Author Topic: ரஜினி ஹிட்ஸ்  (Read 35377 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #75 on: November 05, 2012, 08:08:26 PM »
பாடியவர்கள்: AR ரஹ்மான், Kash n' Krissy
வரிகள்: கார்க்கி


Arigaro Kuzaimasu

You want to seal my kiss
Boy You can't touch this
Everybody Hypnotic Hypnotic
Super Sonic
Super star can't can't can't get this

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு

கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

iRobo உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா
I am a super girl
உன் காதல் rapper girl

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் இஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் உன்னை அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்

Watch me robot shake it
I know you want to break it
தொட்டு பேசும் போதும்
ஷாக்கடிக்கக் கூடும் காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் பேட்டரி தான் தீரும்

மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
Shutdownனே செய்யாமல்
இரவினில் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேயத்தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என்
விதிகளை மறந்தேன்

எச்சில் இல்லா எந்தன் முகம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா
உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே

hEy Robo மயக்காதே
you wanna come and get it boy
Oh are you just a robot toy
I don't want to break you
Even if it takes to
kind of like a break through
you don't even need a clue
you be my man's back up
I think you need a checkup
I can melt Your heart down
May be if you got one
We doing that for ages
since in time of sages
முட்டாதே ஓரம்போ
நீ என் காலைச் சுற்றும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
நீ தேவையில்லை போ போ
(இரும்பிலே..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #76 on: November 05, 2012, 08:09:53 PM »
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து


காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா
நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்
தீம் தோம் தோம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்
தீம் தோம் தோம் மனதில் சித்தம்

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்

ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம்
பெண்ணே வா வா வா

காதல்காரா...
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே

காதல்காரி...
உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
அன்பே

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #77 on: November 06, 2012, 03:04:16 PM »
வரிகள் : கார்க்கி
பாடியவர்கள் : கீர்த்தி சகாத்தியா, ஸ்வேதா மோகன், தன்விஷா, யோகி.B


பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா

ஐசக அசிமோவின் வேலையோ ரோபோ
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ

ஹே ரோபோ... ஹே ரோபோ...
ஹே இன்பா நண்பா come -on Lets Go

பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா

ரோபோ நீ அஃறிணையோ
சிட்டி நீ உயர்திணையோ
மின்சாரம் உடலில் ரத்தம்
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்
வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சுண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
பவர் தான் உண்டு திமிரே இல்லை

சிக்கி முக்கி அக்கினி வழி வழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனே
ஏ... எஃக்கினிலே... பூத்தவனோ...
எங்களின் காதலை சேர்த்தவனோ
திருமணத் திருநாள் தெரியும் முன்னே
நீ எங்கள் பிள்ளையோ

சிட்டி சிட்டி ரோபோ - ஏ சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் - நீ பட்டுக் குட்டியோ

பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா

குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
காதலி இதுபோல் கிடையாதோ?

ஏ சொல்வதெல்லாம் கேட்டு விடும்
காதலன் இதுபோல் அமையாதோ?
தவமின்றி வரங்கள் தருவதனால்
மின்சார கண்ணனோ?

ஆட்டோ ஆட்டோக்கார - ஏ
ஆட்டோமெட்டிக்காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோகிராப்க்கா

பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #78 on: November 06, 2012, 03:04:44 PM »
வரிகள் : பா. விஜய்
பாடியவர்கள் : சின்மயி, ஜாவித் அலி


கிளிமஞ்சாரோ - மலைக்
கணிமாஞ்சாறோ - கன்னக்
குழிமஞ்சாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா.... அஹா...

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிளகு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத் தங்கச்சியே
யெங்கூடத்தான்இருக்கா
ஆளுயற அலிவ்பழம்
அப்படியே எனக்கா?

