Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 329  (Read 1775 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 329

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline PreaM

என் எதிரில் அமர்ந்த ஓவியமே
உன் அருகில் அமர்ந்தேன் காவியமே
உன் காதோரம் கவி பாடி
காதலை சொல்வேன் உனை தேடி

பால் போன்ற பாவை மேனியில்
பட்டு போன்ற கூந்தல்  சரிவை
தொட்டு உணரவே துடிக்குது உள்ளம்
கட்டி அணைக்க எண்ணுது எண்ணம்

யாழ் மீட்டி இசை பாடிட
யாழ் ஒன்று என்கையில் உண்டு
பாவை அவள் கூந்தல் கண்டு
யாழ் நரம்பு எதுவென அறியேன்

கண் எதிரே ஓவியமாய் பெண்ணே
இது கற்பனை இல்லா காவியமாய்
காணம் பாடிட  எண்ணுதடி மனம்
களவு போனது இந்த பெண்ணிடமே

காதல் இல்லாத உலகம் இல்லை
காதலிக்காத எந்த உயிரும் இல்லை
கலைஞனுக்கு கற்பனை உண்டு
கற்பனை மீறிய காதலும் உண்டு

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
கற்பனையின் பிம்பம்
பிரம்மனின் சிற்பம்...
 பேரழகின் பிரமாண்டமாய் அவள்..
விழியோரம் ஆர்வமும்
உதட்டோர புன்னகையும்
சிந்தனையைச் சிதைக்கின்றது..

அவளின் அருகில்
நாவும் பிரன்டோட
வார்த்தைகளும் தாவி
நழுவுகின்றது
இசை மீட்டி மயக்கும்
விரல்களும் யாழிசைக்க
மறுத்து
அவள் கன்னங்களை
வருட தடுமாறுகின்றது..

அவள் பேசும்
அழகில்
நான் கிறங்கையில்..
அவளின் வார்த்தைகள்
ஒவ்வொன்றும் ஏழு ஸ்வரங்களையும்
மீட்டுகையில்...
எனக்கு இங்கு என்ன
 வேலையென்று
எனது யாழும் குறுகி நின்றது...

கள்ளி அவளை
நெருங்கினால்
ஆயிரம் ரோஜா மலர்களாக,
விலகினால்
ஆயிரம் ரோஜா முட்களாக
மனமானது
நொந்து விடகிறது..

பேரழகி
பாதுகாப்பிலிருக்கையில்
கள்வனும் காவலை மீறி
கள்ளத்தனம் செய்யத்தானே நேரும்....
ஒற்றனும் மதிலுக்குப் பின்
ஒளிந்து பார்க்கையில்...
கள்வனும் பிடி படும் நிலையில் ...

மனமின்றி
அவளின் விழிகளை
நோக்கி யாசிக்கின்றேன்...
விழியோர வெட்கத்தில்..
ஒற்றை முத்தத்தில்..
வழியனுப்பி‌ விடு...
ஜென்மப்பயனைப்
பெற்றுவிடுகிறேன்..

நான்
அவளால் அவளுக்காய்
பித்தனானேன்...
காதலில்
முக்த்தனுமானேன்.
« Last Edit: November 28, 2023, 10:02:14 AM by ரித்திகா »


Offline Vijis

என்னவனே இருண்ட என் அறைக்கு ஒளியை தந்தவனே கசப்பான என் நாட்களை இனிமை ஆக்கியவனே உன்னை பார்த்த அந்த நிமிடம் என்னையே மறந்தேன் இவ்வளவு வருடங்கள் ஆகியும் என் மொழிகள் பேசவில்லை என்றாலும் என் விழிகள் பேசியதை வைத்து என்னை புரிந்து எனக்காக காத்துஇருந்தாய் எத்தனை சண்டையிட்டாலும் உன் அன்பினால் என்னை அணைத்து கொண்டாய் உன் பாதையில் என் வாழ்வை வாழவேண்டும் உன் மார்பில் என் பயணம் முடியவேண்டும் எனது கடைசி பயணம் வரை உன்னை என்னிடம் இருந்து யாரும் பிரித்துவிட கூடாது என்று கடவுளிடம் வரம் கேட்பேன் கடைசி நிமிடம் வரை உனக்காக வாழ்வேன் உன்னை மட்டும் அல்ல உன் நினைவுகளையும் சுமந்து என்னவனின் அன்பில் வாழ்வதற்கு இந்த ஒரு பிறவி போதாது அடுத்த பிறவிலும் அவனுடன் வாழவேண்டும் மனைவியாக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் என்னவனை என் வாழ்வில் தந்ததுக்கு எல்லார்க்கும் நன்றி என் கவிதையில் பிழை இருந்ந்தால் எல்லாரும் மறந்து மன்னித்துவிடுகள்

