Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 343  (Read 329 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 343

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Symphony

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 33
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi all First impressions is best impressi
*இருள் சூழ்ந்த மனம்"
மனிதனின் மறுப்பக்கம் அகமும் புறமும் ஒன்றுகாட்டும் சாத்தான் ஒரு கருப்பு சரித்திரம் அல்ல தரித்திரம்!

பிறர்வாடி நிற்க கொடுங்கோல் பாவியானோம்!

தீயோனை முன்னிலையாக்கும் விந்தை மனிதர்கள் அல்ல
நாம் மாக்களாகி நிற்கதியற்றுபோனோம்?

விபத்தின் புகைப்படங்கள் எடுத்து வேடிக்கை காட்டும்
அரக்கர் கூட்டம் முன்டு!

வலைத்தளங்களை பார்த்து சீரழியும் கூட்டம் ஓர் பக்கம் - பெண் பித்தேடுத்து
சிறுமிகளின் கனவுகளை நசுக்கும் நஞ்சும் உண்டு,

ஓட்டை கூவி விற்பனை செய்யும்
கடையும் முன்டு,

கடமையைவிற்கும் கயவர்களும் விலைமாதர்களுமுன்டு!

நன் நிலம் அளித்து உயர்மாடம் மாளிகை எதற்கு ? ஒருபிடி பறுக்கைக்கு கையேந்தும் நிலை ஒன்றும் தூரமில்லை
ஆசை என்னும் பெருங்கடல் சாத்தானே

நல்லவை எல்லாம் தீக்கிரையாக்கும் சாத்தானே!

உனை ஒழிக்க எவருமல்லை என இறுமாப்போ! - இரத்தம்
சூடான எம் படையுண்டு ஜல்லிக்கட்டு போராட்ட களம் நினைவிருக்கிறதா!

ஓடி ஒளிந்து கொள்ள சாத்தானே சாட்டையடி கிடைக்கும்....... முனைவர்.நாகராஜசோழன்... ♥️♥️

« Last Edit: May 25, 2024, 01:16:58 PM by Symphony »
Raju

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 666
  • Total likes: 1852
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


கடவுளின் படைப்பில்,
உலகின் அதிக நிகழ்வுகள்.. அடங்கி நிற்பது இரண்டு இரண்டாகவே...
ஓர் நாளின் இரட்டை தோழிகள்...  இரவும் பகலும்...
உயிர்களின் இரட்டை வதனம்... ஆணும் ... பெண்ணும்.....
ஒலியின் இரட்டை பிறவிகள்... சப்தமும்.. நிசப்தமும்..
ஒளியின் இரட்டை கிளவிகள் .. கரிய இருளும்..  வெண்  பிரகாசமும்....

நாதத்தின் இரட்டை தோழர்கள்... ஆரோகணமும் .. அவ்ரோகணமும்..
கணிதத்தின் இரட்டை சிசுக்கள்.. எண்களின் ஒன்றும்... சுழியும்..
பூதங்களின் இரட்டை அடிநாதம்.. நீரும்... நெருப்பும்..
அண்டத்தின் இரட்டை பிரிவுகள்.. காற்றிடம்.. வெற்றிடம்..
இன்னும் பல பல.. உண்டு... இப்பிரபஞ்சத்தில்...

ஆண்டவனின் படைப்பில்,
அண்டத்தை  இப்படி... ஜோடி ஜோடியாக படைத்திருக்க..
நம்முளும் உருவெடுக்கும் சில இரட்டையர்கள்..
நம் நாசிகளிலும்...  இரு சுவாசங்கள் உண்டென்பர்...
இதயத்தின் துடிப்புகளும் இரண்டு.. நாளங்கள்... நாடிகள்...

விழி.,செவியின் இரட்டையர்களை..தனித்தனியே பிரித்து..
எடுத்து சொல்ல.. பல்லாயிரம் நாழிகைகள் ஆகுமே.....
மொத்தத்தில் சுருங்க உரைத்தால்.. நம் முழு தேகமுமே..
ஒன்றில் மறைந்திருக்கும்.. இரு எதிர்மறை பகுதிகளே..