ஆக்கக்கோ - அடி கின்னிக்கொழி
அப்பப்போ - யென்னப் பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம் எண்ணிக்கோடி

கொடி பச்சையே எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை - ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை

இனிச்சக்கீரே அடிச்சக்கரே
மனச ரெண்டா மடிச்சுக்கிரே

நான் ஊற வைத்தக் கனி
என்னை மெல்ல ஆற வைத்துக் கடி

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி என்னவாசியே

என் தோல்குத்தாத பலா - றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில் வாசம் நீ

நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

ஆக்கக்கோ - நான் கின்ணிக்கோழி
அப்பப்போ - எண்ணப் பின்னிக்கோ நீ
இப்பப்போ - முத்தம் எண்ணிக்கோ நீ
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #79 on: November 06, 2012, 03:05:10 PM »
படம்: சந்திரமுகி
பாடியவர்கள்: பாலு, வைஷாலி
இசை: வித்யாசாகர்


அத்திந்தோம்
திந்தியும் தோம்தன
திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

ஆடாத ஜவ்வாது மணம் ஆடிடும் பொம்மி
ஆண்டவனை தாலாட்டிடும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மணம் துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத இடம் ஹஎங்கேடி பொம்மி
முத்தான முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டில பல கோடி நெஞ்ச நானும் புடிச்சேன்
அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

ஹே பொன்னி.... ஹே பொன்னி
ஹே பொன்னி.... ஹே பொன்னி

வட்ட வட்ட மொட்டுக்கள
தட்ட தட்ட வந்ததம்மா நதி காத்து
ஓ நதி காத்து
மொட்டு மொட்டு, மெல்ல மெல்ல
மெட்டு மெட்டு கட்டுதம்மா சுதி பாத்து
ஓ சுதி பாத்து

ஹே ஆட வைக்கனும் பாட்டு
சும்மா அசைய வைக்கனும் பாட்டு

கேக்க வைக்கனும் பாட்டு
நல்லா கிறங்க வைக்கனும் பாட்டு
இந்த பாட்டு சத்தம்
கேட்டு சுத்தும் பூமி
எப்போதூம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

சின்ன சின்ன தொட்டில் கட்டி
அம்மா சொல்லும் ஆரிராரோ இசைதானே
ஓ இசைதானே

ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி
ஆசைமெட்டு கட்டுவதும் இசைதானே
ஓ இசைதானே

ஹே ஆரு மானமே ஆரு
இங்க அனைத்தும் அறிந்ததாரு

அறிவை திறந்து பாரு
அதில் இல்லாதத சேரு
அட எல்லாம் தெரிந்ஞ்ச
எல்லாம் அறிஞ்ச ஆளே
இல்லையம்மாஆஆஆஆ

((துள்ளி துள்ளி ஓடிவரும்
வெள்ளிதுணை வெள்ளமெல்லாம் இசைதானே
ஓ இசைதானே
சொல்லி சொல்லி தாளாமலே
சொட்டும் மழை சொல்லும் சந்தம் இசைதானே
ஓ இசைதானே

உலகம் என்பது பூட்டு
அதை திறக்கும் சாவி பாட்டு

இறைவன் எங்கே காட்டு
அதை தெரியவைக்கும் பாட்டு
அட உன்னசுத்தி என்னசுத்தி
எங்கும் சங்கீதம்ம்ம்ம்ம்ம்ம்))

அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

ஆஆஆஆஆ
ஆடாத ஜவ்வாது மணம் ஆடிடும் பொம்மி
ஆண்டவனை தாலாட்டிடும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மணம் துள்ளிடும் பொம்மி

முத்தான முத்தாக தந்த பாட்டு படிச்சேன்

அவன் பாட்டு இல்லாத இடம் எங்கேடி பொம்மி
முத்தான முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டில பலகோடி நெஞ்ச நானும் புடிச்சேன்.

அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #80 on: November 06, 2012, 03:05:57 PM »
திரைப்படம்    சிவா
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஷோபனா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    வாலி   
வெளியானஆண்டு    1989 




 

ஆண்       :    அடி வான்மதி...என் பார்வதி...

          ஆரம்ப இசை                   பல்லவி

ஆண்       :    காதலி...கண் பாரடி...

ஆண்       :    அடி வான்மதி...என் பார்வதி...
                    காதலி...கண் பாரடி...
                    தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
                    அடி பார்வதி என் பார்வதி
                    பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா
                    பாடும் பாடல் அங்கே கேட்காதா

                    அடி வான்மதி...என் பார்வதி...

                  (இசை)                         சரணம் - 1

ஆண்       :    சின்ன ரோஜா இதழ்...
                    அது கன்னம் நான் என்றது...

பெண்      :    பாடும் புல்லாங்குழல்...
                    உன் பாஷை நான் என்று கூறும்...

ஆண்       :    கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்...
                    தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்

பெண்      :    தேன் தர மீண்டும்நீவர வேண்டும்..
                    கண்வாசல் சார்த்தாது வா...ஆ...