Offline Minaaz

ஜாடை மொழியில் சிக்குண்ட ஜாம்பவான்...

வர்ணிக்க வார்த்தைகள் எல்லை என்றிருந்த தருணம், வார்த்தைகளும் தன்னை அறியாமல் கோலம் தீட்டும் பெண்மை அவளை காணும் பொழுதில்....


வராண்டா ஓரம் அவள் வீற்றிருக்க, மெல்லமாய் வீசிட்ட காற்றில் தரை தொட்டுக் கிடந்த மலரிதழ்கள் பெண்ணவளின் பாதங்கள் உரசிட காற்றே நாணத்தால் மடிந்திற்று, ஆம் மடிந்தது காற்று மட்டுமல்ல நானும் தான்...


அவளது கருவிழி என்ற சிறை வாசலுக்குள் சிக்குண்டு மீண்டிட வாதாடும் கணப்பொழுதில் உணர்ந்தேன்,   
இல்லை ஆயுள் கைதியாய் இருந்திட வேண்டும் என்ற எக்கம்....

இப்படி அவள் அழகில் அரங்கேறி இருந்த நேரம் என்னவளின் இதழ் பிரிய வந்தது என்னவோ ஓரிரு வார்த்தைகள் தான், நானோ ஓராயிரம் வரம் பெற்ற உணர்வு எனக்குள்...

அவள் மேல் கொண்ட அதீத காதலில் நான் மட்டும் வீற்றிருக்கிறேன் என எண்ணிய எனது எண்ணம் அவளது ஒற்றை பார்வையில் சுக்கு நூறாய் சிதறி போனது...


விழியோர தசைகளை கருவிழிகள் உரசிட, மலரினங்கள் மொத்தமும் என்னவளின் கார்குழலை வரமென பற்றிக் கொள்ள, செவ்விதழ் ரோஜா என கண்ணங்கள் வண்ணம் கொள்ள, புருவங்களை மெல்ல சாய்த்து ஜாடை செய்தாள் " திருடா... முடங்கி கிடப்பது நீ மட்டும் அல்ல நானும் தான்" என்று...

வேவு பார்க்க வந்த வீரக் காவலனோ வெட்கித்து தலை குனிந்து பிரமித்து போனான்.. இவ்வளவு இன்பமா இந்த காதலில் என்று.... ♥️
« Last Edit: November 28, 2023, 11:24:29 AM by Minaaz »

Offline VenMaThI

ஆண்:
நட்பபெனும் கடலில் நீந்தி
நல்லது கெட்டது நாலும் தெரிந்து
நல்வழி நடத்தும் தோழியே
நலம் தானே அவ்விடம் அனைத்தும்....

பெண்:
என் சிரிப்பின் காரணனே
நான் சாய தோள் கொடுக்கும் என் தோழனே
இவ்விடம் அனைத்தும் நலமே
அவ்விடமும் அவ்வாறே என நான் நம்புகிறேன் ....

ஆண்:
காதலராய் நம்மை நினைத்தே
கதை கோர்த்து வசை பாட
காவலனும் காத்திருக்கிறான்
Content கொடுக்க ரெடியா சகியே 😂😂😂

பெண்:
மங்கையர்க்கு மாதவனாய்
எனக்கு
பாஞ்சாலியின் கண்ணனாய்
என்றுமே உடன் வருவாய்
எனதருமை நண்பனே...

ஆண்:
மயக்கும் மாதவனே என் காதல் கண்ணனே
என காதல் மொழி பகிர்ந்ததாய்
பிட்டுக்கு மண் சுமந்த
சிவனிடமே பிட்டு(bit) போடுவான்...

