கல்லூரி பருவத்தில் நான் கிறுக்கிய
முதல் காதல் கிறுக்கல் 😇 🙈🙊🏃

நாள்தோறும் உனது மெளன
மொழிகள் எனது சிந்தையில்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது !
எனினும் ஏங்கி நிற்கின்றேன்,
எனது விழிகளின் ஈரத்தினை
நீ எப்பொழுது அறிவாயோ என்று !
நடுநிசியில் விழிக்கிறேன்,
நானும் நாணம் அடைகிறேன் உன்னால் !
இறையிடம் கோருகிறேன் இன்றைய
பொழுதாவது உன்னுடன் மலருமா என்று !