Author Topic: ஒரு ஆணிற்கு "சாராயம்"தான் வாழ்க்கை எனில் அவன் மூன்று விசியங்களுக்கு.....  (Read 1579 times)

Online MysteRy

ஒரு ஆணிற்கு "சாராயம்"தான் வாழ்க்கை எனில் அவன் மூன்று விசியங்களுக்கு முக்கியமில்லாதவனாக மாறிவிடுகிறான்!




1, அன்பான மனைவியை ரசிக்க தெரியாத குருடனாக?

2, அழகான குழந்தைகளின்
பாசத்தை உணர முடியாத முரடனாக!

3, இச்சமுகத்தில் வாழ தகுதியற்ற மனிதனாக!

மதுவிற்கு ஏன் "குடி" என்று பெயர் வந்தது தெரியுமா?
மது மட்டுமே வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும். சேர்த்து குடிப்பதால்...

*மனைவியை ரசிக்க தெரியாத குருடனாக...

போதையின் மயக்கத்தில், தன்னை நம்பி வாழ வந்தவளை, எந்தவொரு உறுதி மொழி ஏற்று கரம் பிடித்தானோ அதை கைக்கழுவி விட்டு, தன்னுடைய சுகத்திற்காக மட்டுமே வாழ தொடங்கிவிடுகிறான், அதன் விளைவாய் (சில பெண்கள்) கட்டியவனை வெறுத்து ஒதுக்கி வேறொருவரின் உதவியை நாடுகிறார்கள், இங்கு அடுத்தவன் மனைவிக்கு ஆசைபடாத ராமன் இன்னும் பிறக்கவில்லை... இறுதியில் தன் மனைவிக்கு மனசு மற்றும் உடல் சுகத்தை கொடுக்க முடியாத ஏமாளி கணவனாகிவிடுகிறான்,

*அழகான குழந்தைகளின் பாசத்தை உணர முடியாத முரடனாக...

மதுவிற்கு அடிமையானவன் தன் குழந்தைகளிடம் பேசுவதில்லை, குழந்தைகளிடம் பேசி, அவர்கள் பேசுவதை கேட்டால்தான் இச்சமூகத்தில் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது புரியவரும், இல்லையேல் "குடிகாரன் பெத்த பிள்ளைதானே" என்று ஏசக்கூடும்,

*இச்சமூகத்தில் வாழ தகுதியற்ற மனிதனாக...

இறுதியில் ஒழுக்கம் கெட்டு அவன் மதிப்பை அவன் இழந்துவிடுகிறான், வாழவேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, வீட்டிலும் வெளியிலும் மரியாதை இல்லாமல், அவன் பேச்சை யாரும் கேட்பதுமில்லை, மதிப்பதுமில்லை,

மது அவன் ‌உழைப்பையும், உயிரையும், சிறுக சிறுக குடிக்கிறது... ஆனால்? தண்டனையோ... அவன் மனைவியை யாசியாக்கும், சிலரை வேசியாக்கும், அல்லது விதவையாக்கும்... இவனுக்கு கிடைக்கும் மரியாதைதான் இவன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்,

குடி தான் உன் வாழ்க்கை என்றால்?

உனக்கு திருமணம் எதற்க்கு?
மனைவி எதற்க்கு?
குழந்தைகள் எதற்க்கு?

உன்னை திருத்தி நல்வழிப்படுத்தி... எல்லாவற்றையும் சகித்து உன்னுடன் வாழவேண்டும் என்ற கட்டாயத்தில் உன் குடும்பம் இருக்கிறது, தற்போதைய காலகட்டத்தில் இப்படியொரு குடும்பம் கிடைப்பது மிகமிக அரிது...

காரணம் இச்சமூகம்...

அவர்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீற்கும் எதிர் வினை உண்டு...

இறுதியில் நீ அவர்களிடமே சென்று தஞ்சமடைவாய்...
காலம் கண்டிப்பாக அதை உனக்கு கொடுக்கும் ...