Author Topic: காதல் புலவர் வள்ளுவர்  (Read 2391 times)

Offline Madhurangi

காதல் புலவர் வள்ளுவர்

நம்ம எல்லாருக்கும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னாடி நம்ம தமிழ் நாட்டுல பிறந்து வளர்ந்த தமிழ் வளர்த்த பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவர் எழுதின  ஈரடி வெண்பா திருக்குறள் பத்தி தெரியும்.

உலக பொதுமறைனு எல்லாராலயும் கொண்டாடப்படற திருக்குறள் தொடாத
தலைப்பே கிடையாது.

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துபால் எனும் மூன்று பால்களும் 133 அதிகாரங்களும் ஒரு அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் அடங்கலாக 1330 குறள்களை உள்ளடக்கியது திருக்குறள் ஆகும்

இந்த 1330 குரல்கள்ல நான் ரசித்த
காதல்பற்றிய குறள்களை என்னோட பாணில பொருளுரையோட இங்க பதிவு
செய்ய ஆசை படுறேன்.

Offline Madhurangi

Re: காதல் புலவர் வள்ளுவர்
« Reply #1 on: June 16, 2023, 01:30:53 PM »





குறள்: இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

விளக்கம் : இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்

Simply - நோயும் நோய்க்குமான மருந்தாக இப்படி பார்த்து தொலைக்கிறாளே 🤷‍♀️

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : குறிப்பறிதல்

குறள் எண் : 1091

« Last Edit: June 16, 2023, 01:36:49 PM by Madhurangi »

Offline Madhurangi

Re: காதல் புலவர் வள்ளுவர்
« Reply #2 on: June 22, 2023, 12:20:37 AM »




குறள் - செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை

உரை- என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

Simply - நீ போனா செத்துடுவேன் Butter scotch 😑

குறள் எண் – 1151
இயல் – களவியல்
அதிகாரம் – பிரிவு ஆற்றாமை