Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 344  (Read 489 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 344

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Symphony

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 33
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi all First impressions is best impressi

தனிமையின் காதலில்

நடப்பதைப் கூர்ந்து 
கவனித்து பார்த்தால்
தனிமை ஒன்றே
போதும்அடி !

               என் உயிரும்!
என் உயிரும் துடிக்கிறது  சகித்துக் கொண்டு
சில நேரம்!

கிழித்து போட்ட
காகிதம் போலத்தான்
நானும் ஒரு குப்பை தொட்டி
ஆகி விட்டேன்  என்றும்,
என் மீது காறி உமிழும்
எச்சம் வலியினைதந்தாலும்
ஏற்றுகொள்கிறேன் ,

பாவம் செய்ததை
நெஞ்சம் மறப்பதில்லை    என்றும்...


நான் மனிதனே இல்லை
என்று கூறி விட்டு
வெளியே போனாலும் சரி...


        என் வலி எனக்கு மட்டும்......
கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
வார்த்தை இல்லாமல் பேசினேன்!
கவலை இல்லாமல் வாழ்ந்தேன் நானே!

என் தாயின் கருவறையில்!
இன்றோ தனிமையில் விடப்பட்டேன் ?

காதலின் மாயையில் நானும் துளைந்தேன்
மாயமாகி என்னை நானே வஞ்சகம் செய்துவிட்டேன்....

என் துயரை மறக்க அழுதேன்!!
என் அழுகையை மறைக்க மழையில் எனை ஒழித்துக் கொண்டேன் !! -  மவுனமாக,
மவுனம்தனை மறைக்க விழிமுடலானேன்! - விழிமுடியதை மறைக்க தனிமையானேன்!!!
         

நான் இப்போது தனிமையின் காதலில் விழுந்தேன் ?
விழுவேன் என்று தெரியாமல்


இப்பொழுது
புரிந்து கொண்டேன்
என் அன்னையின்
கருவறையின்
சிம்மாசனம் தன்னில்
இராஜா  நான் - இன்றோ

ஓர் வியாபாரியின் கைப்பாவையாக சிக்கி
 சீரழிந்து -  உமிழும்
உமக்கு எம்மை மெழுகாய்
உதிர்ந்து ஒளி வீசியதில்
எனக்கோ சூடு 🔥 தான் மிஞ்சியது

எம் இளமையும் உதிரமும்
உறிஞ்சி சக்கையாக வீசியெறிந்து விட்டாய்
முதுமையில் தனித்து விடப்பட்டேன் ?


மீண்டும்  கருவறையில்
புகுந்து கொண்டேன்
என் அன்னையின் கருவறையிலும் அல்ல பூமாதேவியின் கருவறையில்!!!!!!
           
            "உங்கள் இராஜூ"
« Last Edit: May 27, 2024, 03:43:42 PM by Symphony »
Raju

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 197
  • Total likes: 420
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
   எதிர்ப்பார்த்த எல்லாம் ஏமாற்றத்தில் முடிந்தாயிற்றே ஆசைகளுமா எனது ஆரம்ப வாழ்க்கையும் தான் ..எல்லாருக்கும் எல்லாம் கிடைத்ததே எனக்கு மட்டும் ஏமாற்றம் தான் ..

விரும்பியவை யாவும் என்னை வந்து சாரவில்லை  ,அதை என்னால் அடையவும் இயலவில்லை துரதிஷ்டம். வாழ்கை பயணத்தில்  வெற்றிடமே வெற்றிபெற்றது வெறுமை என்னை ஆட்க்கொண்டது .

வெறுப்பை உழிந்து ஒதுக்கி வைத்தவர்களே ஏராளம். விளைவில் என் தனிமைக்கே அது மணி மகுடம்!! மனக்கவலையில் கூட மதி சிந்திக்காதே! தோற்றுப்போனேன் தொய்வின் உச்சத்தில் ...

.
சுற்றாரின் வளர்ச்சியோ  மேலோங்க நானும் முயற்சித்தேன் இன்றளவும் போராட்டமே தவிர இலக்கை அடைந்தபாடில்லை!!!
அதனாலயே  வெறுத்தேன் ஏனடா இம்மானுட பிறவியென!!!

