Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 395191 times)

Offline Madhurangi

கடல்...

கடலாக நன் இருந்தால் அலையாக  நீ வருவாய் பிரிவென்பதே நமக்கேதடா?
பூவாக நான் இருந்தால் மணமாக நீ உதிப்பாய் அழிவு கூட  ஒன்றாகவேயாடா?
கண நேர பிரிவு கூட யுகமென்பாய் நம் அன்புக்கு அழிவேதடா ?
நான் சிரிக்க நீ சொல்லும் பொய்கள் தரும் இன்பங்களுக்கு எல்லையேதடா?
கன்னம் சுருங்கும் வயதிலும் காதலுடன் கரம் பிடிக்கும் உன் அருகாமைக்கு ஈடேதடா?
உடலென்பது அழியுமென்றால் ,
நம் தீரா காதலின் நினைவுகளுக்கு முடிவேதடா ? 
பிரிவென்ற சொல்லை அகராதியில் நீக்க முறையிடுவோம் ஒன்றாகவேடா..

அடுத்த தலைப்பு - அகராதி

Offline VenMaThI



உலகத்தில் உள்ள
ஆயிரம் அகராதிகளில்
ஒரே அர்த்தம் கொண்ட ஒரு சொல்லுக்கு
ஒரு அகராதி எழுதும் அளவிற்க்கு
ஆயிரம் அர்த்தங்களை கொடுக்க
காதலால் மட்டுமே முடியும் ❤️❤️


அடுத்த தலைப்பு : நம்பிக்கை


Offline Tee_Jy

என் காதல் என்னும் அகராதியில் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
நான் வைத்த அளவுகடந்த நம்பிக்கை எங்கே...?என்று.

முடிவில்லா அகராதியினிலே முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

கண்டறிவேன் என்கிற நம்பிக்கையில்

முடிவில்லா தேடலுடன்....!!


அடுத்த தலைப்பு (தேடல்)...
« Last Edit: February 10, 2023, 09:55:32 PM by Tee_Jy »

Offline Sun FloweR

தவிப்புகளின் கூடாரத்தில்
சிக்கித் திணறும் ஏக்கங்களின்
வலி மிகுந்த கண்ணீர் துளிகள்
உணர்த்தி செல்கின்றன
வாழ்வின் தேடல்களை ..

அடுத்த தலைப்பு: கண்ணீர் துளிகள்

Offline Madhurangi

கண்ணீர் துளிகள்

கண்ணீர் துளிகளில் கஷ்டங்கள் கரைக்கும்
மனித மீன்கள் நாங்கள்...
எண்ண துளிகளின் நினைவுசிறைகளில்
கடந்தகாலங்களை மீண்டும் வாழ்ந்து
பார்க்கும் நாங்கள்...
நீர் துளிகளின் நிலையாமையை  ஒத்த
மனதை கொண்ட நாங்கள்...
மனிதமெனும் போர்வை அணிந்த
மிருகஜாதிதான் நாங்கள்...

அடுத்த தலைப்பு - நிலையாமை

Offline SweeTie

நிலையாமை  ஒன்றே  நிலையானது
நிலையான அனைத்துமே  நிலையற்றது
நிலையாமை அனைத்தும் நிலையென்று
நினைக்கும்  இந்த கண்கெட்ட மனிதர்க்கு
நிலையாமையே  உண்மையின்
நிதர்சனனம்  எனப்  புரிவது எப்போது ? 


அடுத்த தலைப்பு :    நிதர்சனம்   
« Last Edit: August 24, 2023, 03:30:37 AM by SweeTie »

Offline Madhurangi

நீ இல்லை எனும் நிதர்சனத்தை..
உன் நினைவுகள் தரும் வெற்றிடத்தை..
உன் பேச்சுக்கள்  இல்லாத மௌன இடைவெளிகளை..
உன் அருகாமை இல்லாத மொட்டை மாடி பௌர்ணமிகளை..
கை இடுக்கின் சிகரெட்டுகளுடனும்..
கண்ணோரத்தின் கண்ணீர் கசிவுகளுடனும்.
கடந்து போய்க்கொண்டு தான் இருக்கிறேன்..
என்ன செய்ய..
வாழ்வின் இறுதி  வரை வாழ வேண்டுமே..

அடுத்த தலைப்பு : வாழ்வு

Offline Patrick

தனியே ஒரு தீவில் , நமது வீட்டில்,, நாம்...
நமது காதலை இடையூறு செய்யாத இரண்டு செல்லப்பிராணிகள்.

ஊடல் சிறிது காதல் பெரிது ஓயாமல் செய்து களைத்த நம்மை இளைப்பாற்ற,
நம் வீட்டுத் தோட்டத்தில் உன் கன்னங்களைப் போன்ற ஆரஞ்சுப் பழங்கள்..
உன் முத்தங்கள் போன்ற தித்திப்பான இளநீர் தரும் மரங்கள்..


