Author Topic: வேர்ச்சொல் விளக்கங்கள்  (Read 3534 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
மொழி என்பது ஒலிகளின் கட்டமைப்பு, ஒரு குறியீட்டின் ஒலிக்குறிப்புக்களே வார்த்தைகள்
 
அப்ப‌டியான வார்த்தைக‌ள் எப்ப‌டி பிற‌ந்த‌ன‌ அத‌னின் வேர்ச்சொல் அல்ல‌து அடி சொல் என்ன‌
 
ந‌ம் முன்ன‌வ‌ர்க‌ள் அத‌னை எப்ப‌டி உருவாக்கி இருக்கிறார்க‌ள் என்று இந்த‌ திரியில் பேசுவோம்
 
ஒரு ப‌டைப்பில‌க்கிய‌த்தை வாசிப்பதற்கு, எழுதுவ‌த‌ற்கு இது போன்ற‌ புரித‌ல்க‌ள் மிக‌ அவ‌சிய‌ம், இந்த‌ வேர்ச்சொற்க‌ள் தெரியாம‌ல் ஒரு சொல்லை பிரிக்க‌ முடியாது, அது போல‌ ஒரு புது சொல்லை உருவாக்க‌ முடியாது
 
அருங்க‌லை சொற்க‌ளை உருவாக்கும் முன் இது போன்ற‌ வேர்ச்சொற்க‌ளை ஆய்ந்து அறிந்து உருவாகுவ‌தே சிற‌ப்பானதாக‌‌ இருக்கும்
அருங்க‌லை சொற்க‌ளை உருவாக்குகிற‌வ‌ர்க‌ள் முத‌லில் பிற‌மொழி சொல் என்ப‌தின் வேரை க‌ண்டு பிடித்து அத‌ன் பின் அத‌ற்கான‌ த‌மிழீடை செய்திருக்கிறார்க‌ள்
 
உதார‌ண‌மாக‌ பாவான‌ர்
 
காஃபி என்ப‌தை குள‌ம்பி என்று சொன்னார்
 
காஃபி எனும் சொல் காஃப் எனு சொல்லி இருந்து பிற‌ந்த‌ சொல், காஃபி கொட்டை பார்ப்ப‌த‌ற்கு குதிரையின் கால‌டி போல‌ இருக்கும் இல்லையா, ஆங்கில‌த்தில் அத‌னை காஃப் என்பார்க‌ள் இல்லையா, அந்த‌ காஃப் இல் இருந்துதான் காஃபி எனும் சொல் பிற‌ந்த‌தை, இந்த‌ வேரை தேடிப்பிடித்த‌ பாவான‌ர், குள‌ம்பி என்று த‌மிழீடு அமைத்தார்
 
வேர் சொல்லையும், ஒரு சொல்லுக்குள் உள்ள‌ ம‌ற்ற‌ அர்த்தைக‌ளை க‌ண்டு, வார்த‌தைக‌ளின் ஆழ‌ம் சென்று, புது நோக்கில் ப‌டைப்பில‌க்கிய‌ம் வ‌ரைவ‌தை அமைப்பிய‌ம் ஆத‌ரித்த‌து, அமைப்பிய‌த்தின் கோட்டாடாக‌ இதுவே அமைந்து போன‌து, அமைப்பித்தின் த‌ந்தையான‌ ச‌சூர் இது குறித்து ப‌ல‌ ஆய்வுக‌ள் செய்து க‌ட்டுரை எழுதினார்
 
இதே இழையில் அமைப்பிய‌த்தை ப‌ற்றி ஒரு அறிமுகத்தையும் பிற‌கு எழுதுகிறேன்

த‌ற்போது, ந‌ம‌க்கு அதிக‌மாய் ப‌ரிட்ச‌ய‌மான‌, அதிக‌மாய் ப‌ய‌ன்படுத்துகிற‌ மூன்று சொற்க‌ளின் வேரை பார்ப்போம்
 
1) ச‌ம்ப‌ள‌ம்
 
ச‌ம்பு + அள‌ம் = ச‌ம்ப‌ள‌ம்
 
ச‌ம்பு = ச‌ம்பா நெல்
 
அள‌ம் = உப்பு
 
அந்நாட்க‌ளில் வேலையாட்க‌ளுக்கு கூலியாக‌ அரிசியும் உப்புமே ஊதிய‌மாக‌ கொடுப்பார்க‌ள், உப்பிட்ட‌வ‌ரை உள்ள‌ள‌வும் நினை போன்ற‌வைக‌ள் அதை உறுதிப்ப‌டுத்தும்
 