ஏதும் நிலைக்காதென அறிந்தும் அதனால்  விரும்பி வருவதைக்கண்டு  விலகிசெல்ல மனம் நிர்ப்பந்திக்கிறதே! அகத்தில் அழுகையும் முகத்தில் புன்னைகையும் என இரு வேடமிட்டு கொள்கிறேன்...

எனது கண்ணீர்துளி மழைத்துளியில் கலந்து மண்னை மணக்க செய்கிறதே!!  மனத்திற்குள் ஒர் ஆனந்தம்.  மாற்றமும் இல்லை  மகிழ்வும்  இல்லை விதியென நினைத்து இருட்டில் தொடர்கிறது வாழ்கை!!!!!!!!  இவண் தனிமையின் காதலன் ..
« Last Edit: May 27, 2024, 06:39:51 PM by mandakasayam »

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 198
  • Total likes: 862
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


கண்ணிலே வழியும் கண்ணீரும்
தண்ணீராய் மழையில் கலந்ததே
காற்றிலே கலந்த இசையும்
ஒரு ஓசையாய் கூட கேட்கலையே ....

கண்முன் தோன்றும் காட்சியை காண
அந்த கடவுள் கொடுத்த கண்களும் - இன்று
கடந்த காலத்தை மட்டுமே காண்கிறதே
மனக்கண்ணின் வலிமை இது தானோ ??

பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டு
பெற்றெடுத்த மனமது பதரித்தான் போகுமே
படைத்தவன் மனமிங்கு கல்லாய் போனதோ
கதறி அழும் கூக்குரல் கேட்கலையோ ?

அழுத கண்களும் இங்கே அயர்ந்து போக
நடந்த கால்களும் இங்கே தளர்ந்து போக
இருந்தும் இல்லாதது போல் என் சுவாசமும்
மூர்ச்சையான உடல் போல் இங்கு சோர்ந்து தான் போக ...

உயிர் விட்டு நீங்கிய உடல் போல் இன்று
உலகமே ஸ்தம்பித்த நிலை தான் இங்கு
இனியும் இருந்து என்ன பயன்
இல்லாமல் தான் போவோமா ? என்று மனதுள் ஒரு போராட்டம் ....

அனைத்தும் முடிந்ததென மனமது முனுமுனுக்க
அசரீரியாய் என் குரல் எங்கோ ஒலிக்க ...
தண்ணீராய் போன என் கண்ணீரிலே
பிம்பமாய் என் முகமும் தெரிந்ததே ..

"கண்ணீருடன் காண்கையில் அனைத்துமே
கலங்களாய் தான் தெரியும்....
குழப்பத்துடன் யோசிக்கையில் அனைத்துமே
சிக்கலாய் தான் தோன்றும்......

தலை குனிந்து மண்ணை பார்த்தால்
உலகம் கூட சுருங்களாய் தான் தெரியும்...
ஆகாயம் அதை அண்ணாந்து பார்த்தால்
இருட்டை நீக்கும் ஒளியது தெரியும்...

படைத்தவன் என்றும் நம்மை
பட்டமரமாய் போக விடுவதில்லை
பாதைகள் பல வகுத்தவன் அவன்
பகுத்தறிவுடன் அதை கடப்போம் நாமே...

துவண்டு போன நெஞ்சமென்றும்
தோல்வியுடன் நிற்பதில்லை ..
முன்னேற துடித்த நெஞ்சத்தின் முயற்சியது
முடங்கியும் போனதில்லை ...


Offline Kavii

  • Newbie
  • *
  • Posts: 16
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
மழைக்காலத்தில் நிலா மறைந்து போனது
மௌனத்தின் ஆழத்தில் நானும் மூழ்கினேன்!

கண்ணீரில் தழுவிய இருள் கொண்டாடு
வலியின் கரையில் நான் நின்று கொண்டேன்!

வாழ்க்கையின் கனவுகள் சிதறியதுபோல்
உள்ளம் தாங்கும் சோகத்தில் மூழ்கினேன்!

நிழலின் மடியில் நான் ஒளிந்திருந்தேன்
துயரமும் சோகமும் என்னை ஆட்கொண்டது!

நேற்றின் நினைவுகளில் வாடியிருந்தேன்
நிம்மதியை தொலைந்து தவித்திருந்தேன்!

