Author Topic: பாத வெடிப்பு நீங்க வழிமுறைகள்  (Read 622 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பாத வெடிப்பு நீங்க வழிமுறைகள்



அழகான
 பாதத்திற்கு எதிரி பித்த வெடிப்புதான். பாதங்களை சுத்தமாக
வைத்திருக்காவிட்டால் பித்த வெடிப்பு சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்
கொள்ளும்.
 
நீங்களும் அந்த பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? கவலையே
வேண்டாம். இந்த `டிப்ஸ்'களை பின்பற்றிப் பாருங்கள். நிச்சயம், மென்மையான,
மிருதுவான பாதத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.
 
* பப்பாளிப் பழத்தை
நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அது
உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து
வந்தால் பித்த வெடிப்பு படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும். மருதாணி
இலையையும் இதுபோன்று பயன்படுத்தலாம்.
 
* தரம் குறைந்த செருப்புகளை
பயன்படுத்துவதாலும் பித்த வெடிப்புகள் வரலாம். அதனால், செருப்பு உங்கள்
பாதத்தை பாதுகாக்குமா? என்பதை நினைவில் கொண்டு அதை தேர்வு செய்யுங்கள்.
 
*
 விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு,
அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும். இதை
பாத வெடிப்பு உள்ள இடங்களில் தடவி, சிறிதுநேரம் கழித்து கழுவி விடுங்கள்.
தொடர்ந்து இப்படி செய்து வந்தாலும் பாத வெடிப்புகள் மறையும். வேப்ப
எண்ணெயிலும் சிறிது மஞ்சள் தூளை கலந்து இதுபோன்று உபயோகிக்கலாம்.
 
*
 முக்கியமாக, பாதத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். தூங்கச் செல்வதற்கு
முன் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவி, பித்த வெடிப்பு பகுதிகளில்
தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். குளித்து முடித்ததும் பாதத்தில் ஈரம்
 இல்லாதவாறு துடைத்துக் கொள்ளுங்கள். மணல் பகுதியில் பாதுகாப்பான
செருப்புடன் நடந்து செல்லுங்கள்.
 
- இவற்றை பின்பற்றினால் பித்த வெடிப்பு காணாமலேயே போய்விடும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்