Author Topic: மாதவிடாய்..  (Read 594 times)

Offline Mr.BeaN

மாதவிடாய்..
« on: November 25, 2023, 08:51:22 PM »

கற்பில் ஒரு கண்ணகியோ
மனம்.கவரும் மாதவியோ
எத்தகைய பெண் எனினும்
இருக்குமொரு பொது நிகழ்வு

காலத்தை கணித்த பின்னே
மாதம் என்னும் ஒரு கணக்கில்
பெண்ணுக்குள் நிகழுகிற
பொது நிகழ்வு மாதவிடாய்

அத்தகைய நாட்களிலே
அடகுமுறை பண்ணுகிற
கூட்டமொன்று பெண்ணினதை
தீட்டென்று சொல்கிறதே

உதிரத்தை பாலாக்கி
உயிருக்கு ஊட்டுகிற
அவள் உதிர போக்கினிலே
அவதூறும் பேசிடுதே

.பேறு காலத்து
வலி ஒன்றை பெண்ணவளும்
 மாதம் ஒரு முறையே
மடியினிலே உணருகிறாள்

அப்படியாய் கதை இருக்க
நிற்கதியாய் ஒரு பெண்ணை
வீட்டுக்கு தூரமென்று
வீதியிலே நிறுத்துகிறார்

உயிர் கொடுக்கும் சாமியாய்
உலகினிலே அவள் இருக்க
சாமிக்கு ஆகதென
சாக்கு போக்கு சொல்லுகிறார்

வலி உணரா மனிதர் சிலர்
வழி கெடுக்கும் செயலதனை
அழித்திடுவோம் மை இட்டு
மாதவிடாய் இல்லை தீட்டு


(தோழி @shy அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எனக்கு தெரிந்த சிலவற்றை எழுதியுள்ளேன்.
நன்றாக இருந்தால் உங்கள் விருப்பங்களை அளிக்கவும்.
ஏதேனும் பிழைகள் கருத்துகள் இருந்தால் தெரிய படுத்தவும் நன்றி)
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Mr.BeaN

Re: மாதவிடாய்..
« Reply #1 on: November 25, 2023, 09:03:28 PM »

கற்பில் ஒரு கண்ணகியோ
மனம்.கவரும் மாதவியோ
எத்தகைய பெண் எனினும்
இருக்குமொரு பொது நிகழ்வு

காலத்தை கணித்த பின்னே
மாதம் என்னும் ஒரு கணக்கில்
பெண்ணுக்குள் நிகழுகிற
பொது நிகழ்வு மாதவிடாய்

அத்தகைய நாட்களிலே
அடக்குமுறை பண்ணுகிற
கூட்டமொன்று பெண்ணினதை
தீட்டென்று சொல்கிறதே

உதிரத்தை பாலாக்கி
உயிருக்கு ஊட்டுகிற
அவள் உதிர போக்கினிலே
அவதூறும் பேசிடுதே

.பேறு காலத்து
வலி ஒன்றை பெண்ணவளும்
 மாதம் ஒரு முறையே
மடியினிலே உணருகிறாள்

அப்படியாய் கதை இருக்க
நிற்கதியாய் ஒரு பெண்ணை
வீட்டுக்கு தூரமென்று
வீதியிலே நிறுத்துகிறார்

உயிர் கொடுக்கும் சாமியாய்
உலகினிலே அவள் இருக்க
சாமிக்கு ஆகதென
சாக்கு போக்கு சொல்லுகிறார்

வலி உணரா மனிதர் சிலர்
வழி கெடுக்கும் செயலதனை
அழித்திடுவோம் மை இட்டு
மாதவிடாய் இல்லை தீட்டு


(தோழி @shy அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எனக்கு தெரிந்த சிலவற்றை எழுதியுள்ளேன்.
நன்றாக இருந்தால் உங்கள் விருப்பங்களை அளிக்கவும்.
ஏதேனும் பிழைகள் கருத்துகள் இருந்தால் தெரிய படுத்தவும் நன்றி)
intha post sutathu ila en manasai thottathu..... bean