்லாம்
காதலர்கள் இணைவதிலே..
காதல் கதைகள் ஜெயிப்பது எல்லாம்
காதலின் தோல்வியிலும்
காதலர்களின் மரணத்திலுமே...
அப்படி ஜெயித்த விட்ட  வரலாறு கண்ட காதல் கதைதான்
இவர்களின் உலக காதல் கதை...

இந்த பூமி இயங்கும்வரை
மலர்ந்து கொண்டுதான் இருக்கும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்....
இப்படி சில ரோமியோ ஜூலியட்கள்
செத்துக்கொண்டும் தான் இருப்பார்கள்...
இப்படி சில ரோமியோ ஜூலியட்கள்
வாழ்ந்து கொண்டும் தான் இருப்பார்கள்...

Offline thamilan

காதல் அன்று தொட்டு
இன்றுவரை பலபரிமாணங்களில்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது
ஆதம் ஏவாள் தொடங்கி இன்றுவரை
காதல் மனித வாழ்வில் - ஒரு
அங்கமாகிப் போனது

அன்றைய காதல்
இலக்கியக் காதல் எல்லாம்
தோல்வியிலேயே முடிந்தது
அம்பிகாபதி அமராவதி
லைலா மஜ்னு
மும்தாஜ் ஷாஜகான்
அனார்கலி சலீம் - என்று
இலக்கியக் காதலர்கள் பல
இந்த காதல் எல்லாம்
தோல்வியிலும் மரணத்திலுமே முடிந்தன

அந்த காதலர்கள் தோற்றாலும்
காதல்கள் இன்றுவரை
வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன

இன்றைய காதல்கள் ????
காலையில் பூத்து
மாலையில்  வாடிடும் மலர்களாக
வானில் பிரகாசித்து
உதிரும் நட்சத்திரங்களாக
தொடங்கிய சுவடுகூட தெரியாமல்
மறைந்து போகின்றன

காதல் என்பது என்றுமே ஒன்று தான்
காதலர்கள் தான் மாறுபடுகிறார்கள்
காதலின் தன்மையும் மாறுபடுகின்றன

அன்றைய காதல்கள் எல்லாம்
உள்ளத்தில் தோன்றி
உள்ளத்திலே முடிந்தன.
இன்றைய காதல்களோ
உடம்பில் தொடங்கி
உடம்பிலேயே முடிகின்றன

நம் காதல்
சரித்திரத்தில் வாழவேண்டும் என்ற
எண்ணம் நமக்கு தேவை இல்லை
நாம் காதலிப்பவர் மனதில்
வாழ்ந்தாலே போதும் அந்தக் காதல்
நிச்சயம் வெற்றி பெரும்

Offline TiNu



காதல்... இரு உயிர்களிடையே தோன்றும்..
ஓர் இனிய உணர்வுகளின் உரையாடல்....

காதல்..  இடம் அறியாது..  உறவு எதுவென புரியாது..
மொழி.. சிறிதும் பாராது... மனதை மெல்ல வருடும்..

காதல்.. சுற்றத்தார் அனுமதி இன்றி வருமாயின்...
அதன் நிலைமையோ.... அந்தோ பரிதாபம்...

காதல்..  இதற்கு இச்சமூகம் சமூகத்தாரும்..  வகிக்கும்
வழிமுறைகளும்... விதிமுறைகளும்.. அப்பாப்பா...

காதலே.. நீ செய்த பிழை என்ன? நீ செய்த பாவம் தான் என்ன....
இதோ பாருங்கள்.. ஓர் காவிய காதல் மடிந்து கிடக்கிறது...

காதலர்களே.. நீங்கள் செய்த தவறு தான்  என்ன...
உங்கள் உயிர் பகைவர் குலத்தில் தோன்றியது... பிழையா?

காதலர்களே.. உங்கள் அன்பின் குற்றம்தான் என்ன...
இனவெறி கடந்து நின்ற உங்கள் பாசத்தின் பிழையா?

காதலர்களே... உங்கள் நேசத்தின் குறை தான் என்ன...
குடும்பத்தார் தடைகளை மீறிய.... பிணைப்பின் பிழையா?

காதலர்களே... உங்களின் தூய காதலின் நிலை தான்  என்ன...
குலப்பகை நடுவே சிக்கி தவித்தது.. உறவின்  பிழையா?

காதலியே... உன்னுடைய செயலின் நிலை பார்த்தாயா..
உன்  உற்றாருக்கு... புரியவைக்க செய்த செயலின் பிழையா?
 
காதலனே.... சூழ்நிலை அறியாத.. உன் மதி மயங்கியதா...
உன்னவள் நடிப்பு அறியாது.. வாளினை தொட்டது பிழையா?

காதலியே..   உன் இறந்தநிலை காண.. சகிக்காது.....
தன்னை மாய்த்து கொண்ட.. அவன். காதல் உயர்ந்ததா?

காதலனே... உயிரற்ற உன் உடல் காண.. தாங்காது..
தன் உயிரை துச்சமென துறந்த.... அவள் காதல் உயர்ந்ததா?

