Author Topic: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?  (Read 22582 times)

Offline thamilan

கடவுள் இருக்கிறாரா இல்லையா? இன்னும் புரியாத புதிர் தான் கடவுள். இருக்கிறார் என்று ஒரு கூட்டமும், இல்லை என இன்னொரு கூட்டமும் பிரசாரம் செய்கின்றனர்.
வாருங்கள் நாமும் கூடி விவாதிக்கலாம். மனதில் இருப்பதை இங்கே பயப்படாமல் பேசலாம்.
உங்களுக்கு பதில் சொல்ல நானும் தயாராக இருக்கிறேன்.
நான் இரண்டு பக்கத்துக்கும் எதிராக பதில் சொல்ல இருப்பதால் இதை நான் தொடங்கி வைக்கவில்லை

Arya

  • Guest

kadavul kandipa irukar
kadavul na maaperum sakthi irukum magic therunchurukum nu sola varala
Mathavankaluku ethirparpinri uthavura elorum kadavul than
Oruthar ratha thaanam pani oruvar uyirai kaapatrinal avaruku uyir thantha ivar kadavul than
Patiniyal vaadum oruvaruku unavitu avarin patiniyai pokiyavanum kadavul than
Than rathaththal pirithuvaikapatu avathipadum muthiyorai nan petror pola panividai seipavanum kadavul than
Petravarkalal thooki eriya pata mazhazhai yai than kuzhanthaiyaai paavipavanum kadavul than
Verum thozhil entru paaramal panathai paarkamal palarathu uyirai kaakum maruthuvan kadavul than
Thaai naatirkaka, thaai naatil vazhum makkalukaka than uyirai vidum por veeran kadavul than
Jaathi, matham paaramal poi koora theriyatha thavaru seiya theriyatha kuzhanthai kadavul than
Than varunthinaalum matravar varuthaththai pokki avarkalai sirika vaika muyarchipavan kadavul than
Thanaiye varuthi than rathathai unavaaka kodukum thaai kadavul than
Thanai vida arivaliyaka, thanaku kidaitha maryathaiyai vida ivan athikam peravendum ena ninaikum thanthai kadavul than
Naam uyir vaala than uyir vidum thaavarankal kooda kadavul than
Ithelam ilama nama uyir vaazha thevaiyana neer, nilam , kaatru pontra panchapoothankal kuda kadavul than


ithanai kadavulkal irukum pothu kovilil irupathu matumthan kadavul nu nenatchu mathasandai podurathu mooda nambikaikal vaikurathu thavaruthan


Pin kuripu:  Naan nathikan ilai , enaku kadavul mel nambikai undu
[/b]
[/color]

Offline thamilan

ஆரியா
நான் கேட்டது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தான். யார் கடவுள் என்று கேட்கல.நீங்க சொன்னபடி ஒருத்தருக்கு கஸ்டத்தில் உதவும் ஒவ்வொருவரும் கடவுளுக்கு சமானம். but அவங்க கடவுள் இல்ல.

ithanai kadavulkal irukum pothu kovilil irupathu matumthan kadavul nu nenatchu mathasandai podurathu mooda nambikaikal vaikurathu thavaruthan

நீங்க கோவிலில் கடவுள் இருக்கிறாரு என்று ஒத்துக் கொள்கிறீர்களா? இல்ல இல்லை என்று சொல்கிறீர்களா?

Mathavankaluku ethirparpinri uthavura elorum kadavul than
Oruthar ratha thaanam pani oruvar uyirai kaapatrinal avaruku uyir thantha ivar kadavul than
Patiniyal vaadum oruvaruku unavitu avarin patiniyai pokiyavanum kadavul than
ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடும் போது அந்த இன்னொருவர் இருப்பதாகத் தானே அர்த்தம்.

