கடந்த வார இசைத் தென்றல் நிகழ்ச்சி மிகவும் அருமை.. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய Rj க்கும் , editor க்கும் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகளும் நன்றியும்...
இந்த வாரம் நான் தேர்வு செய்த பாடல் "சாம்ராட் அசோகா" திரைப்படத்திலிருந்து "San Sanana Sana " என்ற பாடல்..
திரைப்படம் வெளிவந்த ஆண்டு : 2001
இயக்குநர்:
இசை: அனுமாலிக்
பாடகர்: K.S. சித்ரா
பாடல் எழுதியவர் : தாமரை
நடிகர்கள்: ஷாருக்கான், கரீனா கபூர்
இந்த திரைப்படம் வரலாற்றில் சிறப்பிடம் பிடித்த அசோக சக்கரவர்த்தியின் இளமை கால காதலைப் பற்றியும், அவர் உடன் பிறந்த 100 சகோதரர்களை அழித்து ஆட்சிக்கு வந்த ராஜதந்திரங்கள் பற்றியும் கூறுகிறது..
அசோகர் தன் இளமை காலத்தில் ஒரு அழகிய பெண்ணைப் பார்க்கும் தருணத்தில் அப்பெண் இப்பாடலைப் பாடுவதாக அமைந்திருக்கும். அவள் பாடலையும், அழகையும், நடனத்தையும் ரசித்தவாறே அவள் மேல் காதல் கொள்கிறார் அசோகர். அசோகர் மட்டுமல்ல எவர் அப்பெண்ணைப் பார்த்தாலும் காதல் கொள்வார். அத்தனை பேரழகுடன் மிளிர்வார் அப்பெண்..
இந்தியில் வெளிவந்த இப்படம் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. சித்ராவின் குரலில் இப்பாடலைக் கேட்கும் போது இது ஒரு மொழிபெயர்ப்பு பாடல் என்று கூறிவிட முடியாது. அத்தனை நேர்த்தியாக அமைந்திருக்கும். அனுமாலிக்கின் இசை நம்மை பிரம்மிக்க வைக்கும். என்னைக் கவர்ந்த இப்பாடல் FTC நண்பர்களுக்காக...
https://youtu.be/nq486YSHatI?si=Re9XZIfYW9Xswz9T