Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 303  (Read 2511 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 303

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Sun FloweR

எந்தன் களிப்புகளின்
நிறைவு நாள்..
எந்தன் ஆனந்தத்தின்
இறுதி நாள்..
எந்தன் சந்தோஷங்களின்
முடிவுரை நாள்...
உந்தன் கண்ணீரின்
துவக்க நாள்..

எப்படி விட்டுச் செல்ல முடிந்தது என்னால்..?
உந்தன் கன்னம் வருடி,
கைகள் பற்றி எப்போதும்
துணை வருவேன் என்று
சங்கல்பம் எடுத்தேனே?
அத்தனையும் காற்றில் பறந்து மறையும் பறவை ஆனதே...!

நான் இல்லாமல் எங்ஙனம்
கழியும் உன் பொழுதுகள்?
நான் இல்லாமல் எப்படி
கரையும் உன் காலங்கள்?
உனக்கு மனிதர்களைத் தெரியாது,
அவர்கள் நிறங்களும் புரியாது?
உலகம் அறியா பாலகி நீ..
உன்னை விட்டு சென்ற பாவி நான்...

அன்பே, உடலை விட்டுத் தான் போயிருக்கிறது என் உயிர்..
உன்னை விட்டு போகவில்லை
என் ஆன்மா..
அது எப்போதும் உன்னைச் சுற்றியே
வலம் வரும்.. நலம் தரும்..

விதியின் பிடியால் நான் மாண்டாலும், வாழும் முடிவில் நீ உறுதியாய் இரு..
தன்னம்பிக்கையில் வைரமாய் இரு..

தன்னிரக்கம் பாராட்டி தன்னுயிர் நீக்கும் முடிவிற்கு எக்காலமும் போய்விட கருதி விடாதே...ஏனெனில் உன்னுள் வாழ்வதும் என் உயிர்தான்..
உன்னுயிரும் என்னுயிர் தான்..

Offline அனோத்

இரவும் பொழுதும் இடையிடையே சப்தம் .......
இடியும் மழையும் இடைவிடாத யுத்தம் ........
இதழ்கள் சிவக்க கொடுத்த முத்தம் .........
இருவர் கனவுகள் சுமந்த பித்தம் ......

இனியோர் வாழ்வு கொடுத்த பந்தம்....
இனியொரு நாளும் இணையா துக்கம்..........
இனிதாய் துடித்த இருதயம் மொத்தம்..........
இனியவளுன் இணைப்புகள்
இனி சொற்பம்.......

இமைபோல் வந்தாய் நித்தம்
இமைக்கின்ற பொழுதுகளில்
ஆகிறாய் பெண்  சிற்பம் ......

இடைவிடா சண்டைகளின்  விம்பம் .......
நமக்குள் ஏனோ பெருத்த துன்பம்.......
இனியொரு பொறுமை மீளாத்  துயரம்......

இனியவள் சென்றுவிட்டாயோ வெகு தூரம் ?....

செந்நிறக்  குருதி உறையுமுன் உறவாய் போன
உன்னிடத்தில் ,

செதுக்கி வைத்த காதல் கனவுகள்
இனியெப்போதும் காற்றோடு கலக்கும்
கவிதைகள்............

விதியினை மாற்றிட வழியேது ?
உனை விட்டுப் பிரிந்திட  நான் படும் பாடு ..........
நிலையான அன்பைக்  கேட்டேன்
பிழையான முடிவை எடுத்தாய் .........

நீங்காத உறவைக் கேட்டேன்
தாங்காத வலிகள் கொடுத்தாய்...........

கண்ணீரும் கதறலும்
தோற்றுப் போகும் உன்னிடத்தில்
நான் வாழ்வதை விட ............

கனவுகளும் ஆசைகளும் அலைந்திடும்
காற்றோடு  கலந்தே விடுகிறேன்.........