நாம் topica ப‌த்தி பேசுவோம். க‌ட‌வுள் இருக்கிறாரா இல்லையா?
இருந்த்தால் இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை சொல்லுங்க‌ள்,
இல்லை என்றால் அத‌ற்கான‌ கார‌ண‌த்தை சொல்லுங்க‌ள்

Pin kuripu:  Naan nathikan ilai , enaku kadavul mel nambikai undu

ச‌ரி க‌ட‌வுள் இருக்கிறார் என்று எதை வைத்து சொலுகிறீர்க‌ள்
« Last Edit: September 02, 2011, 12:31:00 AM by thamilan »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நம்மை மீறிய ஒரு அமானுஷ சக்தி இருக்கிறது .. அதன் ஆற்றல் ஆக்கம் எல்லாம் நம்மால் எடை போட முடியாத ஒன்றாக இருக்கிறது ... நம்மை கட்டுப் படுத்துகிறது ..... நம்மை வழி நடத்துகின்றது ... அதுவே கடவுள் என்றால் கடவுள் இருப்பது என்பது உண்மைதான் ..... நமக்கு எல்லாம் ஒரு தாய் தந்தை இருக்கும் போது... முதல் மனிதனுக்கும் ஒரு தாய் தந்தை இருக்கத்தானே வேண்டும் .. அந்த மனிதனை படைத்தவன் ஒரு அமானுஷ சக்தி உள்ளவன்தனே ...ஒரு சிறிய விதையில் ஒரு மரம் வளர்ந்து பூத்து காய்த்து கலகலக்கும் சூட்சுமத்தை வைத்தவன் எல்லாம் வல்லவனாகத்தானே இருக்க வேண்டும்... உன்னால் முடியுமா ? என்னால் முடியுமா ..? இல்லைதானே ... அப்போ அதை படைத்தவன் பிரமிக்கத்தக்க ஒரு சக்தி உள்ளவன்தனே .... அப்போ அது கடவுளாகதானே இருக்க முடியும் ..

ஆலயங்களில் கடவுள் இருகின்றத இல்லையா தெரியவில்லை ...  மனிதர்களுக்கு மனதை ஒரு வழிப்படுத்த ஒரு இடம் தேவை படிக்கிறது
அந்த இடமாக ஆலயத்தை பயன்படுத்துகின்றான் ... அங்கே எல்லாம் வல்ல சக்தியாகிய கடவுள் வாழ்வதாக நம்பிக்கை கொள்கிறான்
நம்பிக்கைதான் வாழ்க்கை ...கடவுள் இருக்கு நம்புவோம் .
                    

Offline thamilan

ஏஞ்சல்
நீங்க சொல்லும் சக்தி அது கடவுளாக இருக்கனும் என்று அவசியம் இல்லை. உல‌க‌த்தை ப‌டைத்த‌து இறைவ‌ன் என்று வேத‌ங்க‌ள் சொல்கின்ற‌ன‌. உல‌க‌ம் அணுக்க‌ளால் உருவான‌தாக‌ விஞ்ஞான‌ம் சொல்கிற‌து. இறைவ‌னை க‌ண்ணால் க‌ண்ட‌வ‌ர் எவ‌ரும் இல்லை.இறைத்தூதுவ‌ர்க‌ளான‌ யேசு, ந‌பிக‌ள் நாய‌க‌ம் இவ‌ர்க‌ள் கூட‌ க‌ண்ணால் க‌ண்ட‌தாக‌ ம‌த‌ங்க‌ள் சொல்ல‌வில்லை.
விஞ்ஞான‌ம் எல்லாவ‌ற்றையும் நிருபித்திருக்கிற‌து.
க‌ண்ணால் காணாத‌து நிஜ‌மா இல்லை உண்மை என்று நிருபிக்க‌ப்ப‌டுவ‌து நிஜ‌மா?