பெண்:
மங்கை பருவம் எய்திடவே
பெற்றோரும் உற்றாரும் கூடிடவே
மணமேடைதனில் மங்களநான் கழுத்தில் ஏற
நின் அட்சதை பூ என்னை வாழ்த்த வேண்டும்....

ஆண்:
பெற்றோரும் உற்றாரும் வேண்டாம்
அலங்கரித்த மணமேடை கூட வேண்டாம்
நின் கைகோர்த்து வாழும் வாழ்க்கை போதும்
என உதடு அசைவிற்கு script எழுதுவான் பாராய் 😂😂😂

பெண்:
பனைமர நிழலில் பால் குடித்தாலும்
கள் என கூறும் உலகமடா
குடிக்கும் இடம் எதுவென பார்த்து
Clever ஆக நாமும் வாழ்வோமடா...

ஆண்:
குடிப்பது பாலோ கள்ளோ
வரும் நண்மையும் தீமையும் நமக்குத்தானே
கதை கோர்த்து வசை பாடி
பலனென்ன காண்பான் இவன்??

பெண்:
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் இருக்க
அடுத்தவர் வாழ்வை வேவு பார்க்கும்
சில வீணாய்ப்போன மக்களுமுண்டு
அவர்களை சகிக்கும் தன்மை நமக்குமுண்டு

ஆண்:
தன் முதுகின் அழுக்கு தன்னை
கண்ணாடியிலும் காணாதவன்..
பிறர் முதுகின் அழுக்கு தன்னை
கண்டே என்றும் பழகியவன்...

ரோஜா செடியிலும் முள் இருக்கும்
முள் செடியிலும் பூ இருக்கும்
பறிக்கப்போவது முள்ளா பூவா
பறிப்பவன் பாடு நமக்கெதுக்கு

பெண்:
பூ பறிப்பவன் ரசித்து மகிழ்வான்
முள் பறிப்பவன் வலியை அறிவான்
மகிழ்ச்சியும் வலியும் அவரவர் கையில்
நம் வாழ்க்கை என்றுமே நம் கையில்...
« Last Edit: November 28, 2023, 06:13:24 PM by VenMaThI »

Offline Sun FloweR

நடுநிசி நேரம்..
வசந்த மண்டபம்...
காதலைப் பரிமாறும் இருவர் ..
கள்ளமாய் ரசிக்கும் ftc நண்பர்கள் ..

காதலி : அரவமற்று இரு..
காதலன் : அரவம் போல் சீறி பாய்கிறது கரங்கள் உன்னை அணைத்திட ..

காதலி: அப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்காதீர்...
காதலன் : வைத்த கண்களை எடுக்க முடியவில்லையே நான் என்ன செய்வது?

காதலி: யாரும் கண் கொண்டு கண்டுவிடவில்லையே நீ வருவதை..
காதலன் : நானே உன் கண்களை இன்னும் முழுமையாய் காணவில்லையே..

காதலி : பாதுகாப்பிற்கு வில் அம்பு எடுத்து வரவில்லையா?
காதலன் : உன் புருவ வில்லையும் அம்பு விழிகளையும் சற்று கடன் தர மாட்டாயா.?

காதலி : ஆயிரம் கானங்கள் பாடி மகிழ்ந்திடுவோமா?
காதலன் : ஆயிரம் வேழங்களை அடக்கியவன் உன் அழகில் மயங்கி மூர்ச்சையாகி கிடக்கிறேனே என் செய்வேன்?

காதலி : மடியில் இருக்கும் யாழ் கொண்டு மீட்டுவாயா?
காதலன் : மடியில் உன்னை வீழ்த்தி தேக யாழ் மீட்டிடவா?

காதலி : சரியான கள்வன் நீ..
காதலன் :ஆடைகளுக்குள் புதைத்து வைத்த உன் பேரழகைக்
களவாட காத்திருக்கும்
பூதம் நான்..

காதலி: வெட்கம் கொள்ளச் செய்கிறாய் உன் பேச்சில் ..
காதலன் : உன் வெட்கத் தோட்டத்தின் மொத்த பூக்களும்
எனக்கே சொந்தம்..