ச‌ம்பும் அள‌மும் வ‌ழ‌ங்கப்ப‌ட்டதால் ஊதிய‌ம் ச‌ம்ப‌ள‌மான‌து
 
2) க‌ட்டாய‌ம்
 
க‌ட்டு + ஆய‌ம் = க‌ட்டாய‌ம்
 
க‌ட்டு = செலுத்த‌வேண்டிய‌
 
ஆய‌ம் = வ‌ரி
 
எந்த‌ ம‌றுத‌லிப்பும் ச‌மாளிப்பும் ஏமாற்ற‌லும் இன்றி செலுத்த‌ வேண்டிய‌ வ‌ரி, க‌ட்டாய‌ம் எனும் புது சொல்லாகி வேறு பொருள் பூண்ட‌து
 
3) வ‌ர‌லாறு
 
வ‌ர‌ல் + ஆறு = வ‌ர‌லாறு
 
வ‌ர‌ல் = வந்தது, வருவது, வருதல்
 
ஆறு = ந‌தி, வ‌ழி, 6
 
இதுவ‌ரை வ‌ந்த‌ பாதை என்ப‌தே வ‌ர‌லாறு
 

 
அன்புடன் ஆதி

Offline Gotham

Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #1 on: September 28, 2012, 06:15:49 PM »
நல்ல தொடக்கம் ஆதி.. தொடருங்கள்.
உங்களுடன் சேர்ந்து நாங்களும் தெரிந்து கொள்கிறோம் வேர்ச்சொல்லை.

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #2 on: September 28, 2012, 06:21:25 PM »
உடனடி பின்னூட்டத்திற்கு ஊக்கத்திற்கும் நன்றி கோதம்
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #3 on: September 28, 2012, 06:47:06 PM »
அங்கயற்கண்ணி

இந்த வார்த்தையில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன ?

சொல்லுங்கள் பார்ப்போம் மக்கா
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #4 on: September 28, 2012, 06:57:40 PM »
அங்கு , அயல் , கண்ணி  /அங்கு அயரும் கண்ணி


அங்கு அயரும் கண்ணி = பத்து
அங்கு அயல் கண்ணி =ஒன்பது  க் சேர்ந்த பத்து  ::) ::)
« Last Edit: September 28, 2012, 07:07:41 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #5 on: September 28, 2012, 07:14:31 PM »
அங் + க் +அயல் + கண் + ணி

இது பிரிதெலுதினால் வரும்னு நினைக்குறேன்  >:( >:( >:( >:( >:(
                    

Offline Elakia

  • Newbie
  • *
  • Posts: 12
  • Total likes: 0
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Today jolly Tomrw Galy
Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #6 on: September 29, 2012, 07:45:11 PM »
நல்ல தொடக்கம் ஆதி.. தொடருங்கள்.
உங்களுடன் சேர்ந்து நாங்களும் தெரிந்து கொள்கிறோம் வேர்ச்சொல்லை.


Yes nanum therinthu kolgiren
« Last Edit: September 29, 2012, 07:49:55 PM by Elakia »

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #7 on: October 01, 2012, 03:02:01 PM »
பின்னூட்ட ஊக்கத்து நன்றி குளோபல் ஏஞ்சல், இலக்கியா
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #8 on: October 08, 2012, 12:51:10 PM »
முயற்சிக்கு பாராட்டுக்கள் குளோபல் ஏஞ்சல்

அங்கயற்கண்ணி = அம் + கயல் + கண்ணி

மிக சிறப்பாக பிரித்து இருக்குறீர்கள்

தமிழ் மொழியின் இலக்கணம், க,ங, ச, ஞ‌

என்று எழுதுவதிலேயே கூட இருக்கும்

ம் அடுத்து க வந்தால் அது ங் ஆகிடும், க,ங

ம் அடுத்து ச வந்தா அது ஞ் ஆகும், ச,ஞ‌

ம் அடுத்து த வந்தால் அது ந் ஆகும், த,ந‌

ம் அடுத்து ப வந்தால் அது அப்படியே தான் இருக்கும் ப,ம என்பதே வரிசை

அம்க என்பது அங்க என்று மாறி இருக்கிறது

ல் முன் க எனும் வல்லினம் வர அது ற் என்று திரிந்தது

அங்கயல்கண்ணி என்பது அங்கயற்கண்ணி என்பதாக‌

சரி இப்போது எழுதுக்களை பிரித்தலுக்கு வருவோம்


த‌மிழ் மொழியின் எழுத்துக்க‌ளின் க‌ண‌க்கிட‌ற்ப‌டி, ஒற்றெழுத்துக்க‌ள் க‌ண‌க்கில் கொள்ள‌ப்ப‌டா