                    ஒரு வான்மதி...உன் பார்வதி...
                    காதலி நீ காதலி தேவன் எந்தன் தேவதாசை
                    காண ஏங்கினேன் என் தேவதா...ஸ் என் தேவதா...ஸ்
                    பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே
                    பாரு நானும் உன்னை பார்த்தேனே

                    ஒரு வான்மதி...உன் பார்வதி...
 
                (இசை)                          சரணம் - 2

பெண்     :     கோடை காலங்களில் குளிர் காற்று நீயாகிறாய்...
 
ஆண்      :     வாடை நேரங்களில் ஒரு போர்வை நீயாக வந்தாய்

பெண்     :     கண்கள் நாலும் பேசும் நேரம்
                    நானும் நீயும் ஊமை ஆனோம்

ஆண்     :      மைவிழி ஆசை கைவளையோசை...
                    என்னென்று நான் சொல்லவா...ஆ...

                    அடி வான்மதி...என் பார்வதி...
                    காதலி...கண் பாரடி...தேடி வந்த தேவதாசை காண ஓடிவா

பெண்    :      என் தேவதா...ஸ் என் தேவதா...ஸ்
                   பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே...

ஆண்    :      அஹா...

பெண்    :      பாரு நானும் உன்னை பார்த்தேனே...

                    அடி வான்மதி...என் பார்வதி...

பெண்    :      தேவதா...ஸ் என் தேவதா...ஸ்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #81 on: November 06, 2012, 03:06:23 PM »
திரைப்படம்    அடுத்த வாரிசு
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஸ்ரீ தேவி
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    S.ஜானகி
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    பஞ்சு அருணாச்சலம் 
இயக்குநர்    எஸ்.பி.முத்துராமன்      ராகம்     
வெளியானஆண்டு    1983     தயாரிப்பு 
   

 



பெண்        :  லா லலலா...லல லா... (இசை)

ஆண்         :  காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம்
                    தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா

பெண்        :  பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
                    தீராத மோகங்கள் தீராமல் தீரும்

ஆண்         :  ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

பெண்         :  ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

பெண்குழு   :  துது துத் துத் து  து..தூ....துது துத் துத் து  து..தூ
                    லலலலா  லலலா...லலலா..லலலலா  லலலா...
                    லலலலா  லலலா...லலலா..லலலலா  லா...

                  (இசை)                          சரணம் - 1

பெண்         :  இருவர் ஒருவர் எனைத்தானே ....உறவினில் இணைவோமே

ஆண்         :  பருவம் கனிந்த புதுத்தேனே.....பழகிக் களிப்போமே

பெண்         :  உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே

ஆண்         :  இனிக்கும் இதழில் அமுதம் பருக பருக சுகமே

பெண்         :  ஆனந்தம் உல்லாசம்

ஆண்         :  வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ

பெண்         :  ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
                     ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஆண்         :  சைய்யா மோரே கோயா ஏ தேகோ ஏ தேகோ
                    சைய்யா மோரே கோயா ஏ தேகோ ஏ தேகோ
                    காலி கடா சாரி தேகோனா
                    காலி கடா சாரி தேகோனா
                    ஆஜா சைய்யா அரே மோரே கோயா

                         (இசை)                          சரணம் - 2

ஆண்        :  குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே

பெண்        :  கொடியும் படர்ந்துவரும் கண்ணா படரும் கிளை நீயே

ஆண்        :  சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா

பெண்        :  அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா

ஆண்        :  ஆனந்தம் உல்லாசம்

பெண்        :  வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ

ஆண்        :  ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

பெண்        :  ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஆண்        :  காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம்
                   தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா

பெண்        :  பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
                   தீராத மோகங்கள் தீராமல் தீரும்

ஆண்         :  ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

இருவர்      :  ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #82 on: November 06, 2012, 03:06:54 PM »
திரைப்படம்    அதிசயப்பிறவி
கதாநாயகன்    ரஜினிகாந்த்     
கதாநாயகி    கனகா
பாடகர்கள்    மலேசியா வாசுதேவன்     
பாடகிகள்    சித்ரா
இசையமைப்பாளர்    இளையராஜா     
பாடலாசிரியர்கள்    வாலி 
இயக்குநர்    எஸ்.பி.முத்துராமன்         
வெளியானஆண்டு    1990 


பெண்     :  தந்தனா..னா...

ஆண்      :  ஏய்..என்னாச்சு உனக்கு

பெண்     :  ஹ..ஹா..