இறைவனின் படைப்பில்,
பிறருக்கு நன்மை செய்து.. அதில் நிறைவுபெறும் மனம் ஒன்று..
தான் மட்டும் வாழ... பிறர் நலம்.. நோக்கா..  மனம் ஒன்று..
எல்லா மனித படைப்புகளிலும் வாழுமே .. இவ்விரு சக்திகள்..

நன்மைகள் மட்டுமே செய்து.. நல்லவனாக வாழவும் முடியாது..
தீமைகள் மட்டுமே செய்து.. கெட்டவனாக வாழவும் முடியாது..
உன் அன்பும் கருணையும் வேண்டுவோரிடம்..தெய்வமாக.. வாழ்..
உன்னிடம் அடைக்கலம் வேண்டுவோரின். துயர்துடைக்க. அரக்கனாய் வாழ்... . 

என்றுமே.. நாம்..  இடம்,பொருள்,ஏவல் ஆராய்ந்து அறிந்து..
அக்கணப்பொழுதில்.. நம்முள் உறைந்திருக்கும்.. இருவரில்...
யார்.. எப்போது எப்படி.. உருவெடுத்து.. வெளிப்பட வேண்டுமென..
ஆழ்ந்து சிந்தித்து.. தீர்க்கமாக முடிவெடுத்து.. வாழ்வதே வாழ்க்கை...


Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 136
  • Total likes: 825
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கடவுள் பாதியாக இருப்பவன்
மிருகத்தையும் தன்னுள் பதுக்கி வைத்திருப்பான்..

வார்த்தைகளால் மட்டும் உறவாடித் திரிபவன்,
உள்ளத்தால் வானுக்கும் பூமிக்குமாய் இடைவெளி
விட்டு நிற்பான்..

இவனுக்கு நன்மையும் தெரியும் தீமையும் தெரியும்...
இவன் பயணிப்பது என்னவோ தீமையின் தோள்களில் தான்..

ஒரு சமயம் நல்லது செய்வான்,
பல சமயங்களில் கெடுதல் எனும் கொடு வாளை கையில் எடுப்பான்..

மற்றவர் முன் சிரித்து பேசுவான்
தனிமையில் அவர்கள் மேல் காழ்ப்பு கொள்வான்..

பிறரின் முன்னேற்றம் கண்டு அவர்கள் முன் புகழ்ந்து பேசி..
அவர்களின் முதுகுக்கு பின் புழுங்கி சாவான்..

பிறரின் உயர்வு கண்டு, அழகு கண்டு, வீரம் கண்டு, புகழ் கண்டு
பொறாமையால் பொசுங்கி போவான்..

பிறருக்கு உதவி செய்வான் தனக்கான லாபம் அதில் என்ன இருக்கின்றது என்ற கணக்கு போட்டு விட்டு...

ஜோக்கர் போல் தன்னைக் காட்டிக் கொள்பவன், தீராத வஞ்சனைகள் செய்து
திருந்தாத பாவங்களைத் தொடர்ந்திடுவான்..

அனைவரின் மனக் கிணற்றினுள்ளும் அரக்கன் ஒருவன் அஞ்சாமல் குடியிருப்பான்..
மனிதனின் மனத்துள்
கோர மிருகம் ஒன்று தன்னை மறைத்து மறைந்து வாழ்வான்..

Offline SweeTie

  பல முகம்கள்  உள்ளே பதுங்கி இருக்க
ஒரு முகம் மட்டுமே காட்டுகின்ற  \
தினம் தினம் ஒரு வேடம் போடுகின்ற
ஜோக்கர்கள்   அனைவரும்
அகிலத்தின் அன்றாட  மகா நடிகர்கள்
 
