Author Topic: வார்த்தை விளையாட்டு  (Read 12661 times)

Offline VenMaThI

வார்த்தை விளையாட்டு
« on: August 17, 2023, 02:17:26 AM »


காசு பணம் துட்டு மணி.....

மக்களே நாம அன்றாட வாழ்வில் பணம் எவ்ளோ முக்கியம்னு எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..

ஆனா அந்த பணம் எந்த எந்த எடத்துல என்ன பெயர்ல பயன்படுத்தப்படுது அப்படினு பார்க்கலாம்..

உதாரணத்துக்கு

திருமணத்தில் பெண் வீட்டார் கொடுப்பது சீதனம்... கோவில் உண்டியல்ல செலுத்தினால் அது காணிக்கை...

இப்ப ஒரு ஒருத்தரும் தங்களுக்கு தெரிஞ்ச பணம் என்பதற்கான வேறு பெயர் பதிவிட்டு விளையாடலாமா??


Offline Ishaa

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #1 on: August 17, 2023, 02:25:11 AM »
வீட்டுக்கு வாடகை
« Last Edit: August 17, 2023, 11:37:37 AM by VenMaThI »

Offline Cholan

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #2 on: August 17, 2023, 02:41:33 AM »
வேலை செய்தவருக்கு குடுப்பது கூலி
« Last Edit: August 17, 2023, 11:38:19 AM by VenMaThI »
           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline SweeTie

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #3 on: August 17, 2023, 03:39:16 AM »
குற்றத்தை மறைக்க  கொடுப்பது லஞ்சம்

Offline Madhurangi

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #4 on: August 17, 2023, 10:46:24 AM »
வாங்குவது கடன்
« Last Edit: August 17, 2023, 11:35:38 AM by VenMaThI »

Offline Lakshya

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #5 on: August 17, 2023, 10:58:33 AM »
ஒருவருக்கு பண உதவி செய்வது...
« Last Edit: August 17, 2023, 11:36:35 AM by VenMaThI »

Offline vaseegaran

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #6 on: August 17, 2023, 11:07:28 AM »
நன்கொடை
« Last Edit: August 17, 2023, 11:37:13 AM by VenMaThI »

Offline Minaaz

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #7 on: August 17, 2023, 11:08:43 AM »
வியாபாரம் நோக்கத்தின் ஆரம்பம் முதலீடு , எதிர் கால தேவைக்காக சேகரித்து வைத்தால் சேமிப்பு 😊🤭
« Last Edit: August 17, 2023, 11:36:18 AM by VenMaThI »

Offline Aathirai

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #8 on: August 17, 2023, 12:42:24 PM »
கட்டணம் (பள்ளியில் )
விரையம் - செலவு
பொற் காசு பரிசு பொருள் முந்தைய காலத்தில்
கப்பம் - தவறு செய்தல் கட்டுவது
தானம் - பிறருக்கு அன்பாக கொடுத்தல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
« Last Edit: August 17, 2023, 09:17:18 PM by Aathirai »

Offline Suji

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #9 on: August 17, 2023, 04:38:39 PM »
வெற்றிப்பெற்றவனுக்கு கொடுத்தால் அது பரிசு..
இல்லாதவருக்கு கொடுத்தால் அது தர்மம்...

Offline Madhurangi

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #10 on: August 17, 2023, 04:59:31 PM »
பாரம்பரிய சொத்து முதுசம்
« Last Edit: August 17, 2023, 05:01:11 PM by Madhurangi »

Offline Ishaa

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #11 on: August 17, 2023, 05:41:21 PM »
கல்யாண ஜோடிக்கு கொடுக்கப்படும் மொய்

Offline Madhurangi

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #12 on: August 17, 2023, 11:08:42 PM »
செலவினை மிஞ்சிய வருமானம் லாபம்..

வருமானத்தை மிஞ்சிய செலவு நட்டம்..

Offline Ishaa

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #13 on: August 17, 2023, 11:43:19 PM »
கலைஞருக்கு அங்கீகாரம்

Offline Madhurangi

Re: வார்த்தை விளையாட்டு
« Reply #14 on: August 18, 2023, 12:09:43 AM »
அரசின் ஒரு வருமான  வழி  வரி