வணக்கம் மக்களே இது ஒரு நியூ song.கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
விழியென உன்னை கண்டேன் இமையென மூடிக்கொண்டாய்
ரசித்திட வழியும் இல்லையடி பெண்ணே பெண்ணே பெண்ணே
கருந்துளை நெஞ்சம் கொண்டு விருந்தென என்னை தின்றாய்
மீளவும் வழியும் இல்லையடி பெண்ணே பெண்ணே பெண்ணே
நீ போகும் வழியில் எல்லாம் நானும் பூவாய் பூப்பேனே
நான் பார்க்கும் யாவும் அன்பே உந்தன் முகமே பார்ப்பேனே
உன்னோடு நானும் சேர தினமும் தவமும் இருப்பேனே
உனை நீங்கி வாழச் சொன்னால் வேண்டாமென்று மறுப்பேனே....
இந்த பாடலை ஆடியோ வடிவில் கேட்க கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும் நன்றி.