உறவு என்ற போர்வையில்  உலாவரும்
உறவாடிக்  கெடுக்கும்  உளவாளிகள்
மற்றவர் துன்பத்தில்  மகிழ்ந்திடுவார்
சற்றுமே  உதவா  சந்தர்ப்ப வாதிகள்
இவர்கள் மனநோய்  வேடதாரிகள் 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
உயர்ந்த மனிதர்கள்   வரிசையில்  துலங்கும்
அதிகார வர்க்கத்தின் ஆட்ட நாயகர்கள்
வெளியே வெள்ளையும்  உள்ளே கருப்புமாய்
உலகையே ஏமாற்றும்  கபடதாரிகள்

ஆசை வார்த்தைகளை  அள்ளி வீசி   அரவணைத்து
அநியாயத்துக்கு  நல்லவனாய் நடித்து
இதயத்தை உருவிவிட்டு  சடலத்தை   வீசும்
கலியுக   காந்தர்வ  யுவன்கள் இவர்கள்
இதயம் தொலைத்த  ஈனப்  பிறவிகள்

சிற்பியின் கை பட்டு  சிலைகள்  உருவாகும் 
இவர்கள் கண் பட்டால்  வாழ்க்கை  என்னாகும்   
வாழ்த்துவது   வாய் என்றாலும்    மனசு சபிக்கிறது
மாறாத மனசுகொண்ட  மாயக்கார்கள்
வாழ்வோரை கரிச்சுக்கொட்டும்  கண்கொத்திப்பாம்பு சிலர்

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்  என
கண்டும் காணாததுபோல்  வாழும்  மனிதா 
ஆணவம் மிகுந்த  ஆதர்ஷ  உலகில்    நீயும் ஒரு பிறவி
ஆணவமும் ஒருநாள் அடிமையாகும்  காத்திரு
பொறுப்பவர்கள்  என்றுமே தோற்றதில்லை

திரைக்கு பின்னால்  ஒளிந்துவிட்ட வாழ்க்கை இது
உண்மை எது பொய் எது  தெரியவில்லை 
சிந்தித்து  செயல்படவும்  நேரமில்லை 
உறவு சொல்ல  சிலர்   உரிமையோடு  சிலர்
நட்புடனும் அன்புடனும்  இன்னும் சிலர்
காலத்தின் ஓட்டத்தில் கரைந்துபோகிறது வாழ்க்கை
 

Offline ThookuDurai

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 19
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Dhool Parakkum THOOKKUDURAI
கடவுள் மனிதர்களை படைக்கும் போது என்னவோ நல்லவர்களாக தான் படைத்தார்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்பினிலே.



கடவுள் என்னற்ற உயிர்களை பூமியில் படைத்துள்ளார், ஆனால் இந்த மனிதர்களை ஏன் படைத்தோம் என்று யோசிக்கிற நிலையில் இருக்கார்.



ஒவ்வொரு மனிதனுக்கும் மனதில் ஏகப்பட்ட ஆசைகள் கனவுகள் இருக்கும். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் எதற்கு கடவுள் என்பார். எதுவும் நடக்கவில்லை என்றால் ஏண்டா இருக்கான் கடவுள் என்பார்.


மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போன்றது மனம். அதில் அரக்க குணம் தான் அதிகம் உள்ளது. முகத்திற்கு முன்னால் பாசமும் முதுகுக்கு பின்னால் வேசமும் போடும் நடிகர்கள் ஆகிவிட்டோம்.


இவ்வளவு ஏன் அக்காலத்தில் வாழ்ந்த புலவர்களுக்கு கூட இரண்டு குணங்கள் உண்டு. உதாரணமாக ஔவையார் (மதிக்காத தலைவாசல் மிதிக்காதே) என்றார்.
திருவள்ளுவர் (இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்)  என்றார்.

நல்லதுக்கு காலம் இல்லை, கெட்டதுக்கு அழிவில்லை. வனத்தில் வசிக்கும் விலங்குகள் கூட ஒற்றுமையை வாழ்கின்றன. ஆனால் மனிதர்கள் தான் போட்டி, பொறாமை என பிரிந்து இருக்கிறோம்.


எப்போதும் ஒரே குணத்தில் இருக்க முடியாது, நேரத்திற்கு ஏற்றது போல் குணத்தை மற்றும் சூழ்நிலை உருவாகும்.