ந‌ம்மை மீறிய‌ ச‌க்திக்குப் பெய‌ர் க‌ட‌வுள் என்றால் மின்சார‌மும் க‌ண்ணுக்கு தெரியாத‌ ச‌க்தி தான். அது க‌ட‌வுளா? ந‌ம்மை மீறிய‌ ச‌க்தி என்று எதும் இல்லை. ந‌ம் ச‌க்திக்கு மீறிய‌ ச‌க்தி இருக்கிற‌து. ஒரு விமான‌த்தை க‌ண்டு பிடிப்ப‌து என‌து ச‌க்திக்கு மீறிய‌து. ஆனால் அதை இன்னொருவ‌ன் அவ‌ன‌து ச‌க்கியால் உருவாக்குகிறான்.
முத‌ல் ம‌னித‌னுக்கு தாய் த‌ந்தை இருந்த்திருக்க‌ வேண்டும் என்று சொல்லுகிறீர்க‌ள். இறைவ‌ன் ஒருவ‌னே, எல்லா வேத‌ங்க‌ளும் இதைத் தான் சொல்லுகின்ற‌ன‌. அப‌டி இருக்கும் போது நீங்க‌ள் சொல்லும் தாய் யார்?

ம‌னித‌ன் குர‌ங்கின் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி. விஞ்ஞான‌ம் இப்ப‌டிதான்
சொல்கிறது. ம‌னித‌ன‌து குண‌ங்க‌ளை பார்க்கும்போது அது உண்மையாக‌வே தெரிகிற‌து.

தாய் த‌ந்தை இல்லாம‌ல் குழ‌ந்தை இல்லை. அன்று அப்ப‌டித்தான் நினைத்தோம். ஆனால் ஒரு குழாய்க்குள் தாயும் இல்லாம‌ல் த‌ந்தையும் குழந்தையை உருவாக்கிக் காட்டிய‌து விஞ்ஞான‌ம்.

இன்னும் நிறைய‌ சொல்ல‌லாம். ம‌றுப‌டி தேவைப‌டும்.
ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை. அது உண்மை தான். க‌ல் ஒருவ‌னுக்கு க‌ட‌வுள். இன்னொருவ‌னுக்கு வாச‌ல்ப‌டி. அது அவ‌ர் அவ‌ர் ந‌ம்பிக்கை. அத‌ற்காக‌ ந‌ம்பிக்கையே உண்மையாகாது.

க‌ட‌வுள் இல்லை என்று ந‌ம்புவ‌தும் ஒரு ந‌ம்பிக்கை தானே ஏஞ்ச‌ல். அப்போ அது உண்மையா?


Offline Yousuf

ஏக இறைவனின் திருப்பெயரால்.....

இறைவன் இருக்கிறான் எனபது என்னுடைய வாதம் அதில் உறுதியாகவும் இருகின்றேன்.

முதலில் இறைவனை பற்றி நாம் விளங்கி வைதுருப்பது தவறு சிலர் இறைவனை மனிதர்களை போன்று கருதுகிறார்கள் மனிதனை இறைவன் ஆகுவதற்கு இது தான் அவர்கள் செய்யும் மிக பெரிய தவறு. தமிழன் இறைவன் இல்லாமல் இந்த உலகம் எப்டி வந்தது என்று சிந்திக்க வேண்டும். ஒரு கைபேசியை எடுத்து கொள்வோம் உதாரனதிரக்காக அந்த கை பேசி எப்படி வந்தது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். இதை ஒருவர் தயாரித்துள்ளார் என்று தானே சொல்வீர்கள் அது தானே பகுத்தறிவு. அந்த கைபேசியை தயாரித்த நபரை நீங்கள் பார்த்துள்ளீர்கள? பிறகு எப்படி அதை ஒரு நபர் தயாரித்துள்ளார் என்று கூறுவீர்களோ அதே போல் இந்த அகிலத்தையும் பாருங்க தமிழன் இப்படி பட்ட பிரமாண்டமான அகிலத்தை எப்படி தானாக தோன்றியது என்று கூற முடியும். ஒரு கை பேசி அதை விட ஒரு அற்ப பொருளான ஒரு சோறு எடுக்குற டப்பாவை எடுத்தாளும் அது தானாக தோன்ற முடியாது அதை படைக்க கூடிய படைப்பாளன் தேவை என்றிருக்கும் பொழுது இந்த உலகம் எப்படி இறைவன் படைக்காமல் தானாக தோன்றி இருக்க முடியும் இது தான் இறை மறுப்பாளர்களின் பகுத்தறிவா?

