மானிறத்தில் மேனியுடன்
மந்திர புன்னகையால்
என் மனதை கொள்ளை கொண்ட
பெண்ணொருத்தி கண்டு கொண்டேன்
சித்திரமாய் உன் முகமும்
செந்தமிழில் உன் பேச்சும்
சக்கரை நீர் போல
என்னுள்ளே இனிக்குதடி
பாதகத்தி பாவை உந்தன்
பார்வை அதை பாக்குறப்போ
மனசு பூராவும்
அச்சடிச்ச காகிதமா
உன் பெயரை உரைக்குதடி
சித்திரையில் வெயில் அடிக்க
செவந்த மண்ணு காஞ்சது போல்
நீ என்ன நீங்குறப்போ
என் மனசும் காயுதடி
கண்ட உடன் நீ சிரிக்க
தண்ணியில் படிகாரம்
எப்படித்தான் கரைஞ்சிடுமோ
அது போல கரைஞ்செனே
காகித கப்பல் ஒன்னு
வெள்ளத்தில் கவுந்தது போல்
உன்னை நான் பாத்தப்போ
காதலில கவுந்தேனே
இந்த ஜென்மம் உன்னுடனே
காலமதை நான் கழிக்க
எண்ணித்தான் நான் இருக்கேன்
ஏத்துக்கடி என் மனச♥️♥️♥️