மனிதர்களிடம் குணம் பார்த்து பழகிய காலம் போய் இப்போது பணம் பார்த்து பழகுகிறார்கள்.
யாரோ தவறாக கூறிவிட்டார்கள் நரகத்தில் மட்டும் தான் அரக்கன் இருப்பான் என்று, நம்மை சுற்றி வாழும் மனிதர்கள் தான் உன்மையான அரக்கர்கள்.

நல்லவர்களாக வாழும் மனிதர்களை கடவுள் கூட விட்டு வைப்பதில்லை, பிறகு மற்றவர்கள் எப்படி விட்டு வைப்பர்.

நல்லவற்றை கூட்டி கொள், தீயவற்றை கழித்து கொள், அறிவை பெருக்கி கொள், நேரத்தை வகுத்து கொள். வாழ்க்கை ஒரு கணக்கு தான்.

காதல் கடவுளின் ஆண,அவன் பூமிக்கு தொட்டு வச்ச சேண. அதுபோல தான் யாரேனும் ஒருவர் நல்லவனாக இருக்கும் ஒருவர் மனதில் அரக்க குணத்தை விதைப்பான்.

கல்லில் அடுச்ச காயம் கூட சில நாட்களில் ஆறி விடும், வஞ்சகம் நிறைந்த சொல்லால் அடுச்சா எப்போதும் ஆறாது. நாம் பேசும் வார்த்தைக்கு கூட உயிர் உள்ளது.


எல்லா விலங்குகளையும் காட்டில் வாழும்படி படைத்த இறைவன் ஏன் நாயை மட்டும் மனிதர்கள் வளர்க்கும் படி படைத்தான். அதற்கு இருக்கும் நன்றியுணர்வை பார்த்தாவது மனம் திருத்துவோம் என்றுதான்.


« Last Edit: May 22, 2024, 01:57:38 PM by ThookuDurai »
Identify The Innocent Boy 😉 It's Me Thookudurai 😘...
I'm Not Good, I'm Not Bad 😔...

Offline Kavii

  • Newbie
  • *
  • Posts: 16
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
துரோகமாய் சிரிக்கின்றாய்,
உலகம் முழுதும் அறிய,
சிரிப்பின் பின்னே மறைகின்றது,
உன் துயரம், உன் கொந்தளிப்பு.

விரல்களின் முடிச்சில் கட்டியிருக்கின்றது,
உன் கண்ணீரின் கதைகள்,
சிரிப்பின் பிம்பம் காட்டியிருக்கின்றது,
உனது நெஞ்சின் வேதனைகள்.

உன் சிரிப்பு போலயில்லை,
உன்னை புரிந்துகொள்வது எளிதன்று,
கருப்பின் இருள் போலவே,
உன் உள்ளத்தின் இருளையும் மறைத்துவிட்டது.
சிரித்தாலும் கண்ணீரோடு,
கனவுகள் உனை துரத்துகின்றன,
உன் முகத்தின் பிம்பம்,
உண்மையை மறைத்திடுகிறதோ?

அழிவின் முகம் போல,
உனது சிரிப்பு சிதைக்கின்றது,
கண்ணீர் மின்னிய காயங்கள்,
உன் சிரிப்பின் ஓவியம்.

நகைச்சுவையின் பேரில்,
உன் வலி பேசுகின்றது
நீ சிரித்தாலும்,
உன் உள்ளம் அழுகின்றது,
உன் சிரிப்பின் குரலில்,
உண்மை ஒலிக்கின்றது.
மனது துக்கம் மறைப்பதற்கு,
நீ சிரிக்கின்றாய்,
உன் சிரிப்பு போல,
உலகம் உண்மை பார்க்காது,.

உண்மையான சிரிப்பு,
உனது உள்ளத்தின் நிம்மதியை,
உலகம் அறிய வைத்திடும் நிச்சயம்.

சிரிப்பின் பின்னே மறையாமல்,
உன் உண்மையை காட்டிடு,
உன் வாழ்க்கையின் கதை,
மறைக்கப்படாத உண்மை.

