மாங்கனியை பொருத்த மட்டில் எல்லா விடயமும் சமமானது
மோகூரின் வளத்தில் இருந்து பல விடயங்கள், சரித்திர கதை என்பதால் நிச்சயம் ஒரு போர் இருக்கனும், அதனால் கற்றுக் கொள்ளவும், கவித்திறனை கூர்மையாக்கிக் கொள்ளவும் ஏகப்பட்ட வாய்ப்பிருக்கு
என்ன எழுதும் போது நமக்கே நேர்மையாக எழுதனும், அதை மட்டும் செய்ய முனைந்தால் பலவிடயங்கள் கற்றுக் கொள்ள முடியும், எழுதனும் என்று எழுத கூடாது
இந்த பகுதியிலும் பார்த்திங்கன்னா, சில பகுதிகளை திருத்திய பதிந்திருக்கேன்
மற்றும், வெண்பா, விருத்தம், சிந்து கும்மி என்று மூன்று வகையா பிரிச்சு எழுதியிருக்கேன், இது எதுவுமே கண்ணதாசனின் காவியத்தில் இல்லை
ஏறு காதல் வயப்படுவது எவ்வளவு அழகான விடயம், அதனால் தான் கும்மி பாட்டு வச்சி, இனி காதல் அவனை கும்மியடிக்க வேற போகுது இல்ல

ஒவ்வொரு பா வகை கையாளும் போது அதற்கு ஒரு காரணம் இருக்கனும் என்று நினைத்தேன்