கனவுகள் கரைந்தே போனதுபோல்
வாழ்வின் சிக்கலில் துவண்டிருந்தேன்!

எல்லை மீறும் ஏக்கத்தின் குரல்களில்
விழிகளினால் நானும் மறைந்திருந்தேன்!

வெள்ளம் போல கண்ணீர், வாழ்க்கையின் வலியை வெளிப்படுத்தும். மௌனத்தின் மொழியில், என் இதயம் கதைக்கின்றது.

மழை துளிகள் விழும் நேரம், மனதின் சோகங்கள் துடைக்கின்றன.
இருள் சூழ்ந்த பாதையில், நம்பிக்கை ஒளி தேடுகின்றேன்.

மறுமொழியில் நான் கண்டேன் ஒளி!!

நிழல்கள் நம்மை சுற்றி, நம்பிக்கையை மறைக்கின்றன. ஆனால், ஒளி எங்கோ, என்னை அழைக்கின்றது.

நிழல்கள் மறைந்தாலும், நம்பிக்கை என்னை வழிநடத்தும். மழை துளிகள் விழும் நேரம், என் இதயம் புதிதாய் பிறக்கின்றது.

வாழ்க்கையின் சுழலில், நான் தேடுகின்றேன் சாந்தியை. கண்ணீரின் வழியே, நான் காண்கிறேன் உண்மையை.

மழை துளிகள் விழும் போது, என் மனம் சுத்தமாகின்றது. வலியின் வழியே, நான் வளர்கிறேன்.

எந்தன் உள்ளம் உறுதியாய் நிமிர்ந்தது!
முன்னேற காத்திருக்கும் புதிய வழிகள்!

விழிகளை உயர்த்தி பரந்த வானத்தை பார்த்தேன்!
விழிகளில் ஒளிந்த கனவுகளை காணப் பெற்றேன்!

தொலைந்த நிம்மதியை மீண்டும் தேடினேன்!
வாழ்வின் ஒவ்வொரு நொடியும் புதுவிதமாய் உணர்ந்தேன்!

வெற்றி எனது விதியை மாற்றும் அலை!
வாழ்வின் பயணம் தொடரும், உற்சாகத்தின் கலை!

முகம் திருப்பிய நேரங்களில் கூட!
விழிகளை உயர்த்து நிமிர்ந்து பார்ப்பேன்!

வாழ்க்கையின் சோகங்கள், என்னை தாழ்த்த முடியாது.
மழை துளிகள் போல, நான் மீண்டும் மலர்வேன்.!

தினமும் ஒரு புதிய காலை,! ஒரு புதிய தொடக்கம்!
நம்பிக்கையின் ஒளியில் வாழ்வதை மறக்காமல்!

வாழ்க்கை என்பது ஒரு பயணம், ஓர் அழகிய பரிசு!
சிரிப்பின் விளிம்பில் சந்தோஷம் விளைந்திடும்!

துயரத்தின் பின்னால் ஒரு ஒளியிருக்கும்!
அதை தேடுங்கள், அதில் நிம்மதி இருக்கும்!

மலர்ந்த கன்னங்களில் உதிர்ந்த தூய்மையைப் போல
வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகாகும்!

கடந்து செல்லும் எல்லா போராட்டங்களும்
நமக்கு புதிய சக்தி சேர்க்கும்!!

முடிவில்லா கனவுகளை விரும்பி வாழ்ந்திடுங்கள்!
உங்கள் பாதையில் ஒளியாய் வழிகாட்டும்!

இன்பமும் துன்பமும் சந்திக்கும் நொடிகளில்
உங்களின் தன்னம்பிக்கையை விடதிர்கள்!!

வாழ்வின் சிறகு விரித்து பறந்திடுங்கள்
அசாதாரணமான சந்தோஷத்தை அனுபவித்திடுங்கள்!!
வாழ்க்கை அழகாகும்!

