Hi இசைதென்றல் Rj, DJ's,
எப்பவும் போல இசைத்தென்றல் நிகழ்ச்சிய சிறப்பா தொகுத்து, இசை கோர்ப்பு செய்து அற்புதமா வழங்கிட்டு வர்ர உங்களுக்கு அன்பும் நன்றிகளும்.
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம்பெற்றிருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் உயிரே' . இந்த படத்திலிருந்து நான் கேட்க விரும்பும் பாடல் 'சந்தோஷ கண்ணீரே'
வணிகரீதியா ஒரு படமா மட்டுமில்லாம, ஹிந்தி தமிழ்னு இரு மொழிகள்லையும் Perfect music albumஆ வெற்றி பெற்ற திரைப்படமா உயிரே இருந்துச்சு. உருது மொழியில் அழகிய கவி வெளிப்பாடா உருவாகிய ஹிந்தியின் 'Dil se re' பாடலுக்கு சற்றும் குறையாத வகையில் தமிழில் பாடல்வரிகளை கவிஞர் வைரமுத்து வடிவமைச்சிருப்பார்.
ஒரு காதலனின் ஏக்கம், துக்கம், அவநம்பிக்கை, வலி மிகுந்த காதல்ன்னு அத்தனை உணர்ச்சிகளையும் இசையின் மூலம் வெளிப்படுத்தியிருப்பாங்க ரஹ்மானும் வைரமுத்துவும்.
கதை சொல்லிட்டே வந்து 'பூங்காற்றிலே' பாட்டு ஆரம்பிக்கும் பொழுது வரும் புல்லரிப்பு, தைய தையானு குதூகலிக்க வைக்கும் பாடல், நாணம் கொஞ்சும் நெஞ்சினிலேனு versatility காட்டிருப்பாரு ரஹ்மான்.
'என்னுயிரே என்னுயிரே' பாடல் பத்திலாம் விடிய விடிய பேசலாம் பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் சரி, இசையும், வரிகளும், Such a banger இந்த மொத்த ஆல்பமும்.
வாய்ப்பு கிடைச்சா நான் தேர்வு செய்த பாடல் ஒலிபரப்பாகும். ஒலிப்பரப்பானா கேட்டு ரசிக்கும் இசைக் காதலர்கள் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.