மறுபடியும் உன் சுவாசத்தில் குடி பெயர
மீண்டும் பிறந்தே வருகிறேன் ..........
« Last Edit: January 22, 2023, 06:49:30 PM by அனோத் »

Offline Mechanic


இதயத்தில் அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம்
உன் அன்பு தான் என் இதயம் என்றால்
எப்படி உன்னை மறக்க முடியும்
ஒவ்வொரு நாளும் நொடியும்
உனக்காகவே  பிறக்கிறது
உன்னை நினைக்காமல் 
எந்த நாளும் எந்த நொடியும் கடந்து போகாது
ஆனால் நீ மட்டும் எங்கே செல்கிறாய்?
காலங்கள் காத்துருப்பது  இல்லை
ஆனால்  நான்
உனக்காகவே காத்து இருப்பேன்  இயற்க்கையோடு
 
காதலை போல்
மிகச் சிறந்த பரிசும் இல்லை
மிக மோசமான செயலும் இல்லை
எத்தனை சண்டை வந்தாலும் 
எவ்வளுதான் அழுதாலும்
கடைசி வரை பிரியாமல் இருப்பது தான்
உண்மையான காதல்
என்றோ சந்திதுப்போன சில காட்சிகளை
மனது இன்றைக்கும் சுவாசிக்குமானால் 
அது நாம் நேசித்த இந்த நேரமாய் தான்
இருக்கமுடியும்...


« Last Edit: January 23, 2023, 01:12:38 AM by Mechanic »

Offline Hirish

இக் கவி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட என் ராதைக்கு…

என் உள்ளத்தை வருடிய புன்னகையே...
கற்பனையிலும்  படைக்க முடியா கன்னி அவள்..
என் விழிகளில் ஊடுருவி
காதலை தூண்டிய பொன்நிலா அவள்...
பூவிதழ் போன்ற புன்னகையின் இருப்பிடம் அவள்...

 
நீ தோன்றியதால் தரணியே  சுத்துகிறது உனக்காக..
உன் முகம் பார்க்க  தென்றலும் ஓயாது வீசுகிறது...

உன்  பார்வை  பட்டதும்  என்
இதயம்  துடிக்காமல்  இயங்குகிறது...
உன்னை  பார்த்த  நாள்  முதல்
கனவுகளும்  அழகாகிறது...
வெண்மேகங்கள் பின் தொடர்வதை பார்க்கிறேன்..
தனிமையில் தவிக்கிறேன் ...

தங்கத் தேரில் வரும் வெண்கல சிலையே!
உன் அழகில் மயங்காத மானிடர் எவரோ?
உன்னை படைத்த  பூரிப்பில்
பூமகளே பெருமையில் மிதக்கிறாள்...
 
உன்னைப்பார்த்த கண பொழுதில்
நிலை தடுமாறினேன்...
உன் விழிகள் விண்மீன்களை விட
அழகாய் பிரகாசித்ததால்
என் சிந்தனையோ சீர்குலைந்தது..

அன்பே ஏனிந்த சோகம்?
ஏனிந்த துயரம்? காரணத்தைக் கூறிவிட்டால் கரைத்துவிட
முயன்றிடுவேன்..
முதுகு காட்டி நிற்கிறாய்..
முந்தி செல்ல இயலவில்லை
முன்பு வந்து நிற்கவும் தைரியமில்லை...

ஆகையால் பெண்ணே...
எந்தன் சிந்தை மறந்து
நினைவு குலைந்து
காற்றாய் உன்னைத் தொடர்கிறேன்..
காரணம் சொல்லும் வரை
உன்னை பின் தொடர்வதே
என் பிறப்பின் பயனாய் உணர்கிறேன்... அதனால்
தொடர்கிறேன்... இன்னும் தொடர்வேன் என் ராதையே
என் இறுதி மூச்சு வரை....HIRISH...
« Last Edit: January 23, 2023, 01:47:16 PM by Hirish »

Offline VenMaThI

Quote

காலனின் சாபம்
காதலின் பாவம்

ஒன்றாய் கூடி இன்பமாய்
காலம் பல கடந்து
வாழ்வில் துணையாய்
என் இணையாய்
என்றும் இருப்பேன் என்றாய்...
நீ இருந்த இடம்
இன்றும் உனதாய்
என்றும் என்னுடன் இருப்பாய்
காற்றாய் என் சுவாசமாய்
என்னுடனும் என்னுள்ளும்...