மாலை நேரங்களில் உன் மேனி போன்ற  மேகக்கூட்டங்களையும்,
இரவில் உன் கண்கள் போல் மின்னும் நட்சத்திரங்களையும்,
நாம் சேர்ந்து ரசிக்க,
மரங்களின் இடையே தூரிகள்..

அனைத்தயும் சொல்ல இடம் போதாதே...
சரி,
இப்படி வேண்டும் வாழ்வு!

இடையே வரும் வாழ்வின் போராட்டங்களை கொண்டாடுவோம்,
துன்பங்களை கடந்து நகர்வோம்..
காதல் செய்வோம், மெய்சிலிர்ப்போம்!




அடுத்த தலைப்பு ::: மணித்தியாலம்

Offline Madhurangi

குழந்தை மனம் குரங்கு குணம் கொண்ட என் நட்புக்காக..

மணித்தியாலங்களும் மாயமாய் மறையும் நல்ல நண்பனின் அருகாமையில்..
மரண காயங்களும் விரைவில் தழும்புகளாகும் அவன்தன் பேச்சினில்..
துறுதுறு பேச்சில் துயரங்கள் மறக்க செய்வான்..
வார்த்தை விளையாட்டுகளில்  வாடிய மனம் பூக்க செய்வான்..
தொலைபேசி பட்டேரிகளும் சார்ஜ் இழக்கும் நம்  மணித்தியால  கணக்கிலான  உரையாடல்களில்..
செல்லப்பிராணிகளில் தொடங்கி செவ்வாய் கிரகம் வரையும் எதையும் விட்டு வைத்ததில்லை நம் பேச்சுக்களில்.. 
வைரமுத்து  முத்துமாரின் பாடல் வரிகளின் பொருள் விளங்க செய்வான்..
பாடியே இடைவிடாது சிரிக்கவும் செய்வான்..
 
இப்படிக்கு
என்றும் உன் நட்பை மாத்திரமே எதிர் பார்க்கும் ஒரு உள்ளம்.

அடுத்த தலைப்பு : உள்ளம்

Offline SweeTie


என் உள்ளம்   உன்னிடத்தில் அல்லவா இருக்கிறது
திருப்பி கொடு என்று நானும் கேட்டதில்லை
உனக்கும்  அதில்  இஷ்டமில்லை  என்பது 
நீ  என்னோடு போடும்  சண்டைகளால்  புரிவேன்
என் காதல் திருடா!!   

கவிதை தலைப்பு :    திருப்பிக்கொடு

Offline VenMaThI


இறைவா
திருப்பிக்கொடு
கள்ளமில்லா மழலை பருவத்தை
கவலையற்ற குழந்தை பருவத்தை
சிரிப்பொலி நிரம்பிய சிறுவயது பருவத்தை
சீருடை விரும்பிய பள்ளிப்பருவத்தை
கனவுகள் நிரம்பிய கல்லூரிப்பருவத்தை
காலன் பின்நோக்கி நகர்ந்தால்
இந்தப்பருவங்கள் போதுமே
இனிமையாய் கழித்து கண் மூட....

அடுத்த தலைப்பு : பருவம்



Offline தமிழினி

 பார்வைகள் அற்ற நிலையில் கூட
அனைத்து பருவங்களும் அழகாகவே தெரிகின்றன
என் அருகில் பார்வையாய் நீ இருப்பதால்..

அடுத்த தலைப்பு : நினைவுகள்
என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤

Offline Ishaa

சில நேரம் அழகாகவும்
சில நேரம் அழுகையாகவும்
வருகிறது உன் நினைவுகள்...
உன்னை நினைப்பதா.
இல்லை மறப்பதா
என்று குழம்புகிறேன்...
உன்னை நினைத்து பொய்களில் வாழ்வைதைவிட...
உன்னை நினைக்காமலே வாழ்கிறேன்...
ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம் என்றாலும்
வாழ்க்கை போக்கில் போகிறேன்..
நான் வேண்டிய வாழ்க்கையை
ஒரு நாள் அடைவேன் என்ற நம்பிக்கையில்...

அடுத்த தலைப்பு: நம்பிக்கை

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1033
  • Total likes: 3411
  • Total likes: 3411
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நம்பிக்கை

திரும்ப திரும்ப
தலைப்புகளில் வருவது
மனிதன்
திரும்ப திரும்ப
தொலைத்து தேடுவதால் தானோ?

நம்பிக்கை
என்பது
அழிவைத் தடுக்கும்
ஆயுதம்,

நம்
எதிரிகளால்
அழிக்க முடியாத
உள் கோட்டை

****JOKER***

யார்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Minaaz

என்றோ ஒரு நாள் நிஜங்களாக.. இன்று நினைவுகளாக மட்டும் உன் மேல் நான் கொண்ட அதீத பேராசை..



ஆசை