நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM) "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?
இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ அவர்களால் தொகுத்து வழங்கப்படும். இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.
1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் -
வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. அதற்கடுத்ததாக முழுமை செய்யப்பட்ட பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.
2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.
4.ஒருவர் மற்றவர் பெயரில் இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.
5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.
6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .
7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.
8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.
9.உங்களின் தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.