காதலர்களே... உங்களின் தவறு ஒன்றுமே. .இல்லை....
உயர்ந்த காதல் எதுவென.. யோசிக்கவும் தேவை இல்லை...

காதல் ரசம்..  காவியமெங்கும் தேன் என வழிந்தோட..
சமூக சீர்கேட்டை.. நயமாக.. சுட்டி காட்டிடும்..
 
காதல் காவிய எழுத்தாளர்.. வில்லன் ஷேக்ஸ்பியர்..
கேளுங்கள்...  காதல்.. வாழ்ந்ததா?... இல்லை வீழ்ந்ததா...


« Last Edit: September 28, 2022, 10:46:18 PM by TiNu »

Offline SweeTie

கனவிலே  உன்னோடு  களிப்படைகிறேன் 
நினைவிலே  முடியவில்லையே  என்ற ஏக்கம்
காதலுக்கு தான்  எத்தனை சக்தி 
கண்களால்   கவர்ந்து   இதயத்தில் நுழைந்து
இன்பத்தில்   திளைத்து    இருவரும்  ஒருவராய் !!!

காலங்கள்   மாறினாலும்   காட்சிகள் மாறினாலும்
நுட்பங்கள் மாறினாலும்  நுண்ணறிவு  மாறினாலும் 
காதலுக்கு  தடைபோடும்  சமூகம் மாறவில்லையே
காதலிப்பது  பாவம்  என்றால்    ஆதாமும் ஏவாளும்  அன்று
காதல்  கொண்டது மட்டும் எப்படி நியாயமாகும்

ஒருநாள்  நாம் மரித்துப் போகலாம்  ....அன்று 
மண்ணையும்  விண்ணையும்  கடந்த  உலகம் 
மாசுபடாத,   நம்போன்ற  காதலரை    வரவேற்கும்  உலகம்
எமக்காக   காத்திருக்கும்     
 நம் வருகையை  அன்புடன் வரவேற்கும் 

இன்று  நம்  காதலை   ஏற்றுக்கொள்ளாத  சமூகம் 
நம்மை   கழுகிலேற்றி    கொல்லத்துடிக்கும்   சமூகம் 
காதல் ஒரு சாக்கடை  என்று காறித்துப்பும்  சமூகம்
நம்  பரிசுத்த காதலை    ஏற்றுக்கொண்டால்    நாம் 
உயிரை  மாய்த்துக்கொள்ள   வேண்டிய அவசியம்தான் என்ன ?

பத்து  பொருத்தம்  பார்த்து  மணமுடித்துவைக்கிறார்கள்   
மனம்  பொருந்துகிறதா என்று ஏன் அந்த ஜாதகம் கூறுவதில்லை
அதை  ஏன்  இந்த சமூகம்  புரிந்துகொள்வதில்லை     
ஜாதி மத  வெறியில்    ஊறிப்போன    சமூகம்   
காதலை    காலனாக   இன்னும்   நினைப்பது  ஏன் ?

இதிகாச  காதல்  காவியங்களை  போற்றுகிறார்கள் 
இவர்கள்   காதலும்  அன்று  தடுக்கப்பட்டு  ஒடுக்கப்பட்டு
நிர்மூலமாக்கப் படாமல்  இருந்திருந்தால்     
அன்று  அவர்கள்   காதல்  தோற்றுப்போய்  இருக்குமா ?
இன்று  உலகம்   பேசிக்கொண்டேதான்  இருந்திருக்குமா ??

காதல்  அதிகாலை   மலரும்   பூக்களைப்போன்றது   
பசும் புற்தரையில்  வீழும்  காலைப்  பனித்துளி போன்றது 
ஏழு  வர்ணங்களாலான   வானவில்   போன்றது
கண்களை  கவர்ந்திழுக்கும்  ரவிவர்மா   ஓவியம் போன்றது
ஆழ்மனதில்  உண்டாகும்   அதிர்வின்   உணர்வு காதல்

ஷேஸ்பியர்   எழுதியதும்  காதல்   
பாரதி   பாடியதும்   காதல்   
வள்ளுவரின்  குற ல்களிலும்   காதல் 
வைரமுத்து  கவிதையிலும்   காதல்   
எங்கும்  காதல்   எதிலும்   காதல் 

 கருத்தொருமித்த 'காதல்  என்றுமே  அழியாதது   
ஏழு கடல்   தாண்டி      ஈரேழு உலகம்  தாண்டி
வாழும்    இரு ஜீவன்களின்  உயிரில் வாழ்கிறது  காதல்
வாழ்ந்தாலும்  மரித்தாலும்    காதல் என்றும்  வாழும்   
காதல்  அழிவில்லாத  நித்திய  ஜீவன்
 

Offline Charlie

உன் விழிகளில் பல கவிதைகள்  சொல்கிறாய்  !!

உன் பார்வையில் எனைக்கொள்கிறாய்  !!

உன் புன்னகையில் எனை பதற வைக்கிறாய்  !!

எனக்காக  பிறந்து இருக்கிறாய்  !!

அன்பே ஜூலியட் நீ எங்கு  இருக்கிறாய்  !!