ஆண்      :   இங்க பார்ரா....ஹஹ்ஹ

பெண்     :  ஹ.ஹ.ஹா..ம்..ஹு..ம்...ஹும்
                  ஹ ஹா..ஹஹா... (இசை)

பெண்     :  உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
                 உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
                 சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

ஆண்     :  உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
                 உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்
                 சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

பெண்     :  உன்னப் பார்த்த நேரம்

ஆண்      :  ஹஹா..

பெண்     :  ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
                 உன் கண்ணு பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

                     (இசை)                          சரணம் - 1

ஆண்     :  ஒத்த விழியால பேசுற
                 ஒண்ணுரெண்டு பானம் வீசுற
                 சொப்பனத்தில் மூச்சு வாங்குற
                 சொல்லமுடியாம ஏங்குற

பெண்     :  ஏனய்யா அந்த மாதிரி ஏங்கணும் நடுராத்திரி
                 தேனைய்யா இந்த மாம்பலம் தேவையா எடு சீக்கிரம்
                 அச்சமும் விட்டு தான் வந்துட்ட சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட
                 அதை விட்டு தள்ளு என்னை கட்டிக்கொள்ளு

ஆண்     :  உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும் ஹேய்
                 உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்
                 ஏ..சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

பெண்     :  உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
                 உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

                     (இசை)                          சரணம் - 2

பெண்     :  தென்னமரக்கீத்து ஆடுது தெக்கு தெசை காத்து பாடுது
                 என்னை மெதுவாக தீண்டுது உன்னை என சேர தூண்டுது
                 ஆசைய அடை காக்குற, யாரையோ எதிர் பாக்குற
                 காதலை அள்ளி வீசுற, காளைய கட்டப் பாக்குற

பெண்     :  என்னைய்யா செய்யட்டும் பொண்ணு நான்

ஆண்     :  ஹ..ஹ

பெண்     :  தூக்கத்தை விட்டது கண்ணு தான்

ஆண்     :  ஒரு வேகமாச்சா ரொம்ப தாகமாச்சா

பெண்     :  உன்னப் பார்த்த நேரம்

ஆண்     :  ஹேய்

பெண்     :  ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்

பெண்     :  உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
                 சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

ஆண்     :  உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
                 உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #83 on: November 06, 2012, 03:07:25 PM »
திரைப்படம்    அருணாச்சலம்
கதாநாயகன்    ரஜினி காந்த்     
கதாநாயகி    சௌந்தர்யா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     
இசையமைப்பாளர்    தேவா     
பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    சுந்தர்.சி     
 வெளியானஆண்டு    1997     



சுலோகம்
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா

    பல்லவி

அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா (இசை) -ஹா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
ஆண்டவன் நடத்திடுவாண்டா


ஆண்குழு    : ஹோய் ஹோய் ஹோய்
அருணாசலம் நடந்திடுவாண்டா
ஆண்குழு    : ஹோய் ஹோய் ஹோய்
நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா
ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா ஆஹ
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா

(இசை)                         சரணம் - 1

ஆண்குழு    : ஹோய் ஹோய் ஹோய்
                   ஹோய் ஹோய் ஹோய் (இசை)

என் கண்ணிரண்டையும் காப்பாத்தும் கண்ணிமையும் நீதான்
என் தோள்களிலே முழுப்பலமாய் உள்ளவனும் நீதான்
என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான்
என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான்

ஆண்குழு    : ஹோய் ஹோய் ஹோய்
                   ஹோய் ஹோய் ஹோய்

ஆஹா..இன்னுயிராய் வந்தவனே என் உயிரும் நீதான்
என் இருதயத்தில் துடிதுடிப்பாய் இருப்பவனும் நீதான்
எண்ணம்போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான்
என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான்
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா
இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான்
உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா
நீயும் நானும் நானும் நீயும்
நிறத்தால் குணத்தால் ஒண்ணுடா ஆஹா

அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
ஆண்குழு    : ஹாஹாஹாய் ஹய் ஹய் ஹய் ஹய்
                   ஹாஹாஹாய் ஹய் ஹய் ஹய் ஹய்

       (இசை)                    சரணம் - 2

ஆண்குழு    : ஹோய் ஹோய் ஹோய்
                   ஹோய் ஹோய் ஹோய் (இசை)

தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு
நீ தனி தனியா கோயில் குளம் அலைவதும் எதுக்கு
அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து
ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நடத்து

