பெரும்பாலும் இது போன்ற கவிதைகளில் படக்கென ஒரு தொய்வு உண்டாகும், இந்த கவிதை அப்படியல்ல, அது சிறப்பு
ஆரம்ப பத்தியில் ஆ,அ முதலாக கொண்ட வார்த்தைகளை முதலாக கொண்டு எழுதியிருக்குறீர்கள் அதனை தவிர்க்கலாம் தேவையென்றால் சேர்ப்பதில் தப்பில்லை
//கோபமும் வெட்கமும்
ஒரே நேரத்தில்...
முதல் அன்பு
முதல் காதல்
முதல் நட்பு
மறக்க முடியாதது தான்
எப்படி மறந்தேன்??
//
இந்த வரிகள் பல சிந்தனைகளை என்னுள் கிளறிவிட்டன, நீங்கள் சொன்ன மூன்றிர்க்கும் நெருங்கிய தொடர்ப்புண்டு
கனவின் இன்னொரு புதிரையை அழகாய் சொல்லியிருக்குறீர்கள், ஒரு முகம் நமக்கு தெரிந்த மாதிரியே இருக்கும் யாரென ஊகிக்க முடியாது, சட்டென அது நமக்கு நன்கு தெரிந்தவர் போல இருக்கும், ஆனால் கனவை முன்னோக்கி நகர்த்தி பார்த்தால் முன்பு நமக்கு தெரிந்த முகமும் அதுவும் ஒன்றில்லை என்பது புலப்படும்
இது போன்ற கனவுகள் ஒரு விதத்தில் மிக சுகமானவை, நான் இழந்ததை எல்லாம் அப்படியே திரும்ப தந்துவிடும், அந்த நாள் முழுக்க அந்த போதையிலும் மகிழ்ச்சியிலும் இருக்க வைக்கும்
கொஞ்சம் ஆழமாய் யோசித்தால் இது போன்ற கனவுகள் நம் மூலை நம் மனத்தின் காயங்களுக்கு களிம்பு தடவ செய்யும் ஏற்பாடு, அதற்சமய வலி நிவாரணி, ஆறுதல், சோகத்த்லேயே அலையும் மனதை துள்ளல் கொள்ள செய்யும் 420 வேலை
என்னை பொருத்தமட்டில் இந்த கவிதையில் ஒரு சிறுகதைக்கான உபபிரதி() இருக்கிறது, அதனை கொண்டு கதையை எழுதலாம் நீங்கள் மிக சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்க முடியும்
வாழ்த்துக்கள்