காதலி : என் தந்தை வந்துவிட போகிறார்...வாளால் வீழ்த்தி விட போகிறார்..
காதலன் : என் தந்தை கூட வந்துவிட்டு போகட்டும் .. மன்றாடி கேட்டு உன்னை என் மனைவி ஆக்கி கொள்வேன்.

காதலி : தங்களின் காதல் மெய் தானோ? அல்லது பருவ கோளாறா?
காதலன் :பருவத்தில் மலர்ந்த கானல் காதல் அல்ல இது.. நிலமெங்கும் வேர் பரப்பி கிடக்கும் விருட்ச காதல் இது..

காதலியின் தந்தை: யார் அது இந்நேரம் இங்கு ...................
« Last Edit: November 28, 2023, 04:48:54 PM by Sun FloweR »

Offline SweeTie

பட்டத்து  இளவரசி  அவள் 
பளிங்குபோல்  மேனி கொண்டாள்
சொக்கி மயங்கிப்  போனான் அவன்
வேற்றுநாட்டு  மாவீரன் 

மாமனுக்காய்  வேண்டி வந்தான்
மங்கையவள்  அழகில்  மயக்கமுற்றான்
காதல் ரசம்  தலைக்கேற    கனிவுற்றான்
மாமனை மறந்தான்  அக்கணமே   

காதோரம்  நீண்ட  அவள் விழிகளில் 
காண விரைந்தான் காதலின்  சொர்க்கம்
பேசத்துடிக்கும்  அவள் செவ்விதழை
தனதாக்க  முனைந்தான்   

இதயத்தில்  ஆயிரம் கற்பனைகள்
இழையோடிப் போன  இதயத்தை  இ னிதாக்க
மோகத்தின்  பிடியில்  சிக்கியவன்
மீளமுடியாமல்  தத்தளித்தான்

பிரம்மனின்  படைப்புக்கு   நன்றிகள்
கோடி கோடியாய்   கொட்டித் தீர்த்தான் 
வர்ணிக்க முடியாத   அப்படி ஒரு அழகு  அவள்
இத்தனை நாள் காணாமல் போனேனே
வருந்தியது அவன் நினைவு 

அயர்லாந்து நாட்டு  இளவரசி   அவள்
இங்கிலாந்தின்  மாவீரன்   அவன் 
பொருத்தம்   பார்க்காத காதல் 
இதயங்களில்   வேரூன்றி விழுதுகள் விட
காதலில்   மயங்கின  இரு உள்ளங்கள் 

கேள்வியுற்ற மாமன் ஆத்திரம் கொண்டான்
விளைவுகள் விபரீதமாயின   
விஷ அம்புகள்  மாவீரன்  உடலை  துளைக்க
மாண்டு போனான்  மாவீரன்   
விண்ணுலகு  காதலரை வரவேற்றது

 

Offline Vethanisha

என் இதய யுவராணியே ,
இதோ அழைத்து வந்துவிடடேன் இந்த யாழை
தட்பெருமை அதற்க்கு
உலகில் யாரும் இல்லை - அதன் 
இசைக்கு ஈடில்லை என்று 
அன்பே 
ஒரு முறை நகையாடு 
ஒழியட்டும் அதன் இறுமாப்பு   

இங்கே 
வரமாய் கேட்கிறேன் 
உன் விழிகள் கூறும் காதலை 
என்று உன் உதடுகள் பகிரும் என்று 
வினாவாய் கேட்கிறேன் 
உன் நாணம் சொல்லும் ஆயிரம் ஜாடையை இரசிக்க இவ்வளவு இடைவெளி தேவையா நமிடையில் என்று 

என் முகம் வருடும் உன் மூச்சு காற்று 
என் கரம் உரசும் உன் தங்க குழலோடு 
நாணத்தில் கால்களை இருக பற்றும் உன் கைகளும் 
என்று என்னைச் சேரும் என்று -
கேட்கவா நம்மை எட்டி நோக்கும் அந்த ஒற்றனிடமும் 
ஒருமுறை   இன்று




சிறு முயற்சி பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

 ..