ஆண்குழு    : ஹோய் ஹோய் ஹோய்
                   ஹோய் ஹோய் ஹோய் (இசை)

காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாத்தான் மதிப்பு - அட
காவித் துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு
பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தாத்தான் மதிப்பு
நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாத்தான் மதிப்பு

ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா

தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான்
பிறர்க்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான்
உன்னை விடவும் எனக்கு வேறு உறவு இல்லையடா என்னை
என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா

ஹா- அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
ஆண்டவன் நடத்திடுவாண்டா
ஆண்குழு    : ஹோய் ஹோய் ஹோய்
அருணாசலம் நடந்திடுவாண்டா
ஆண்குழு    : ஹோய் ஹோய் ஹோய்
நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா
ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா ஆஹா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா ஆஹ
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா
அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தண்டா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #84 on: November 06, 2012, 03:07:59 PM »
திரைப்படம்    அருணாச்சலம்
கதாநாயகன்    ரஜினி காந்த்     
கதாநாயகி    சௌந்தர்யா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்         
இசையமைப்பாளர்    தேவா     
பாடலாசிரியர்கள்    வாலி 
இயக்குநர்    சுந்தர்.சி





தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

உன் தந்தை தெய்வம் தானடா
ஆ.. ஆ.. ஆ..ஆஆஆஆ
உன் தந்தை தெய்வம் தானடா
ஆ.. ஆ.. ஆ..ஆஆஆஆ

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

    இசை சரணம் - 1

ஹே.....மேகங்கள் அதுபோல்
சோகங்கள் கலைந்தோடும்  ஆ...ஹா
நீ போகும் பாதையெல்லாம்
நியாயங்கள் சபையேறும்
என்னாளும் உன்னோடு
உன் அன்னை மனம் வாழும்
தெய்வங்கள் அருளோடு
திசையாவும் மலர் தூவும்

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

ஏ..ஏ.ஏ..ஏ..ஏ…..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #85 on: November 06, 2012, 03:08:27 PM »
திரைப்படம்    அருணாச்சலம்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     
கதாநாயகி    சௌந்தர்யா / ரம்பா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     
பாடகிகள்    சித்ரா
இசையமைப்பாளர்    தேவா     
பாடலாசிரியர்கள்    பழனி பாரதி 
இயக்குநர்    சுந்தர்.சி         
வெளியானஆண்டு    1997 



பெண்         :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை

பெண்-1      :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை
         
ஆண்          :   கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி
                       வழி வழி வழி விட்டு விலகடி
                       இடுப்பு மடிப்பில் அல்ல மடக்கும்
                       ஹேய் வேதவள்ளி

                       மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                       மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                       அம்பிகை ராதிகை தேவகை மேனகை

ஆண்குழு    :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                        மாத்தாடு மாத்தாடு மல்லிகை

பெண்          :   பல பல பல ரெண்டு தினம் பல
                        நிறம் நிறம் நிறம் நீல கண்ணின் நிறம்
                        பொம்பல மனசு சிரிச்சு பரிச்சு
                        ஹேய் அருணாச்சலம்

                        மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                        மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                        சின்னையா கண்ணையா செல்லையா சொல்லையா

பெண்குழு   :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                       மாத்தாடு மாத்தாடு மல்லிகை

         (இசை)                         சரணம் - 1

பெண்          :   அப்பாவி ஆனாலும் அடிமேல அடிவாங்கம்
                        அடிச்சாலும் ஊர்கூடி ஆஹானு சொல்லுது என்னது

பெண்குழு   :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                       மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்           :   அடிமேல அடிவாங்கி அனைவரையும் சொக்கவைக்கும்
                        மேளக்காரன் கொண்டுவந்த மிருதங்கம் தான் நீ சொன்னது

ஆண்குழு    :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்           :   அய்

ஆண்           :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை

                        ஒல்லி ஒல்லி சுப்பன்தான் ஒத்தக்காலு கருப்பன்தான்
                        ஒருக்காலு இருந்தாலும் ஒனருது மேடையிலே யார் அது

ஆண்குழு    :    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                        மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்           :    ஹான்...