இரவு பகலாய் உன் இழப்பின் வலியுடன்
நீ வேண்டும் என்ற வாழ்வின்
வேண்டுதலுடன்
வழி மேல் விழி வைத்து அல்ல
விதி மேல் பழி வைத்து
உன்னவளாய் காத்திருக்கிறேன்..

காதல் கவிதை வடிக்க நினைத்தேன்
கண்ணீர் கவிதை படைக்க வைத்தாய்
காதலோ கண்ணீரோ
என் கவிதையின் கருவும் நீ
அதன் உயிரும் நீ

கனவிலும் நீ
நினைவிலும் நீ
காற்றில் நீ
கவிதையில் நீ
எங்கும் நிறைந்து
என்னுடன் இருக்கும் நீ
ஒருமுறையாவது நேரில் வா
ஒன்றாய் வாழ வழி செய்வோம்
இல்லை விதி வென்றால்
இருவரும் மாண்டு விதியை வெல்வோம்...

காதலின் சாபமாய்....
காலனின் பாவமாய்.....

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️



Offline TiNu

பெண்ணே நீ வாழ்க...
========================


பெண்ணே!
உன்நிலை மறந்து எங்கே நோக்குகிறாய்.
உன் பின்னே நிற்பவன் எவன்? அவன் ?

பெண்ணே!
சுற்றி நடப்பது எதுவென அறியாது...இப்படி தனியே...
உணர்ச்சிகள் இல்லா.. சிலையென நிற்காதே.... 

பெண்ணே!
அருகில் இருப்பவர் குணம் அறிதல் அவசியமே..
தனித்தனியே தரணியை கடப்பது எளிதல்லவே..

பெண்னே!
இந்திரனுக்கு உடலெங்கும் கணங்களாமே..
நமக்கும் அப்படி ஓர் பாக்கியம் இருந்தால் நலமே..

பெண்ணே!
மரம் செடி கொடி காற்று மழை நீர் வெப்பம் குளிர் என
உலகில் எல்லாம் இருக்கின்றது...  அதில் நீ யார்?.. 

பெண்ணே!
பிறந்தோம் இச்ஜகத்தினிலே.. வாழ்ந்தோம்  வையகத்திலே...
பின் மடிந்தோம் இப்பூமியிலே..  என்று இருக்காதே..

பெண்ணே!
கழுகு குணத்தில் ஒருவர்.. காகம் தன்மையில் ஒருவர்..
வல்லூறு அம்சத்திலும் ஒருவன்.. உனை நெருங்கலாமே..

பெண்ணே!
தறிகெட்டு பாய்ந்து வரும்...  நன்மைகளும் தீமைகளுமே .. 
நம் வாழ்வெனும் வண்டியில்.. பூட்டிய இரட்டை குதிரைகள்..

பெண்ணே!
அக்குதிரைகள் எங்கனம் இருப்பினும்..  நீயே அன்பு சாரதி....
அறிவெனும் கடிவாளம் பூட்டி.. உனதாக்கு இவ்வுலகையே..

பெண்ணே!
விழித்து கொள்.. உன் அருகில் இருப்பவர் குணமறிந்து
கவனத்துடன் கடந்து செல்வாய் உன் வாழ்வினையுமே..

 பெண்ணே!
விழிப்புணர்வுடனும் பழகு.. குணமறிந்து கொண்டாடு....
எச்சரிக்கையுடன் எதிர்கொள்.. பாதுகாப்புடனே பயணி..

பெண்ணே!
கடவுளின் ஆசியில் கிடைத்த.. பெண் எனும் கூட்டில்
பொறுமையுடனும்.. பெருமையுடனும்.. வாழ்வாயாக!!!