ஆத‌லால் அங்க‌ய‌ற்க‌ண்ணி என்ப‌தில் உள்ள‌ ங்,ற், ண் எழுத்துக்க‌ளின் க‌ண‌க்கில் வ‌ராது

அம், க‌, ய‌ற், க‌ண், ணி என்று ஆக‌, அங்க‌ய‌ற்க‌ண்ணி எனும் சொல்லில் மொத்த‌ம் 5 எழுத்துக்க‌ளே உள்ள‌ன‌

த‌மிழ் என்ப‌து மூன்று எழுது இல்லை, அது இரு எழுத்துத்தான் என்ப‌தை நினைவில் கொள்க‌

ச‌ரி, இனி அந்த‌ சொல்லில் உள்ள‌ சுவையான‌ பொருளை பார்ப்போம்

அம் + க‌ய‌ல் + க‌ண்ணி

அம் = அழ‌கு

கய‌ல் = மீன்

க‌ண்ணி = க‌ண், பொறி( க‌ண்ணி வைத்து பிடித்த‌ல் என்ப‌தை நினைவில் கொள்க‌ )

அழ‌கான‌ மீன்க‌ளை போன்ற‌ க‌ண்க‌ளை உடைய‌வ‌ள் என்ப‌தே அங்க‌ய‌ற்க‌ண்ணி என்ற‌ சொல்லின் பொருள்

அழ‌கான‌ மீன்க‌ளை போன்ற‌ க‌ண்க‌ளால் ஆடவ‌ர்க்கு க‌ண்ணி வைப்ப‌ள் எனும் பொருள் உண்டு

இதனை வேறு மாதிரியாகவும் பிரிக்க இயலும்


அங்கு + அயல் + கண்ணி

அங்கு = அந்த இடத்தில்( எங்கு ? )

அயல் = அயன்மை/அண்ணியம்

கண்ணி = கண்கள் உடையவள்

அங்கு விழிகளை இழந்தவள், எப்படி ஏதோ ஒரு ஈர்ர்ப்பின் காரணமாக இருக்கலாம்

ஒரு ஆடவனின் மீதான காதலாக அல்லது ஒரு பூ மீது உள்ள ஈர்ப்பாக, ஒரு குழந்தை மீது கொண்ட ஈர்ப்பாக, அல்லது அங்கு எதனையோ பார்த்து வேறு ஞாபகத்து சென்றுவிட்டவளாக இப்படி, இது ஒரு பொருள்


நான்நோக்கும் கால் நில‌ம் நோக்கும் எனும் குற‌ளை கூட‌ அந்த‌ ஒரு வார்த்தையில் பொருத்தி பார்த்துவிட‌ இய‌லும்

நான் கிண்ட‌லுக்காக‌ இப்ப‌டி சொல்வேன்

அங்கு + அய‌ல் + க‌ண்ணி

அய‌ல் = அய‌ன்ற‌

அங்கு + அய‌ன்ற‌ + க‌ண்ணி

க‌ணினி துறையில் வேலை பார்க்கும் பெண்க‌ள் இப்ப‌டித்தான் இல்லையா ?

க‌ணினியை உற்று பார்த்து அய‌ர்ச்சி கொள‌ல்

இனி சொல்வ‌து தான் கிண்டல்

மது அருந்தியதால் சொருகிய‌ விழிக‌ளை உடையவ‌ள்

காத‌ல‌ன் முத்த‌மிடும் போது விழி சொருகும் என்ப‌தை நினைவு கொள்க‌

ஒரு வார்த்தைத்தான் எத்த‌னை பொருள் பாருங்க‌ள், இந்த‌ ஒரு வார்த்தையில் இவ்வ‌ள‌வு பொருள் இருக்கு என்றால் ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வ‌ள‌வு பொருள் இருக்கும் தோழ‌ர்க‌ளே

இப்ப‌டி ப‌ட்ட‌ சொற்க‌ளை க‌விதையில் ப‌ய‌ன்ப‌டுத்தும் போது, ஒவ்வொரு வ‌சிப்பிலும், நாம் கொள்ளும் பொருளுக்கு ஏற்ப‌ க‌விதையின் பொருள் மாறும்

