Author Topic: நாக்கை கடிச்சுகிட்டீங்களா...?  (Read 563 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நமது உடலின் மென்மையான பகுதியில் நாக்கும் ஒன்று. அந்த நாக்கை நாம் சாப்பிடும் போது, பேசும் போது அல்லது தூங்கும் போது தெரியாமல் கடித்துக் கொள்வதுண்டு. இத்தகைய நாக்கு கடி குணமடைய சிறிது நேரம் ஆகும். ஆனால் கடித்தப் பின் ஏற்படும் வலியை மட்டும் தாங்க முடியாது. சில சமயம் நாக்கு கடியால் புண் அல்லது அல்சர் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நாக்கு கடியை நாம் வீட்டிலேயே சரிசெய்ய முடியுமென்று மருத்துவர்கள் கூறி, சில வீட்டு மருந்தையும் கூறியுள்ளனர்.

நாக்கு கடியை சரிசெய்ய...

1. நாக்கு கடி என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல. மற்ற உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பை பார்த்தால், இது விரைவில் குணமடைந்துவிடும். எப்படியென்றால், வாயில் சுரக்கும் எச்சிலே எளிதாக அதனை விரைவில் குணப்படுத்திவிடும்.

2. எப்போது நாக்கை கடித்துக் கொண்டு, அதனால் புண் ஏற்பட்டு, இரத்தம் வருகிறதோ, அப்போது அந்த இடத்தில் உடனே ஐஸ் வைத்தால், வலி நின்று, இரத்தம் வருதலும் நின்றுவிடும்.

3. வாயை உப்புத் தண்ணீரால் கொப்பளிக்கலாம். அப்படி வெட்டுபட்ட இடத்தில் உப்பை வைத்தால் சிறிது நேரம் எரியும். ஆனால் அது ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் உப்பில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அது பாக்டீரியா மற்றும் பிற தொற்றுநோய்கள் வராமலும் தடுக்கும்.

4. உணவு உண்டப்பின், ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், தேனில் உள்ள மருத்துவ குணம் நாக்கு கடியை சரிசெய்யும்.

5. தண்ணீர் குடிக்கலாம். நாக்கு கடி மற்றும் வாய்ப்புண் ஆகியவை இருப்பவர்கள் குளிர்ந்த தண்ணீர் குடித்தால் அது சரியாகிவிடும்.

6. மேலும் நாக்கை கடித்துக் கொண்டு, அதனால் புண் ஏற்பட்டவர்கள் காரமான உணவுகளை உண்ண வேண்டாம். ஏனெனில் காரமான உணவு புண்ணை மேலும் பெரிதாக்குமே தவிர, விரைவில் குணமடைவது கூட தடைபடும்.

இந்த வீட்டு மருந்துகள் எல்லாம் நாக்குப் புண்ணை சரிசெய்யும். கடியானது சற்று ஆழமாக இருந்தால், அது சரியாக சற்று நாட்கள் ஆகும். பொதுவாக அத்தகைய நாக்கு கடி ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் சரியாகும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்