Offline MoGiNi

அன்பே...
கனவுகளின்
கூட்டில் நான் வளர்த்த
காதல் பறவை நீ
அதில் என் கணவனும் நீதான்
கயவனும் நீதான்...

தீரா காதலின் தேடல்கள்
எப்பொழுதும் முடிவிலிதான்..

வாழ்நாளின் துகள் அனைத்தும் கொண்டு
ஒரு ஒவியமாய்
இல்லை ஒருயிராய்
இருதயத்தில் சிறைவைத்திருந்தேன்..

யாருமற்ற மனதேசத்தின்
பேரரசனாக
நீ மட்டும் ஆட்சிசெய்தாய்
கடந்து சென்ற என் காலங்களின்
காந்தப் புலனாக
உன்னை மட்டும் தான்
உயிர் சுற்றி கிடந்தது, கிடக்கின்றது...

உன் இறக்கைகளை
அன்பெனும் விலங்கிட்டு
வதைப்பதாக சாடுகிறாய்..
உன் இறகுகளின்
மயிர்த்துளைகளில்தான்
என் இருதயம்
சவாசித்துக் கிடப்பதை
அறியாமல்  ....

கடந்து செல்
உன்னை தொட்ட
காற்றைகூட காலமுழுதும்
காதலிப்பேன்...

உன் விடுதலையை
நிச்சயப் படுத்திக்கொ(ல்)ள்
தனிமைகளோடு
என் பயணங்கள் சங்கமிக்கட்டும்..

திரும்பிவிடாதிருக்க
போராடுவேன்
எனக்காக அல்ல
அதுவும் உனக்காக
உன் இறக்கைகளுக்கும்
என் இழப்புகழுக்குமான பயணம்...

ஆரம்பம்......

Offline KS Saravanan

உன்னுள் நான்..!

எனதன்பே கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்களில் ஒட்டிக்கொண்டாய்..!

நொடிப்பொழுதில் மனதையும் 
கொள்ளையடித்தாய்..!

உன் உருவம் மறைந்திடுமென
கண்துயில மறுத்தது மீறினால்
கனவில் கண்டு மகிழ்ந்தது..!

என்னவென்று தெரியாமலே
ஆசை கொண்டேன் உன் மீது
அன்பு கொண்டு அதை உணர்ந்தேன்

என் பெயரும் இனிக்கிறது அன்பே
நீ அழைக்கும்போதெல்லாம்..!

எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தின்
பெயர்தான் காதலா..?

காலங்கள் கடந்தன..!

காதலின் பரிமாற்றம் நம்மை
சொர்க்கத்திற்கு ஈடாக எண்ணவைத்தது..!

அனால் அன்பே விதியின் விளையாட்டில்
நாம் என்ன விதிவிலக்கா..?

மண்ணுலகில் சேர முடியாமல்
நான் மண்ணோடு மண்ணானேன்..!!

உன்னோடு சேர்ந்திருக்கவில்லை என்பதற்காக
நம் காதல் தோற்றுப்போய் விடவில்லை..
தோற்றது காதலுமில்லை..!
நாம் சேர்வது காதலென்றால் காதல்
அது எப்பொழுதோ அழிந்திருக்கும்..!

அன்பே இனியேனும் உனது
மௌனங்கள் கலையட்டும்..!

பேசிய வார்த்தைகள் இன்னும்
எனக்கு தேனாய் ஒலிக்க, அன்பே
ஒரு முறை என் பெயரை சொல்வாயா..?

அன்பே மௌனங்கள் உடைந்து
வார்த்தைகள் பிறக்கட்டும்..!

உன் மௌனம் உடைந்தால் தான்
எனக்கு மோட்சமும் கிடைக்கும்..!

புரிந்து கொள் என் உயிரே..
பிரிந்து சென்றது நானல்ல..!
உன்னுள் நான்..!