த‌மிழின் வ‌ள‌மையும், அத‌ன் வ‌ல்ல‌மையும் அப்ப‌டி

ஒரு உதார‌ண‌ம் சொல்கிறேன்

ப‌ள்ளி கால‌த்தில் எங்க‌ த‌மிழ‌ம்மா, க‌விஞ‌னை ப‌ற்றி எல்லோரை ஒரு க‌விதை எழுத‌ சொன்னாங்க‌

எல்லாரும் எழுதினோம், க‌விதைக‌ளை அவ‌ங்க‌கிட்ட‌ கொடுத்தும், என் க‌விதையை முத‌லில் எடுத்து, வ‌குப்புக்கு வாசித்து காண்பித்தாங்க‌, அவ‌ங்க‌ளுக்கு என் க‌விதைக‌ள் என்றால் பிடிக்கும், சால‌மோன் பாப்பையா ப‌ட்டி ம‌ன்ற‌ங்க‌ளில் அவ‌ங்க‌ளை பார்க்க‌ முடியும்

ச‌ரி நாம் விச‌ய‌த்து வ‌ருவோம்

அதில் இப்ப‌டி ஒரி வ‌ரி எழுதிட்டேன்

அவ‌ன் பேணாவின் முனையால்
காகித‌ம் க‌ற்பிழ‌க்கும்

வாசித்த‌வுட‌ன் என்ன‌டா இப்ப‌டி எழுதிட்டானு ஒரு கேள்வி வ‌ந்துடுச்சு

ச‌ட‌க்குனு அவ‌ங்க‌ அப்ப‌டி கேட்ட‌தும் என்ன‌ செய்வ‌துனு தெரிய‌லை ச‌மாளிக்க‌னுமே

உட‌னே சொன்னேன்,

அம்மா அது

க‌ற்பிழ‌க்கும் இல்ல‌

க‌ற்பிள‌க்கும்

எழுத்துப்பிழைனு, ந‌ம‌க்குத்தால் எழுத்து பிழை அலை அலையா வ‌ருமே, அதை சாத‌க‌மா ஆக்கிக்கிடேன்

அவ‌ங்க‌ளும் உட‌னே திருத்திட்டாங்க‌

வ‌குப்பு முடிஞ்ச‌தும் என்னை கூப்பிட்டு கேட்டேங்க

" உண்மையை சொல்லு நீ க‌ற்பிழ‌க்கும் என்று பொருள்ப‌ட‌த்தான‌ எழுதின‌ ? "

"ஆமாங்க‌மா"

"ம்...  நீ உட‌னே 'ள‌'வாய் மாற்றி அர்த்த‌ம் சொன்ன‌ வித‌ம் பிடிச்சிருந்த‌து, அத‌னால் தான் வ‌குப்பில் இதை ப‌ற்றி பேச‌ல‌" நு சொல்லி, இன்னும் ப‌ல‌ விச‌ய‌ங்க‌ள் சொன்னாங்க‌, அது எல்லாம் த‌ற்புக‌ழ்ச்சியா இருக்கும், இந்த உதாரணமே கிட்ட‌த்த‌ட்ட அப்ப‌டித்தான்

அத‌ற்கு பின் தான் உட்கார்ந்து யோசிச்சேன், த‌மிழின் வளமை எவ்வளவும் என்று, ஒரு எழுத்தை மாற்றி ஒரு கவிதையின் பொருளை மாற்ற முடிகிறது, தெய்வத்தமிழ் என்று சும்மாவா சொன்னங்க, எனக்கே வரம் தந்திருக்காளே

அடுத்து கோமாளி, ம‌டைய‌ர், அரைவேக்காடு எனும் சொற்க‌ளில் புதைந்திருக்கும் பொருளை ஆராய்வோம்

அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #9 on: October 15, 2012, 02:45:36 AM »
அய்யோ நான் இதெலலம் என் குட்டி வயசில படிச்சா ஞாபகம் வேற்றுமை உருபுகள் என்னமோன்னு ...  எனக்கு பயமா இருக்குங்க ....

உங்கள பத்தி இங்க அவசியம் பெசியாகணுமா.. பலவாட்டி யோசிச்சுட்டு பேசுங்கோ ...
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #10 on: October 15, 2012, 01:06:35 PM »
நன்றிங்க, யோசிச்சுத்தான் செய்றேன், செய்ததுக்கு அப்புறம் யோசிச்சாலும் மாற்றமுடியாது இல்ல‌

அரிய செயல் செய்யாவிட்டாலும் ஆகாத‌ செயல் செய்ய மாட்டேன்
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வேர்ச்சொல் விளக்கங்கள்
« Reply #11 on: October 15, 2012, 06:43:26 PM »
 :D