ஊராம் இதிலே உயர்வாய் மனிதன்
ஆறாம் அறிவோ தமக்குண்டு என்பான்
அதனால் உனக்கு என்பயன் என்றால்
அண்டம் அறிந்திடும் அறிவது என்பான்
எத்தனை பெரிது என்றே தெரியா
அண்டம் அரிந்திடும் மனிதன் இங்கே
தன்னுடன் வாழும் சக மனிதன் தன்
உணர்வை மட்டும் மதிக்கா
திருப்பான்
சிறு பிழை ஒன்றை தவறி செய்தால்
அவரிடம் பெரிதாய் கோபமும் கொள்வான்
எல்லாம் தெரிந்த மனிதன் இங்கே
பொல்லாராகி போவான் ஏனோ
நல்லோர் தீயோர் என்னும் பிரிவை
பிறப்பால் யாரும் பெறுவது இலையே
உள்ளம் அதிலே கள்ளம் இன்றி
உயர்வாய் வாழ்வதில் பிழையெதும் இலையே
எல்லார் உணர்வும் பெரிதாய் எண்ணி
என்றும் அன்புடன் வாழ்வோம் மண்ணில்
சில நாள் வாழ்க்கை இதில் பகை வேண்டாம்
அன்புடன் பிழைதனை மன்னிப்போம்!!
@தோழி @focuss கொடுத்த தலைப்பு)