நீங்கள் சொன்னீர்கள் தமிழன் குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று அதை அறிவியல் பூர்வமாக இது வரை செயல்முறையில் யாரும் நிரூபிக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் சார்லஸ் டார்வின் உடைய இந்த கருத்து பொய் என்று தற்பொழுது அறிவியலாளர்கள் கூறுகிறாகள் இதை பற்றி விவரம் தேவை என்று நீங்கள் கூறினால் அடுத்த பதிவில் சமர்பிக்கிறேன். குரங்கில் இருந்து மனிதன் தோன்றினால் இப்பொழுது இருக்கும் குரங்கில் இருந்து மனிதல் தோன்ற வேண்டும் ஏன் தோன்ற வில்லை? அடுத்து குழந்தைகளை அறிவியல் பூர்வமாக (test Tube ) பேபி என்று சொல்ல கூடிய அறிவியலின் வளர்ச்சியின் காரணமாக உருவாகுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். எந்த ஒரு கருப்பொருளும் இல்லாமல் இவர்கள் குழந்தையை இவர்கள் உருவாகினார்களா? அல்லது ஒருவரின் விந்தணுவையும் பெண்ணின் அண்டனுவையும் வைத்து உருவாகினார்கள சற்று சிந்திக்க வேண்டும். எந்த ஒரு பொருளும் இல்லாமல் குழந்தையை அல்லது வேறு எதையும் மூல பொருள் இல்லாமல் உருவாகியவன் தான் இறைவன் மனிதர்கள் அப்படி உருவாக்கவில்லை என்பதை இந்த இடத்தில நான் பதிவு செய்கிறேன்.

இறைவன் உள்ளான் என்பதற்கு இன்னும் பல அத்தாட்சிகளை என்னால் இறைவன் நாடினால் சமர்பிக்க முடியும். உங்களுடைய பதிலை எதிர் பார்த்து அடுத்த பதிவை தொடங்குகிறேன் இறைவன் நாடினால்.

Arya

  • Guest
Tamilan naan kadaavul irukar nu than soluren, athanaal than kadavul enthentha uruvathula irukar nu soluren
Neenka sonathu pol intha ulakam anukkalaal anathu than aanal antha anu uruvanathu epadii????
Naan kadavul verum kovilil matum ila ella idankalilum irukarnu soluren

Yosuf kuriyathu pola kurankilirunthu manithan vanthan enpathu oruvarudaiya karuthu athai epadi naam etru kolvathu ??? anaithayum nirupiththula vingyanam ithai nirupithulatha??

ipa neenka kadavul ilanu sola varinkala???

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தமிழன் ... தாய் தந்தை இரண்டும் ஆனவன் இறைவன் ...  இறைவன் ஆணா பெண்ணா ...? இந்த ஆராய்ச்சியை எல்லாம் கடந்தவன்தான் ஒருவன் அவன் இறைவன் ...விஞ்ஞான வளர்ச்சியில் குழந்தை தாய் தந்தை இல்லாமல் உருவாக்க படுவதாக சொல்கிறீர்களே ... ஆணுடைய விந்தும் பெணுடைய கருவும் இல்லாமல் சாத்தியமாகி உண்டா..? அந்த சிறிய கருவில் நம்மால் விளங்க முடியாத ஒரு சூட்சுமத்தை வைத்திருக்கும் ஒருவனே இறைவன் ... நீங்கள் சொல்வதுபோல் மின்சாரம் கண்ணுக்கு தெரியாத சக்தி ... அந்த மின்சாரத்தை கண்டு பிடித்தவன் மனிதனாக இருக்கலாம் அதை நீரினுளும் மின்சாரத்தை உருவாக கூடிய பிற சக்தியுளும் வைத்தவன் யாரு மனிதனா ...?...
          குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற விஞ்ஞான விளக்கங்கள் டார்வின் கொள்கைகள் தகர்க்கப் பட்டு வருவதாக அண்மையில் நான் படித்துள்ளேன் ....குரங்கில் இருந்து மனிதன் தோன்றினால் மனிதனில் இருந்து குரங்கும் தோற்றம் பெறவேண்டுமே ....எங்கயாவது அப்டி தோற்றம் பெற்று உள்ளதா ..... சரி குரங்கில் இருந்தே மனிதன் பரிணாமம் பெற்றான் என்றே வைத்துகொள்வோம் ..... அப்போ அந்த குரங்கு எப்டி தோற்றம் பெற்றது ...?



