Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 302  (Read 2745 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 302

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Dear COMRADE

வாழ்வின் வடுக்கள்
வற்றாப் பெருக்காய் வலம் வர
தன்மானம் தட்டி எழுப்ப
தன்னம்பிக்கை கை கொடுக்க
தளரா மனம் கொண்டவனாய்
ஓடி ஓடி அயர்ந்த வேளை - இன்னும்
ஓரடி வைக்க முடியாமல் நான்
ஓய்வொன்று தருவாயோ
ஒரு மணித்துளியேனும் என்றேன் - அந்த
கடிகார முட்களை நோக்கி.....

"அண்ட சராசரங்களின்
நாடித்துடிப்பு நான்
நன்றோ தீதோ, வீணோ விரயமோ
நலனோ பலனோ வெற்றியோ தோல்வியோ
நின்று விட்டால் நீயும் கூட
நிலை மாறி நிர்க்கதியாவாய்" என
ஏளனமாய் எனை பார்த்து,

"காலக் கணிதன் நான்
கண்ணியம் மாறாதவன்
கடுகளவும் தாமதம் ஆகாதவன்
என் அசைவின் சுவட்டினில் தான்
நாட்களும் நகர்கின்றன
நாட்குறிப்பேடுகளும் மாறுகின்றன
பன்முகத் தன்மை கொண்டு
அ முதல் அஹ்(ஃ)வரை - இவ்
வையக அசைவு அனைத்தும்
காலம் என்ற போர்வைக்குள்
கட்டி ஆளும் அரசன் நான்,

அவசியத் தேவை நிமிர்த்தம்
அஜாக்கிரதையாக தவற விட்டு
கடந்து சென்ற தருணங்களை எண்ணி
கண்ணீர் மல்கும் கோடி ஜீவன்கள்
தக்க சமயம் வந்திருந்தால்
காரியம் கச்சிதம் ஆகியிருக்கும் என
எண்ணிப் புலம்புகையில்
பசுமரத்தாணி போல் - என் அருமை
பாரினில் படரக் காண்பீர்...

படைத்த கடவுளும் அறிவான்
பாசக் கயிர்கொண்ட காலனும் அறிவான்
என் வருகையை நிறுத்தவும் முடியாது
கடந்து சென்றால் எந்தக் கயிர் கொண்டும்
கட்டி இழுத்து மிளப் பெறவும் முடியாது

முன்னோக்கிய பார்வையில்
முயற்சி மேல் முயற்சி செய்
முடியும் என நம்பிக்கை கொள்
நில் என்று எவர் சொன்னாலும்
நிற்காமல் நீ சென்றால் - உரிய
சமயத்தில் வெற்றிக் கனி உன் கையில்"
என்றுரைக்க,

சோர்ந்த எனதுள்ளம் விறுகொண்டு எழ
துவண்ட கால்கள் புதுச்சக்தி பெற
நேரம் பொன்னானது
நீளட்டும் என் முயற்சிகள் என
உத்வேகமாய் விரைகின்றேன்........

« Last Edit: January 01, 2023, 10:11:11 PM by Dear COMRADE »

Offline Madhurangi

காலம் கரைகிறது..
நம் ஆயுளை தின்றுகொண்டே ஓடி விரைகின்றது...
காலத்தின் கால்களுக்கு தடுப்பும் இல்லை..
அவன்தன் மன்றத்தில் யாருக்கும் இரக்கம் காட்டுவதுமில்லை..

காலம் போன்ற கடுமையான ஆசானுமில்லை..
காயங்கள் ஆற உதவும் தோழமையான நண்பனுமில்லை..
பித்தனையும் உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைக்கும்..
அரசனையும் அதலபாதாளத்தில் தள்ளி வைக்கும்..

கால தேவனின் தேர் சக்கரத்தில் சிக்கி சுழல்வது
அச்சாணிகள் அல்ல..
நம் தலை எழுத்தை பிரம்மன் எழுதிய
எழுத்தாணிகளாகும்..
அது கவிதைகளாவதும்.. கிறுக்கல்களாவதும்..
நம் காலத்தை கையாளும் விதத்திலேயே..

