உடலில் ரத்தமென ஒன்றாக
கலந்திருந்தோம்
கடலும் நுறையுமென பிரியாமல் தான் இருந்தோம்
அளவு ஏதுமின்றி நம்முள்ளே
காதல் கொண்டு
அன்பை பரிமாறி ஆகாசம் தான் கண்டோம்
கண்ணில் காண்பதெல்லாம் நமக்காய் வந்ததுபோல்
நாளும் நகைப்புடனே நாமும் கடத்தி வந்தோம்
பாலில் சிறு துளியாய்
விஷமும் கலந்தது போல்
நானும் தவறு செய்ய
தானே பிரிந்து விட்டோம்
உன்னை நீங்கி தினம்
உயிரும் போகுதடி
மழையில்லா பயிர் போல
மனமும் வாடுதடி
முன்னர் நடந்தைவகள் முள்ளாய்
குத்தி விட
நினைவில் இருப்பதினால் மனமோ
கத்துதடி
எந்தன் உயிர் நீயே என்றே நானிருந்தேன்
எனை நீ பிரிந்த உடன் தானே பிணமானேன்
இன்றோ என் தவறை நானே உணருகிறேன்
அதனால் மனம் வருந்தி வீணாய்
புலம்பிகிறேன்
உன்னை ஒன்று மட்டும் நானும் கேட்கின்றேன்
அன்பே என் தவறை நீயும்...
மன்னிப்பாயா...