உதாரணமாக ஒரு விதையில் இருந்து மரம் தோன்றி காய்த்து கனிந்து பழமாகிறது அல்லவா ... அது அந்த விதையில் இருந்து வந்தது ... எனவே அந்த மரம் பழத்தின் ஊடாக அதே விதையை பிரசவிக்கும் போது .... குரங்கில் (விதையில்) இருந்து தோன்றிய மனிதனில்  (மரம்) இருந்து மீண்டும் ஏன் குரங்கு ( விதை ) பிரசவிக்க படவில்லை ....?

 வேதங்கள் இறைவன் ஒருவனே என்றுதான் சொன்னது அது ஆணா  பெண்ணா ? எங்காவது சொல்லி உண்டா ...... இந்து மகத்தில் ஆண் பெண் சேர்ந்து அர்த்தநாரிச்வேர்  எனும் ஒரு அம்சம் இருக்கும் போது என் அந்த இறைவனால் முதல்குழந்தை உருவாக்க பட்டு இருக்க கூடாது ...

நம்பிக்கைதான் வாழ்க்கை .... கல்லு கடவுளாக தெரிபவனுக்கு கடவுள் தான் வாழ்க்கை ... கல்லு வீடாக தெரிபவனுக்கு வீடுதான் கடவுள் வாழ்க்கை நம்பிக்கை .... அந்த வீடு உடைந்து போனால் (வாசல்படி ) அவன் இடிந்து போகவில்லையா .. அது அவன் வாழ்கையாக தெரிவதால்தானே அவன் நம்பிக்கையாய் தெரிவதால்தனே அதன் இழப்பில் உடைந்து போகிறான் .... நம்பிக்கையின் உருவங்கள் மாறி இருக்கலாம் .... அனால் அதன் செயல்திறன்  தாக்கம் ஒன்றாகவே இருக்கும் ...ஒருவனுக்கு கடவுள் இருக்கிறார் என்பதில் நம்பிக்கை இநோருதனுக்கு இல்லை என்பதில் நம்பிக்கை ... இங்கே நம்பிக்கை சார்ந்த விடயம் வேறாக இருபினும் நம்பிக்கை என்பது இருக்கத்தானே செய்கிறது ...
                            கடவுள் இல்லை என்பதற்கு ஏதும் ஆதாரங்கள் உண்டா ... ...


« Last Edit: September 02, 2011, 08:03:39 PM by Global Angel »
                    

Offline thamilan

உங்க மூனுபேருக்கும் நான் பொதுவா பதில் சொல்லுறேன்.
நம்பிக்கை தான் வாழ்க்கை. அது உண்மை தான். அந்த நம்பிக்கையில தான் உலகம் சுழழுது.
நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க.