பெண்          :    ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தகாலு கருப்பையா
                         நீ சொன்ன ஜாடையில்லாம் ஊத்துபத்திதான் அது

பெண்குழு   :    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                        மாத்தாடு மாத்தாடு மல்லிகை

                    (இசை)                         சரணம் - 2

பெண்          :    தாளம் இல்லா ஆட்டம் அது தப்பான ஆட்டம் அது
                         பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது
                         என்னது, என்னது

பெண்குழு    :    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                         மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்           :    சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது
                         பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான்
                         அது  சொன்னது

ஆண்குழு    :    மாத்தாடு மாத்தாடு மல்லிகை, ஹோ.....ஹோ....
                         மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்           :    மூனுபிடி மூன்னு நிறம் மூனுக்குமே வீர குணம்
                         கூண்டுகுள்ள போட்டதுமே அத்தனையும்
                         செவப்பு நிறம் என்ன ஏது

ஆண்குழு    :    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                        மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்           :    ஹான்
 
பெண்          :    வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டி வெச்ச கருப்பாக்கும்
                        ஒன்னாக சேரும்போது செவக்கிற தாம்பூழம்  தான் அது

பெண்குழு    :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                         மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்குழு     :   லேலே...

பெண்குழு    :   அய்யே

ஆண்குழு     :   லேலே...லேலேம்மா

ஆண்குழு     :   லேலோ...

பெண்குழு    :   அய்யே

ஆண்குழு     :   லேலே...லேலேம்மா

                          (இசை)                         சரணம் - 3

பெண்           :   ஒருத்தனுக்கு கைகொடுத்தா ஒருத்தனுக்கு கால் கொடுத்தா
                         ஒருத்தனத்தான் மாறோட கட்டிக்கிட்டா பொம்பள யார் அது

பெண்குழு     :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                         மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்            :   ஹான்

ஆண்            :   வளையலுக்கு கை கொடுப்ப கொலுசு தான்  கால் கொடுப்பா
                        முந்தனை சேலையத்தான் மாறோட கட்டிக்கிட்டா, பொம்பள

ஆண்குழு     :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்            :   ஏலோ ஏலோம்மா

ஆண்குழு     :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்            :   ஜய் ஒருத்தனத்தான் கழட்டிபுட்டா ஒருத்தனத்தான் கட்டிபுட்டா
                         ஒருத்தனத்தான் கையோட வெச்சிக்கிட்டா பொம்பள யார் அது

ஆண்குழு     :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                         மாத்தாடு மாத்தாடு மல்லிகை

ஆண்            :   இழங்கன்ன கழட்டிபுட்டு பசுமாட்டை கட்டிபுட்டு
                         கையோட வச்சிருந்தா பால் சொம்பூதான் அது வேறது

ஆண்குழு      :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                         மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                         பலம் பலம் பலம் ரெண்டு பீமன் பாலம்
                         நிறம் நிறம் நிறம் நீல கண்ணின் நிறம்
                         அவன ஜெயிக்க யாரும் இல்ல
                         அவன்தானடி அருணாச்சலம்
 
ஆண்குழு      :   மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                         மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                         மாத்தாடு மாத்தாடு மல்லிகை
                         மாத்தாடு மாத்தாடு மல்லிகை ஏய்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #86 on: November 06, 2012, 03:09:05 PM »
திரைப்படம்    ஊர் காவலன்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     
கதாநாயகி    ராதிகா சரத்குமார்
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்     
இசையமைப்பாளர்    இளையராஜா     
பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    மனோபாலா         
வெளியானஆண்டு    1987



      எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
      உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
      இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
      எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
      உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
      இந்த நியாயம் அநியாயம்  ஒரு நாள் ஜெயிப்பேனே

           (இசை)                         சரணம் - 1

     பச்சக்கிளிக்கொரு வெள்ளப் புடவைய
     தர விடுவேனா கோயில் சிலையொன்னு
     குப்பையிலே செல்ல விட்டுவிடுவேனா
     ஊரு சொல்லும் பேச்சில் உண்மை இருக்கா
     உண்மை சொல்லப் போனா வம்பு வழக்கா
     அறிவுக்கு மேலே சக்தியிருக்கா
     அன்புக்கு மேலே பக்தியிருக்கா

      எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
      உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
      இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே

              (இசை)                         சரணம் - 2

      சந்திரன் சூரியன் மாறி உதிக்கட்டும்
      சத்தியம் தோற்காது சாதி சனம் இங்கு
      சந்தியில் பேசட்டும் தர்மங்கள் சாகாது
      உன்னை எண்ணித்தானே உயிர் வளர்ப்பேன்
      குங்குமத்தை நானா கொள்ளையடிப்பேன்
      நல்ல வழிக் கண்டு நலம் கொடுப்பேன்
      உள்ளபடி பெண்ணே உயிர் கொடுப்பேன்

      எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
      உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
      இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #87 on: November 06, 2012, 03:09:34 PM »
திரைப்படம்    ஊர் காவலன்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     
கதாநாயகி    ராதிகா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     
பாடகிகள்    சித்ரா
இசையமைப்பாளர்    இளையராஜா     
பாடலாசிரியர்கள்    வாலி 
இயக்குநர்    மனோபாலா       
வெளியானஆண்டு    1987



பெண்      :   ஓடுகிற மேகங்களா
                   ஓடைத் தண்ணி மீனுங்களா
                   கன்னி தான் கண்ணாலம் கட்டுறா
                   ஊரெல்லாம் தம்பட்டம் கொட்டுறா
                   மச்சானுக்கும் மணப்பொண்ணுக்கும்
                   மொய்யெழுத வாரீயளா (இசை)

பெண்       :  மாசி மாசந்தான்

பெண்குழு :  சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
     
பெண்       :  மேள தாளந்தான்

பெண்குழு :  சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

பெண்       :  மாசி மாசந்தான்

பெண்குழு :  சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
     
பெண்       :  மேள தாளந்தான்
 
பெண்குழு :  சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

ஆண்       :  மாசி மாசந்தான்
                  கெட்டி மேள தாளந்தான்
                  மாத்து மாலை தான்
                  வந்து கூடும் வேளை தான்

பெண்      :  பட்டு சேலை ரவிக்கை சொலி சொலிக்க
                  பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க
                  வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்

ஆண்      :   மாசி மாசந்தான்
                  கெட்டி மேள தாளந்தான்
                  மாத்து மாலை தான்
                  வந்து கூடும் வேளை தான்

                       (இசை)                  சரணம் - 1

ஆண்      :   பொட்டோடு பூச்சூடி பொஞ்சாதி வந்தாச்சு

பெண்      :   எம்புருசன் நீயாச்சு எம் மனசு போலாச்சு

ஆண்      :   நேரங்காலம் எல்லாமே  இப்பத்தானே தோதாச்சு

பெண்      :   சொந்தமுன்னு ஆயாச்சு சோகமெல்லாம் போயாச்சு

ஆண்       :   பூமுடிச்ச மானே பசுந்தேனே சுகந்தான்

பெண்      :   தொட்டு தொட்டு

ஆண்       :   ஹோய்..

பெண்      :   வரும் பந்தம் இது

ஆண்       :   தொத்திக் கொண்டு வந்த சொந்தம் இது

பெண்      :   ஆயிரம் காலங்கள் கூடுவது

ஆண்       :  மாசி மாசந்தான்
                  கெட்டி மேள தாளந்தான்
   
பெண்      :  மாத்து மாலை தான்
                  வந்து கூடும் வேளை தான்

ஆண்       :  ஆ..ஆ பட்டு சேலை ரவிக்கை சொலி சொலிக்க..
     
பெண்      :   பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க

ஆண்       :  வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்

பெண்      :   மாசி மாசந்தான்

ஆண்       :   கெட்டி மேள தாளந்தான்
   
பெண்      :   மாத்து மாலை தான்

ஆண்       :   வந்து கூடும் வேளை தான்

                         (இசை)                  சரணம் - 2

பெண்      :   ராசாவே உன்னாலே ராத்தூக்கம் போயாச்சு

ஆண்      :   பொன்மானே உன்னால பூங்காத்தும் தீயாச்சு

பெண்     :   அஞ்சு வகை பூபாணம் மன்மதனும் போட்டாச்சு

ஆண்      :   அந்திப் பகல் இனிமேலே கட்டிலறை பாட்டாச்சு

பெண்     :   நித்தம் இது போலே மடி மேலே விழவா

ஆண்     :   என்னாளுமே

பெண்     :  ஹா

ஆண்      :  இனி உன்னோடு தான்

பெண்     :  என் ஜீவனும்

ஆண்      : ஹ ஹா

பெண்      :  உன் பின்னோடு தான்

ஆண்      : நாளொரு நாடகம் ஆடிடத் தான்

பெண்     : மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்

ஆண்      : மாத்து மாலை தான் வந்து கூடும் வேளை தான்

பெண்     :  ஆ ஆ பட்டு சேலை ரவிக்கை சொலி சொலிக்க

ஆண்     :  பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க

பெண்     :  வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்
                 மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
                 மாத்து மாலை தான் வந்து கூடும் வேளை தான்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #88 on: November 06, 2012, 03:10:06 PM »
திரைப்படம்    ஜானி
கதாநாயகன்    ரஜினி காந்த்     
கதாநாயகி    ஸ்ரீ தேவி
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     
இசையமைப்பாளர்    இளையராஜா     
பாடலாசிரியர்கள்    கங்கை அமரன் 
இயக்குநர்    ஜெ.மகேந்திரன்     
வெளியானஆண்டு    1979 