காற்றிலே மறையும் காலம்தான்..
நம் விடாமுயற்சியினால் கடிவாளமிட்டு பழக்கலாம்..
தறிகெட்டோடும் எண்ண ஓட்டங்களை அடக்கலாம்..
கால தேவனையும் நம் கை வசப்படுத்தலாம்..
« Last Edit: January 02, 2023, 04:17:58 PM by Madhurangi »

Online TiNu



விழித்துக்கொள்.. தோழனே ..
எழுந்து நில்... தோழியே..
உன் காலமும் மறைகின்றது.. 
நம் காலமும் கரைகின்றது ...

நிரந்தரம் என நீ நினைக்கும் யாவுமே..
நிமிடத்தில் மாற்றிடும்.. காலமுமே..
காலத்தை கையாள தெரிந்தவனுமே..
விதியை வெல்லும் பாக்கியவான்..

கண்மூடி துயிலாதே.. தோழனே ..
கற்பனையில் திளைக்காதே.. தோழியே..
உன் காலமும் தேய்கின்றது.. 
நம் காலமும் மூழ்கின்றது..

காயங்களும் மறைந்து போகலாம்...
பதில்களும் கேள்விகளாக மாறலாம்..
குருத்தோலையும் உலர்ந்து சாயலாம்..
காலத்தின் திருவிளையாடலினாலே..

எண்ணத்தை தூயதாக்கு.. தோழனே ..
செயல்களை முடுக்கிவிடு.. தோழியே..
உன் காலமும் சரிகின்றது .. 
நம் காலமும் குறைகின்றது..
 
சூழும் கஷ்டங்களை  கண்டு..
அமைதியாகாதே..  முயற்சி செய்..
இதுவும் கடந்து போகுமென .
காலத்திற்காக காத்திருக்காதே..

மனதை உன்வசமாக்கு.. தோழனே ..
சிந்தனையை துரிதமாக்கு.. தோழியே..
உன் காலமும் பிரிகின்றது... 
நம் காலமும் ஓடுகின்றது...

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
இருக்கும் நிமிடங்கள்.. சொற்பமே..
காலத்தினை உன் தேர்களாக்கி.
கடமைகளை முடித்திடுவாய் சீருடனே..

காலம் நம்மை காவுவாங்கும் காலன் அல்ல..
காலம் நம்மை செதுக்கும் சிற்பியாவான்.
காலம் நம்மை வழிநடத்தும் ஆசான் ஆவான்.
காலம் நம்மை வடிவமைக்கும் விஸ்வகர்மா..

« Last Edit: January 03, 2023, 12:34:34 PM by TiNu »

Offline HiNi


சிறு வயதில் நண்பர்களுடன் விளையாடும் நேரம்
பள்ளி பருவத்தில் விடைபெறும்  நேரம்
வெள்ளி கிழமையில் விடுமுறை வரும் நேரம்
இளமை பருவத்தில் காதல் வயப்படும் நேரம்
சற்று வளர்ந்ததும் கடமையை இன்பமாய் சுமக்கும் நேரம்

வெற்றிக்கு வித்திடும் முயர்ச்சிகான நேரம்
விடலை பருவத்தில் திருமணம் கூடும் நேரம்
ஒரு தாய்க்கு குழந்தை பெற்றெடுக்கும் நேரம்
 அன்பின் பிரிவை வலிகளுடன் கடக்கும் நேரம்
வேலை நிமித்தமாக இடம் மாற்றுவோருக்கு தாய் மண்ணின் நினைவுகளுக்கான நேரம்
பல மனிதருக்கும் பற்பல சூழ்நிலைக்கும் மாறுபடும் வர்ணமாகிய இந்த நொடி நேரம் அடங்கிய
கடிகார வாழ்கையின் பயணம்!!!...

நேரம் வரும் என்று காத்திருக்காமல்
காலில் வெண்ணிர் ஊற்றியது போல் அயராது உழைக்கும் கடிகாரம்,
நம் மன கடிகாரம் உடன் இணைந்து
ஓடும் நிமிடங்களை அழகாய் ரசிப்போம்!!!....


Offline MeoW

🕛நேரம்🕛
கடிகாரத்தைப் பார்த்தேன்..
எனக்குள் ஒரு பயம் ஏற்பட்டது மேலும்
நேரம் போய்விடுமோ என்ற பயம்...
நான் எப்போதும் சுதந்திரமாக
 இருப்பதையே விரும்புகிறேன்...

ஒரு நாள் நான் கிளம்புவேன்...
 நான் அடையாத உடைந்த கனவுகள் அனைத்தையும் இங்கேயே விட்டு விட்டு... சுதந்திரமாக ,நிம்மதியாக ...

