Author Topic: ❤ சிந்தனைக்காக சில வரிகள் ❤  (Read 920 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 220
  • Total likes: 526
  • Total likes: 526
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
கற்பனைகளையும், கனவுகளையும் சுமந்தவை கவிதைகள்.

அளவில் அடங்கா அன்புடன், உணர்வுகளை  உறவுகளாய் இணைப்பது  நட்பு.

அளவு கடந்த நட்பையும், ஆழ்ந்த நம்பிக்கையும் உள்ளடக்கியது காதல்..

எதிர்பார்ப்பில்லா அன்பயும், அரவணைப்பையும் கொண்டது  தாய்மை.

ஆசைகளையும், ஆபத்துக்களையும் உள்ளடக்கியது உலகம்.

அன்புகொண்ட இதயங்களையும், அளவில்லா நம்பிக்கையையும் உள்ளடிக்கியது மனித வாழ்க்கை.

படைத்த இறைவன்,  இவ்வுலகை ஆசைகளையும்,  அலங்காரங்களையும் கொண்டே உருவகித்தான், இதன் நோக்கம் உலக ஆசையில் மூழ்கி போவோர் யார் என்றும், உணர்வுகளை கட்டுப்படுத்தி  உண்மையாளர்ககவும், உண்மையின் பக்கம் விரைவோர் யார் என்பதை சோதிப்பதற்காகவே அன்றி வேறில்லை.....

படைத்தவன் கொடுப்பதை தடுப்பவனும் இல்லை, படைத்தவன் தடுப்பதை கொடுப்பவனும் இல்லை......

❤ MN-AARONN ❤.