செனோ ரீட்டா ஐ லவ் யூ  மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ..
செனோ ரீட்டா ஐ லவ் யூ  மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
செனோ ரீட்டா ஐ லவ் யூ  மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ


(இசை)                         சரணம் - 1

ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஏஹேஹே.. ஹாஹாஹாஹா..
ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஆனந்தம் ஒன்றல்ல  ஆரம்பம் இன்றல்ல
ஏஹேஹே.. எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சைக் கிள்ளுதே
அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்

செனோ ரீட்டா ஐ லவ் யூ  மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு  அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது


(இசை)                         சரணம் - 2

பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
ஹாஹாஹா.. ஹேஹேஹேஹே..
பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள்  துள்ளாதோ உள்ளங்கள்
ஏஹேஹே.. வானெங்கும் ஊர்வலம்  வாவென்னும் உன் முகம்
கண்டால் மயக்கம்  கலந்தால் இனிக்கும்

செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
பபாபாபா  லலாலாலா  எஹேஹேஹே  ஜுருருரு..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #89 on: November 06, 2012, 03:10:38 PM »
திரைப்படம்    தர்மதுரை
கதாநாயகன்    ரஜினிகாந்த்     
கதாநாயகி    கௌதமி
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்
இசையமைப்பாளர்    இளையராஜா     
பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    ராஜசேகர்     
வெளியானஆண்டு    1991



       
அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன
        சொல்லடி எனக்கு பதிலை
        நன்றி கொன்ற உள்ளங்களை
        கண்டு கண்டு வெந்த பின்பு
        என்னடி எனக்கு வேலை
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
        ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன் ஞானி
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
        ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன்  ஞானி

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன

         (இசை)                          சரணம் - 1

        ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில்
        வந்ததிங்கு வேதனையும் சோதனையும் தான்
        நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில் தான்
        பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில்
        வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடி
        எந்தன் நெஞ்சம் இங்கு நெஞ்சமல்லடி
        காருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசை என்ன
        நேருக்கு நேர் இன்று ஏய்த்திடும் மோசம் என்ன
        ஊருக்கு ஞாயங்கள் சொல்லிடும் வேஷம் என்ன
        உண்மையை கொன்றப் பின் நெஞ்சுக்கு நீதி என்ன
        போகும் பாதை தவறானால்       
        போடும் கணக்கும் தவறாகும்..ஓ..ஓ..ஓ

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன
        சொல்லடி எனக்கு பதிலை
        நன்றி கொன்ற உள்ளங்களை
        கண்டு கண்டு வெந்த பின்பு
        என்னடி எனக்கு வேலை
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
         ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன் ஞானி
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
        ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன்  ஞானி

       அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன   

              (இசை)                          சரணம் - 2

        தந்தையின் சொல் இன்று மந்திரம் தான் என்று
        கண்டதடி பிள்ளை எந்தன் உண்மை உள்ளமே
        எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே
        சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்
        வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன்
        இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்
        பட்டது பட்டது என் மனம் பட்டதடி
        சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி
        விட்டது விட்டது கைகளும் விட்டதடி
        கொட்டுது கொட்டுது  ஞானமும் கொட்டுதடி
        வானம் பார்த்து பறக்காதே
        பூமியில் பிறந்தாய் மறக்காதே..ஓ..ஓ..ஓ

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன
        சொல்லடி எனக்கு பதிலை
        நன்றி கொன்ற உள்ளங்களை
        கண்டு கண்டு வெந்த பின்பு
        என்னடி எனக்கு வேலை
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
        ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன் ஞானி
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
        ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன்  ஞானி

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன
        சொல்லடி எனக்கு பதிலை
        நன்றி கொன்ற உள்ளங்களை
        கண்டு கண்டு வெந்த பின்பு
        என்னடி எனக்கு வேலை

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன