Author Topic: மிக்ஸ்ட் வெஜிற்றபில் சொதி  (Read 560 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மிக்ஸ்ட் வெஜிற்றபில் சொதி

தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் - 5,6 துண்டுகள்
கரட் - சின்னது - 1
உருளைக்கிழங்கு - 1
போஞ்சி - 5,6
தக்காளிப்பழம் - 2
சின்ன வெங்காயம் - 6,7 அல்லது பெரிய வெங்காயம் பாதி
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - 2 கப்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
தேசிச்சாறு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி சிறிதளவு (விரும்பினால்)
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை - சிறிதளவு

தாளிக்க விரும்பினால்

கடுகு - 1/4 தேக்கரண்டி
உழுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

மரக்கறிகளை சிறிய துண்டங்களாக வெட்டி எடுங்கள். வெங்காயத்தையும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள். மிளகாயை நீளவாட்டில் பிளந்து விடுங்கள்.

தேங்காயத் துருவலுடன் 1/2 கப் தண்ணீரர் விட்டு மிக்சியில் அடித்து கோப்பையில் வடித்து வையுங்கள். மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து, முதல் எடுத்த பாலுடன் கலந்து விடுங்கள். திரும்ப ஒரு கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து பால் கோப்பையில் கலந்துவிடுங்கள்.

அடுப்பில் வைக்கும் பாத்திரத்தில் தக்காளி தவிர்ந்த ஏனைய மரக்கறிகளைப் போட்டு வெங்காயம், பச்சை மிளகாய், வெந்தயம், சோம்பு, கறிவேற்பிலை, உப்பு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அவியவிடுங்கள். முக்கால் பாகம் அவிந்ததும் தக்காளியைச் சேர்த்து விடங்கள். இரண்டு நிமிடம் அவிந்ததும் தேங்காயப் பாலை ஊற்றி கலக்கிவிடவும்.

பால் திரளாமல் இருக்க அரை தேக்கரண்டி எலுமிச்சம்சாறு சேர்த்து கொதிக்கிடுங்கள். அடிக்கடி கலக்கிக் கொள்ளுங்கள். கொதித்துவர இறக்கி பரிமாறும் கோப்பையில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

தாளிக்க விரும்பினால் தாளிதத்தை கலந்து விடுங்கள்.

கமகமக்கும் பால் சொதி தயார்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்