நான் வெளியேற விரும்புகிறேன்
மணலில் இதோ எனது கால் தடம்..
நான் திட்டமிட்ட அனைத்தையும்
செய்வேன் என்பதை என்னவர்கள் அறிவார்கள்...

என்னுடைய மிகப்பெரிய பயம் எனக்குத் தெரியும்...
நேரமில்லாமல் போய்விடுமாயின்
அது எனது பலவீனமாய் ஆகிவிடும் அன்றோ?

காலம் சொல்கிறது, "என்னைக் கையாளக் கற்றுக்கொள், இல்லையெனில்
நான் பறந்துவிடுவேன் என்று..

பிறப்பு முதல் இறப்பு வரை
 எல்லா இடங்களிலும் காலம்
தன் கைவண்ணத்தை காட்டுகிறது...
பிறக்கும் காலம் இறக்கவே இல்லை,
அது மெல்லிய காற்றில் பறந்து பறந்து
 நம்மை வெறுமையாக்குகிறது...
நான் வெறுமை ஆகுவனோ?
சிறகு கொண்டு பறப்பேனா?


"நேரமே வாழ்க்கை. இது மீளமுடியாதது மற்றும் ஈடுசெய்ய முடியாதது. உங்கள் நேரத்தை வீணாக்குவது உங்கள் வாழ்க்கையை வீணாக்குவதாகும், ஆனால் உங்கள் நேரத்தை திட்டமிட்டு செய்வது உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கும்....

naughty Princess meow😺
« Last Edit: January 06, 2023, 01:18:30 AM by MeoW »

Offline MoGiNi

காலச் சுவடுகளில்
கரைந்துகொண்டிருக்கிறது ஆயுள்...
முடிந்துவிடப் போகும் ஒன்றுக்காகவா
இல்லை தொடங்கிவிடப் போகும்
இன்னொன்றுக்காகவா..
எதற்கான முடிவோ எனில்
எதுவும் முடிந்ததற்கான
எச்சங்களோ தடயங்களோ இல்லை...
ஆரம்பத்தின்
ஆரவாரங்களுக்காகவே
காத்திருக்கிற
மனதுக்கும்
கடிகாரத்துக்கும் தெரியவில்லை
ஆயுளின் ஒர் ஆண்டை
அது அள்ளித் தின்றகதை...

எதையும் சாதித்ததாய் இல்லை
இருந்தும்
சில அன்பானவர்களின்
ஒர் வாழ்த்துக்காக
காத்திருக்கிறது
கண்களோடு
செவியும் மனதும்...
இந்த வருடமாவது.. எனும்
ஏக்கத்தோடுதான்
கடந்த வருடம்
பலருக்கு கடந்து கொண்டிருக்கும்
அதில்
நீ அவன் அவள் மட்டுமல்ல
யாவருள்ளும்
நானும் ஒருத்தியாய்..

வருடத்தில்
இறுதியில் இணையும்
இந்த முட்களுக்கான
காத்திருப்புதான்
காலத்தின்
கழுத்தறுப்பென
உணராத வரையில்
இது ஓர்
தவிர்க்கமுடியாத
பண்டிகைதான்...

Offline VenMaThI


நேரம் பொன் போன்றது
இல்லை இல்லை கண் போன்றது


காத்திருக்கும் பொழுது மெதுவாக நகரும்
தாமதம் என்ற பொழுதோ வேகமாக நகரும்
சோகத்தில் மூழ்கினால் நகராமல் கொள்ளும்
மகிழ்ச்சியிலோ சட்டென முடிந்துவிடும்
நேரம் நம் மனதை பொறுத்தது....

கடிகாரமே
கண்ணாடி கூட்டிற்குள் ஒரு காதல் ஜோடி
ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடி
ஒரு போதும் அயராமல் வாழ்கை கடக்கின்றது...


காலம் காலமாய் ஓடும் உனக்கு
கால்கள் வலிப்பதே இல்லையா?
முட்கள் இருந்தும் குத்தவில்லையா ?
முடியாமல் நின்றாலும்
இருமுறை சரியாக இருக்கிறாயே?
சுற்றி சுற்றி ஓயாமல் சுழன்று நீ உழைக்க
தேய்வது என்னவோ எங்கள்
நாட்களும் வாரமும் ஆண்டுகளும் தான்
அயராமல் ஓடும் நீ
சோம்பேறிங்களுக்கு ஒரு பாடம்..


யாருக்காகவும் நிற்காமல்
யார் சொல்வதும் கேட்காமல்
உன் வேலையை செய்து
ஓய்வில்லாமல் உழைப்பதால் தான் எங்கும் உயர்ந்து நிற்கிறாய் நீ...

எங்களின் ஓய்வு நேரம் காட்டும் நீ
ஒரு நாளும் ஓய்வெடுப்பதில்லை
இரவு பகல் பாராமல் உழைத்து
நேரத்தின் அருமையும் உழைப்பின் பெருமையும் உணர்த்துகிறாய்..

மனிதனே
தொலைந்த நேரத்தை தேடி
இருக்கும் நேரத்தை தொலைக்காதே ..

கடிகார முள்ளை வாழ்க்கை என நினைத்தால் நீ வாழலாம்
வெறும் முள் என நினைத்தால் வீழலாம்
முள்ளா வாழ்க்கையா??
உன் வாழ்க்கை உன் எண்ணத்தில்...

அதிரஷ்டம் என்பது எப்பொழுதும் அமையாது
உதவி என்பது எல்லா நாளும் கிடைக்காது
தன்னம்பிக்கை என்பதே எந்நேரமும் உடனிருக்கும்
துணிந்து செல் உழைப்பை நம்பு , உயரும் உன் வாழ்க்கை .
உனக்கும் நேரம் வரும் என்றிருப்பதை விட
இருக்கும் நேரத்தை உனதாக்கு...

அடுத்தவரின் நேரத்தை காட்டும் கடிகாரம் போல்
அனைவருக்கும் எடுத்துக்காட்டாய்
உன் வாழ்க்கையை வாழ்....

« Last Edit: January 03, 2023, 12:22:24 PM by VenMaThI »

Offline Ishaa

காலமது ஓடுவது தெரியாமல்
நாம் ஓடுகிறோம் இவ்வுலகில்
வாழ்க்கையின் ஒரு தருணத்தில்
நாம் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்த்தால்
நமக்காக வாழ மறந்து இருப்பதை உணர்வோம்

நாம் வாழ்வின் பாதி நேரத்தை குடும்பம் மற்றும்
 நண்பர்களுக்காக செலவிடுகிறோம்
நம் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும்
 என்ற எண்ணத்தில் நாம் ஓடுகிறோம்
நமக்கான நல்ல எதிர்காலத்தையும் உருவாக்குகிறோம்

இப்பயணத்தில் நாம் நிகழ்காலத்தை
அனுபவிக்க  தவறுகிறோம்

நீங்களே உங்களுக்காக சிந்திக்க தவறினால்
உங்களை நினைப்பர் யார் ?
நம் பெற்றோர் இருக்கும் காலம்வரை
அவர்கள் நம்மை பற்றி நினைப்பார்கள்
அதன் பின்?

உங்களை பற்றி நினைக்க ஒரு ஜீவன் அருகில் இருக்கிறாரா ?
அப்படி இருப்பின் மிக்க மகிழ்ச்சி.
அவர்களை எதற்காகவும் மறந்துவிடாதீர்கள்.
பொக்கிஷம் போல் அவர்களுடனானஉறவை
பாதுகாப்பாக வைத்திருங்கள்

அப்படி ஒரு நண்பர் இல்லை எனில்
கவலை கொள்ளாதீர்கள்
உங்களுக்காக இருக்கும்
உங்களை எண்ணிக்கொள்ளுங்கள்

உங்களைவிட வலிமையானவர்கள் யாரும் இல்லை
என்று எண்ணிக்கொள்ளுங்கள்

வாழ்தல் என்பது ஒரு கலை
வெகு சிலருக்கு அது ஓர் ஆனந்த அலை...

உங்கள் நேரத்தை வீணடிக்காமல்
 உங்களுக்காக வாழுங்கள்.
நீங்கள்தான் உங்கள் நண்பன்!
நம்முள் இருக்கும் ஜீவனில் எல்லாம் இருக்கிறது

உங்கள் மீதான நம்பிக்கையை
நீங்கள் தூக்கி சுமந்தால்,
நீங்கள் கீழே விழும்பொழுது
நீங்கள் தூக்கி சுமந்த நம்பிக்கை
உங்களை தூக்கி சுமக்கும்
 
உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்
இனி வாழும் ஒவ்வொரு மணித்துளியும்
தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்
சிரித்து மகிழ்ந்து வாழ்ந்திடுங்கள்

நன்றி

Offline KaathalaN

 
         🙏குருவே சரணம்🙏


   🕉காலமும்  நானே  கடவுளும் நானே 🕉
       
           "காலம் என்பது ஏதடா ..  காயம் என்பது ஏதடா ...  காலமும் உன் கையிலே.. கடவுள் இருப்பது உன்னிலே"
                 
                   இதை இன்றாவது புரிந்து கொள்  மானிடா..


                காலம் என்பது நம்மை கட்டி வைக்கும் கயிறோ... நம்மை சிக்க வைக்கும் வலையோ.. இல்லை  அது நம்மை அழகிய சிலையாக செதுக்கும் சிற்பி...
           
                காலம் என்பது உண்மையில் நம்மை நெறிப்படுத்தும் ஆசான்...

           ஆம் . . காலம் என்ற ஒன்று இல்லை என்றால் இங்கு எதுவும் சரியாக நடக்காது..

         காலம் இல்லை என்றால் நான் யார்? நான் ஏன் பிறந்தேன் இங்கு பிறந்தேன்? என்கிற மிகப்பெரிய கேள்வி❓ அனைவரின் மனதிலும் எழமலே போய் விடும்...


            யாரோ ஒருவரின் காலம் முடியும் போது தான் நமக்கு நாம் யார் என்ற கேள்வியே தோன்றும்...   

        அப்போது தான் நாம் யார்? நாம் ஏன் பிறந்திருக்கின்றோம் என்று உணர முடியும்...

         காலம் இல்லை என்றால் நாம் பிறந்ததின் உண்மை தன்மை நமக்கு புரியாமல் போய் விடும்..இந்த உண்மையை புரிய வைப்பதால் தான் காலம் நம்மை வழிநடத்தும் ஆசான் ஆகிறது..

          காலம் என்பது அனைவரும் ஒரே மாதிரியாக தான் செல்லும்.. ஆனால் அது அனைவருக்கும் புரிவதில்லை...

          காரணம் காலம் என்றால் என்ன என்று யாரும் புரிந்து கொள்ள வில்லை..   

        காலம் என்பது இன்பமாக அமைவதும் துன்பமாக அமைவதும் அவரவர் மனநிலையை பொறுத்து இருக்கும்...

        இன்பமான காலம் வேண்டும் என்றால் நேர்மறையான சிந்தனைகள்  அவசியம் இருக்க வேண்டும்...

           ஏனெனில் அதில் தான் கடவுளை உணர முடியும்....  நாம் இங்கு பிறந்ததின் உண்மை காரணம் கடவுளும் நாமும் ஒன்று என உணர்வதற்கே.... வேறு எந்த ஒரு காரணத்திற்காகவு நாம் பிறக்க வில்லை..

        இது புரிந்தால்  காலத்தை பற்றிய பயம் கவலையோ இல்லை... காலம் நம் காலடியில் கிடைக்கும்....
     
     கடவுளும் நானும் ஒன்று என்று உணர்ந்த பின்...

            "காலமும் நானே  அந்த காலத்தின் கணமும் நானே ;காலனும் நானே அந்த காலனை படைத்த கடவுளும் நானே" 

           💖அன்பே சிவம்💖

       💞எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 💞
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

Offline Mechanic

தமிழர் திருநாள் இது தமிழர்களின்
வாழ்வை வளமாக்கும் திருநாள்...
உழைக்கும் உழவர்களின் காளப்பை
போக்கி களிப்பில் ஆழ்த்தும்
உற்சாகப்படுத்தும் திருநாள்..
உறங்கும் பெண்களை
அதிகாலையே எழுந்து கோலம்
பொடவைக்கும்
கோலாகலமான திருநாள் ... மிரட்டி
வரும் காளைகளை விரட்டி அடக்கும்
வீர திருநாள்... பழைய எண்ணங்களை
அவிழ்ந்து புதிய சிந்தனைகளை
புகுத்தும் புதுமையான திருநாள்..
வாழையும் கரும்பும்   வாசலில் சிரிக்கும்
காலையில் கிழக்கில் கதிரவன் உதிக்கும்
பாலுடன் பொங்கல் பானையில் கொதிக்கும்
நம்பசி போக்கும் உணவில் உள்ளவராம்
உழவர்களை  மனதில் நினைப்போம்
உறவுகளையும் அன்போடு அனைப்போம்
தித்திக்கும் திருநாள் என் உடன்பிறவா
தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய
பொங்கல் வாழ்ததுக்கள்