எத்தன் என்று இங்கே சுற்றி வந்த என்னை
பித்தனாக மாற்றி சுற்ற வைத்த பெண்ணே
பத்திரமாய் இருந்த நானோ தொலைந்து விட்டேனே
சத்தியமாய் உன்னாலே கரைந்து விட்டேனே
முத்தம் ஒன்றை முதன் முதலாய் உன்னிடத்தில்
பெற்றதனால் உன்னில் நான் கலந்து விட்டேனே
ஆண் எனும் ஆணவத்தில் நானிருக்க
நாணமே உன்னிடத்தில் குடி இருக்க
மோகத்தில் உனதருகே வந்தேனே
காதலில் உனதழகை கண்டேனே
ரோஜாவின் இதழ் கொண்டு என் இதழை
லேசாக முதன் முதலில் தீண்ட
ஆண் எனும் ஆணவம் ஒரு நொடியில்
நீங்கி தான் நாணமும் வந்ததடி
முத்தம் அதை முதலில்
பெற்ற அந்த நொடியில்
அத்தனை உலகமும்
கிடந்த தென் காலடியில்
அடியே உன் முத்தத்த அழகாக கொடுத்துட்ட
அத்தோட என் வாழ்க்கை மொத்தத்தை எடுத்துட்ட
முதல் முத்தம் தந்தப்போ ஏதேதோ மாற
வார்த்தை ஏதும் கிடைக்கலையே விவரிச்சு கூற
இதழோடு இதழ் பதித்து.முத்தமதை
முதன்முதலில் நானுமே பெற்ற கதை
நெஞ்சத்தில் எந்நாளும் மறக்காதே
எந்நாளும் என்னை நீ மறவாதே..