ஏனெனில், எல்லாருக்குள்ளும் மிருகம் உள்ளது,
யாரும் உத்தமர்கள் அல்ல.
நீ அடுத்தவர்களை சிரிக்க வைப்பவன்,
வாழ்வில் அழுதுப் பழகியவன்.

ஒவ்வொரு சிரிப்பிலும்,
உனது மனதின் சுவடுகள்,
உலகம் உணர வேண்டும்,
உன் உள்ளத்தின் துருவம்.
சிரிப்பின் அர்த்தம்,
உள்ளத்தின் நிறைவு,
உயிரின் ஒலியை,
உலகம் கேட்கட்டும்.

சிரிப்பின் பின்னால் மறையாமல்,
உன் உண்மையை வெளிக்கொணர்ந்திடு,
உனது வாழ்க்கையின் கதை,
அழகிய கவிதை ஆகட்டும்.

உன் சிரிப்பு போல,
உலகம் உண்மை பார்க்கட்டும்,
உண்மையான சிரிப்பு,
உயிரின் இசையாகட்டும்.

ஓவியம் உயிராகட்டும்,
உன் உண்மையை வெளிக்காட்டட்டும்,
சிரிப்பு மட்டுமல்ல,
உன் வாழ்க்கை முழுமையாகட்டும்.

Offline Vethanisha

  • Full Member
  • *
  • Posts: 152
  • Total likes: 266
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
முன்னிருப்பவன் யார் இவன் ?!
உற்று நோக்கும் அவன் பார்வை
 மனதை உருக்குலைப்பது ஏன்
உதட்டின் ஓரம் அப்புன்னகை
உள்மூஞ்சினை நிறுத்துவது ஏன்

முன்னிருப்பவன் யார் இவன்?!
 இறுகிய மனதின் மறுபக்கம் அவன்!  ...
உள்ளே  திரையிட்டு மறைத்திருக்கும்
அசுர குணத்தின் பிம்பம் அவன் ! ..
 

அன்பை மட்டும் பகிர நினைக்கும் மனதும்
 அடிக்கடி வஞ்சனையை சுமப்பது ஏன் ?

பொறுமையின் பெருமை  அறிந்தும் இம்மனது
பொறாமையும் குடி புகுவது ஏன் ?

துணிவாய் செயல்பட வேண்டிய  இம்மனது 
சிலரின்   துன்பம் கண்டு நகைப்பதும்  ஏன்?

சகிப்புடன் நடக்க நினைக்கும் இம்மனது
கோள் சொல்லி மகிழ்வதும் ஏன் ?

பகுத்தறியும் நிலை  அறிந்தும் இம்மனது
ஆசை வார்த்தைகளில் சிக்குண்டு சீரழிவதேன்?

புகழோடு  வாழ துடிக்கும் இம்மனது
புறம் பேசி அலைவதும்தான்  ஏன் ?

தன்னலமற்று பழக துடிக்கும்   இம்மனது 
பாரபட்சமாய்  நடப்பதும் பின்  ஏன்?

கொஞ்சி பேச நினைக்கும் இம்மனது
கோபத்தில் தன்னிலையும்  மறப்பது ஏன்?

அறத்தின் நெறி அறிந்தும் இம்மனது
அகந்தையின் இறுமாப்பில் அலைவது ஏன்

பிறர் குறை நோக்கும் இம்மனது என்றும்
 தன்குறையை காண்பதில்லை  ஏன் ?

இவை தீதெனும் தீ என  அறிந்தும் இம்மனது
தன்னை சுட்டு பிறரை சுடுவது  ஏன்?

ஏன் என்ற கேள்விக்கு இன்றும்  பதில்
தீதும் நன்றும் பிறர் தர வாரா  😇

நன்  மாற்றங்கள் வேண்டும் மனதோடு
தீய எண்ணங்கள் அழிப்போம் நெஞ்சோடு
உற்றுநோக்கும் அவன் பார்வையும் மாறும் அன்போடு ❤️


« Last Edit: May 24, 2024, 08:16:46 AM by Vethanisha »