Offline Mani KL

  • Newbie
  • *
  • Posts: 46
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
மேகங்கள் ஒன்று கூடி நிலத்தில்
மழைத்துளிகளாய்
தத்தலிக்கும்

துயரங்கள் ஒன்று கூடி கண்களில்
நீர் துளிகளாய்
தத்தலிக்கும்

மழைத்துளிகள் ஒன்று கூடி நீருற்றாக
கடலில் சங்கமிக்கும்
துயரங்கள் ஒன்று கூடி ஏக்கங்களாக
மனதில் சங்கமிக்கும்

மழை துளி
மண்ணில் பசுமையை உருவாக்கும்

கண்ணீர் துளி 
மண்ணில் மனிதனின் உயிரை உரமாக்கும்

மழை துளி 
மனிதனின் உயிர் எழுத்து

கண்ணீர்துளி
மனிதனின் தலையெழுத்து

மழைதுளி
தாராமல் மேகங்கள் இருந்ததில்லை

கண்ணீர் துளி
விடாமல் மனிதன் வாழ்ந்ததில்லை





« Last Edit: May 30, 2024, 03:28:36 PM by Mani KL »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 667
  • Total likes: 1852
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


தனிமையை உணரும் விதம் பல உண்டு...
நமை சுற்றி பெரும் கூட்டம் இருந்தாலும்..
நமக்கு மிக பிடித்தவர்கள் இல்லையெனில்..
நம் பித்து மனம் உணரும் வெறுமை.. தனிமையே..

ஏதோ ஒரு சூழலில் பிறந்த வீடு விட்டு..
உடன் இருந்த... சொந்த உறவுகளை துறந்து....
முகம் தெரியா.. மொழி புரியா.. தேசத்தில்....
செய்வதறியது.. குழம்பி தவிப்பதுவும் தனிமையே..

ஏதோ ஓர் தொலைதூர நெடு பயணத்தில்..
சற்றும் எதிர்பாரா நொடி பொழுது.விபத்துகளில்
தனியாகவோ.. அல்லது.. கூட்டத்தில் ஒருவராகவோ..
சிக்கி..... நிலை குலைந்து..... நிற்பதுவும் தனிமையே..

நிசப்தமான ஓர் தனி அறையில்.. கண்களை
கூச வைக்கும் ஒளியும்.. செவிப்பறை
கிழிய செய்யும் ஒலியும்.. சுற்றி இருந்தும்..
அதை உணரா.தியான நிலையும் தனிமையே.

மனிதனின் தனிமைகள் பல உண்டு எனினும்..
அதன் முடிவுகள் என்றுமே சமாதிநிலையல்ல..
தைரியமான.. தீர்க்கமான.. முடிவுகள்..கண்டு...
நன்மைகளோடு மலர்ந்த சில தனிமையுமுண்டு....

தனிமைகள் என்றுமே தனியாக நிற்பதில்லை..
அதனுடன்.. அலைபாயும் கலங்கிய மனதும்..
கடின தருணத்தை எதிர்கொள்ள துடிக்கும் மனதும்..
நாம் உணரும் தனிமையில்  கைகோர்த்து நிற்குமே..
 
தன் தனிமையை கையாள ஆள தெரிந்தவனோ....
தன்னை தானே செதுக்க கற்றுக்கொள்கிறான்..
தன் தனிமையை ஆழமாக சுவாசிக்க தெரிந்தவனோ..
இவ்வுலகை கைவச படுத்த கற்றுக்கொள்கிறான்.
 

« Last Edit: May 31, 2024, 01:29:59 AM by TiNu »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 360
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
தனிமை!!!

கவிதையின் பிறப்பு கவிஞர்களின் கற்பனை என்ற பொழுதிலும்,
 
அக் கற்பனையின் பிறப்பிடம் தனிமையே.

தனிமை! தழர்ந்து போனோரை தழைக்க செய்யும்,

தனிமை! தழைத்தோங்கி நிற்போரையும் தடுமாற செய்யும்.

தழைப்பதும், தடுமாறுவதும் அவர் அவரின் உள்ளத்தின் மன வலிமையை பொறுத்தது..

சில நேரங்களில் தனிமை என்னையும் புன்னகைக்க செய்யும் ,

என் உறவானவளின் நினைவுகளை உருவக படுத்த்தும், நேசம் கொண்ட அந்த நாட்களையும், நாட்கள் கடந்த நினைவுகளையும் நினைக்கயில்..

