Author Topic: விரயம்..  (Read 482 times)

Online Mr.BeaN

விரயம்..
« on: November 29, 2023, 10:32:11 AM »
கல்லொன்றை எடுத்து உளி கொண்டு செதுக்க
சில துகள் மட்டும் விரயமடா
அழகிய சிலயும் கிடைக்குமடா

வில்லொன்றை எடுத்து அம்பொன்றை பொருத்தி
எய்தால் அம்பே விரயமடா
இலக்கு நம் வசம் ஆகுமடா

சொல் ஒன்றை எடுத்து வரிகளில் பொருத்த
நேரம் மட்டும் விரயமடா
அழகிய கவிதை பிறக்குமடா

மனமதை கவரும் பெண்ணை கண்டால்
இதயம் இங்கே விரயமடா
எதிர்காலம் நமக்குக் கிடைக்குமடா

இப்படியாக எல்லா செயலிலும்
ஏதோ ஒன்று விரயமடா
என்றால் கூட ஏதோ ஒன்று
நமக்கதில் நன்றாய் கிடைக்குமடா

என்ன கொண்டு வந்தோம் நாமே
அதை நாம் இங்கே இழப்பதற்கு
என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டால்
விரயத்தில் பயமில்லயே நமக்கு

கண்டு கேட்டு உண்டு உணர
ஐம்புலன் என்று நமக்கிருக்கு
அதிலே குறையாய் வாழ்பவர் பாரு
விரயத்தில் கவலையும் நமக்கெதுக்கு


(தோழி @Laughing colour கொடுத்த தலைப்பு)
intha post sutathu ila en manasai thottathu..... bean