அன்றோ  உனை சுமந்த என் கைகளுக்கு வலியோ தெரியவில்லை  !!

இன்றோ நீ இன்றி  உன் நினைவுகளை  சுமக்கும் என் இதயத்துக்கு வலியோ ஓயவில்லை  !!

மறைந்து போனாலும் மக்களுக்கு மறந்து போகாது நம் காதல் காவியம்  !!

அமிழ்ந்து போனாலும் அணைந்து போகாது 
நம் காதல் சுடர்  !!

கலைந்து போனாலும்  காற்றோடு கலந்திருக்கும்
நம் காதல் நினைவுகள்  !!

உன் விழிச்சிறையில் இருந்து எனை விடுவித்துவிடாதே  !!
மாண்டு விடுவேன் மண்ணோடு மண்ணாக!!

உன் இதழ் முத்ததைப் பிரித்து விடாதே  !!
ஆக்சிஜன் இன்றி தவிப்பேன் உயிர் உள்ள பிணமாக  !!

உலக மக்களே  உரக்க சொல்கிறேன் கேளுங்கள்  !!
நான் ரோமியோ  !  இவள் ஜூலியட்  !

நாங்கள் காதலை காதலித்தோம்  !!
காதல் எங்களை காதலித்தது   !!

என் தேவதையே !!
நம் காதல் ஒன்றும் கடல் மணலில் வரைந்த
ஓவியம் அல்ல !!
கடல் அலையில் அழித்துச்செல்ல  !!
நம் மனதால் மனதில் கிறுக்கிய  காவியம்  !!

என்னை அழ  வைக்கும் இரவு கூட அழகாக தெரிகிறது  !!

அதில் வருவது நம் காதல் நினைவுகள் என்பதால்  !!!






Offline MoGiNi

உயிர்ப் பறவையின்
உராய்தலற்று
கிடக்கிறது உலகு
வாழ்தலின்
ரம்மியங்கள் தொலைத்து
காற்றில் அதை தேடி
கலந்து கிடக்கின்றதோ..

ஓர் பாலை நிலத்தின்
நீர் பறவைகள் இரண்டும்
ஜீவன் பருகி
ஜூவித்துக் கிடக்கிறது..

வாழ்தலின் வாசங்கள்
இழந்து
சருகான மலரென
சாய்ந்து கிடக்கும்
அதிசயப் புறாக்கள்..

இதழ் அழைந்த
ஈரமின்னும்
காயவில்லை அன்பின்
இருதயத்தின்
ஓசை இன்னும் அடங்கவில்லை
காலம் கடந்தும்
காவியமாய் ஒவியமாய்
கண்களிலும் வாழும் இந்த
காதலர்கள் கடைசி மொழி
 
ஊன் பிரிந்து
உயிர் திறந்து
பிரிந்து கலந்த
ஆத்மாவில்
கலந்து வாழும் காதலிது


யாரங்கே ..
இவர்கள் கல்லறைகளில்
கருத்தொன்றை எழுதிச் செல்லுங்கள்
காதல்
உங்களோடு காணாமல்
போய்விட்டதென

Offline Dear COMRADE

ஈருடல் இரண்டரக் கலந்து
ஓருயிராய் துடிக்கும்
அன்பினில் நெய்யப்பட்ட
அழகிய உணர்வே காதல்...

சங்க நூல்களும்
சான்றோர் வரிக் கவிகளும்
தூரிகை செய்த
தூய காதலின் துரதிஷ்டம்
கயவர் கரங்களிலும்
காமுகர் தீராப் பசியினிலும்
மதமெனும் போதையிலும்
மனிதம் தாண்டிய சாதியிலும்
சாதி தாண்டிய கோத்திரத்திலும்
கோத்திரம் தாண்டிய குலத்திலும்
அந்தஸ்தின்  அதிகாரப் பிடியிலும்
கூவிக் கொண்டு திரியும்- இந்த
கோமாளிகள் கூட்டத்தின் நடுவே
கொலையுண்டு கிடக்கும்
சேராக்காதல் எண்ணிலடங்குமோ....

காதலில் புதிதாய் பிறந்து
நடைபழகிய மான் இரண்டின்
கால்கள் துண்டாகியதேனோ
காலனின் இரையாக...
வாசம் வீச மலர்ந்த பூக்களை
வேசம் போட்டு கிள்ளிப் பறித்து
தூக்கி எறிந்தது ஏனோ
துவண்டு வாடிடத் தானோ...

பாட்டாம்பூச்சிகள் இரண்டின்
சிறகுகள் கொய்யப்பட்டு
பற்றி எரியும் தீயின் உள்ளே
விட்டெறிந்தது ஏனோ
உடல் வெந்து கருகி
உயிர் பிரிந்திடத் தானோ...

சிலுவை சுமந்த இயேசுவாய்
மரணித்த பின்பும்
மன்னவள் தேகம் சுமந்து
காதலின் உதிர்த்த ஞாயிறு
காணக் கிடக்கும் - இன்னோர்
காவியமாய் இவர்கள்......