உறவே! என் தனிமை நிச்சயம் இனிமை, அதில் உன் நினைவுகள் நிறைந்திருப்பின்,

என் தனிமை எனக்கு வெறுமை, நீ என்னுடன் இல்லை என்ற வலியை நான் உணரும் தருணம்.

வலிகளில் பெரியது வறுமை, அதனினும் கொடுமை வலிகளை சுமந்த உள்ளங்களின் "தனிமை".

நான்  தனித்து இருக்கும் நொடியெல்லாம், என்னுள் தனிமையின் குரல் என்னை நினைவு  செய்யும்.  நீ  தனித்து விட்டாய், உன் வாழ்வின் மகிழ்ச்சி தனை இழந்து விட்டாய் என்று..

இவ்வுலகில் தனிமையை விரும்பாதோர் இருப்பின். அப்பெயர் பட்டியலில் முதல் பெயர் MNA........

உறவுகளே! தனிமை உங்களை ஆட்கொள்ளும் காலம் வரும் முன், நீங்கள் தனிமையில் சிலவற்றை தேடிக்கொள்ளுங்கள். 

தனிமையை நாமாய் தேடும் காலம் முழுவதும்,

நிச்சயம் தனிமை அது இனிமையே!!!! ❤️❤️❤️   MN-AARON......... ❤️❤️❤️❤️


Offline SweeTie

அவளின்  சாபமா  இது? இல்லை 
நான் செய்த  பாவமா? இல்லை 
காலத்தின்  தாண்டவமா? இல்லை
என்னை துரத்தும்  கர்மாவா?

ஈரைந்து திங்கள்  சுமந்த அன்னைக்கு 
நன்றியுள்ள   மகனாய் இருந்தேனா?
எனக்கு  வித்திட்ட தந்தைக்கு
இறுதிக் கடமைதான் செய்தேனா?

என் உடன் பிறப்புகளுக்கு   உற்ற 
சகோதரனாய்  என்ன செய்தேன்?
கட்டியவளை  நடுத்தெருவில் விட்டேனே!
பெற்ற  பிள்ளைகளை  விட்டெறிந்தேனே!

அன்று நான் செய்த  பாவங்கள்    என்னை விரட்ட
தனிமையில்  புலம்புகிறேன் இன்று 
பாவக்கணக்குகளை  தலைமேல் சுமக்கிறேன் 
இளமையின்  அகங்காரம்   முதுமையில் தெரிகிறது

நானே எல்லாமென்று   என்னை நம்பி வந்தவளை
பாரா முகங்காட்டி   காலால் அடித்தேனே
என் வாரிசுகளை  உருவாக்கிய  தேவதைக்கு
கைம்மாறு  செய்வதாய்  கண்டபடி திட்டினேனே !

இளமையும்  ஒருநாள்   முடிந்துபோகும்   என்பதை
உணராமல் போனேன்  அன்று.   
நான்  எய்த  அம்பு  என்னையே கொல்கிறதே !
நாதியற்று  நிர்க்கதியாக    நிற்கிறேன் இன்று



 

Offline Ishaa

  • Hero Member
  • *
  • Posts: 551
  • Total likes: 848
  • Karma: +0/-0
  • Faber est suae quisque fortunae
கண்களில் கண்ணீர் தீர்ந்தது
மனதில் பாரம் தீரவில்லை....
பேசிப்பேசி வார்த்தைகளும் தீர்ந்தது
மனதின் வலி இன்னமும் தீரவில்லை.....


தனியாக நின்றேன்
மழை துணையாக வந்தது
என் கண்ணீரோடே மழைத்துளி கலந்து
தரையில் விழுந்து தெரித்தது....


தரையில் தேங்கிய தண்ணீரில்
ஒரு முகம் தெரியக் கண்டேன்
சிரிப்பை இழந்த ஒரு முகம்
சந்தோஷத்தை இழந்த ஒரு மனம்....


அந்த முகத்தின்மேல் மழைத்துளிகள் விழ
அந்த முகம் கலைந்தது
சட்டென்று மழை நிற்கையில்
தெளிவாய் தெரிந்தது அம்முகம்

மழை போனதும் வெயில் எட்டிப்பார்த்தது
கண்ணீரோடு கலந்த மழைத்துளியும் வெயில் பட்டுக்கலைந்தது...