உதாரணத்துக்கு, எனக்கு அழகா தெரியும் ஒரு பொண்ணு ஆரியாவுக்கு ஆழகில்லாம தெரியலாம். யூசுப்புக்கு சுமாராக தெரியலாம். நான் அந்த‌ பொண்ணு அழகி என்று நம்புறேன். ஆரியா அழகில்லை என்று நம்புகிறார். யூசுப் சுமார் என்று நம்புகிறார். ஒரு பொண்ண மூன்று பேர் மூன்று விதமா நம்புறோம். நமக்கு நமது நம்பிக்கை தான் பெரிது. ஆனால் அந்த‌ பொண்ணு ஒன்றில் அழகாக இருக்கனும். இல்ல அழகில்லாம இருக்கனும். இல்லாட்டி சுமாரா இருக்கனும். இதில் மூன்றில் ஒன்று தான் சாத்தியம்.
நம்பிக்கை அனைத்தும் உண்மை ஆகிடாது. இதற்கு நான் சொன்னது ஒரு உதாரணம்.

உலகம் இரண்டு நியதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.ஒன்று இயற்கையின் நியதி. மற்றது மனித நியதி. சில செயல்கள் மனித நியதிக்கு உட்பட்டது.மற்றது மனிதனுக்கும் அப்பாற்பட்டது.
அது இயற்கயின் நியதி.இந்த இயற்கையின் நியதியை தான் கடவுளாக வர்ணிக்கிறோம்.

நாம் ஒரு சிலையை வடிப்பெதென்றால் கூட அதை அணுஅணூவாக அழகாக செதுக்கிகிறோம். ஒரு கவிதையை எழுதுவது என்றால் கூட அதை வரிக்கு வரி பிழைகளைத் திருத்தி அழகாக எழுதுகிறோம். மனித படைப்பு ஒரு உன்னதாமான படைப்பு. அதை படைத்தது எல்லாம் வல்ல இறைவன் என்றால் ஏன் இந்த அலங்கோலம்.
அதுவும் வல்லமை படைத்த இறைவன். மனிதனை படைத்து அவனை சீரழிப்பதை விட படைக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா? ஒரு உலகை படைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக‌
அழிப்ப‌தை விட‌ ப‌டைக்காம‌ல் இருந்திருக்க‌லாம் அல்ல‌வா?

உல‌கில் இத்த‌னை அழிவுக‌ள் ந‌ட‌க்கிற‌து. ப‌சி ப‌ஞ்ச‌ம் ப‌ட்டினி என‌ ம‌னித‌ன் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொல‌ப‌டுகிறான். இன‌வெறி ம‌த‌வெறி இப்ப‌டி த‌ன‌க்குத்தானே ச‌ண்டையிட்டு சாகிறான்.இதை எல்லாம் நிறுத்த‌ ஏன் இன்னும் இறைவ‌னால் முடிய‌வில்லை?
இன்று வ‌ரை ஏன் அவ‌ன் யார் க‌ண்ணுக்கும் தெரிய‌வில்லை?

அதை விடுங்க‌ள், இன்த‌ ம‌னித‌னை ப‌டைத்த‌ இறைவ‌ன் தான் எந்த‌ ம‌த‌ம் என்று ச‌ரி சொன்னானா? ஆயிர‌ம் ம‌த‌ங்க‌ள், ஆயிர‌ம் கொள்கைக‌ள். க‌ட‌வுலை ந‌ம்பும் ம‌த‌த்த‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ இதில் ப‌ல‌ப்ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள். ஒரு ம‌த‌த்துக்குள்ளேயே நூறு பிரிவுக‌ள்.
ஒவ்வொரு ம‌த‌த்த‌வ‌னும் த‌ன் க‌ட‌வுள் தான் உண்மை என்று ந‌ம்புகிறான். ம‌ற்ற‌ ம‌தத்தை பொய் என்கிறான். நீங்க‌ள் சொன்ன‌ ந‌ம்பிக்கை இது தான்.

அர்த்த‌நாதிஸ்வ‌ர‌ர் க‌தையை யார் சொன்ன‌து?  இந்த‌ வேத‌நூல்க‌ளை எழுதிய‌து யார்? ம‌னித‌ன் தானே? யாருக்காவ‌து க‌ட‌வுளே வ‌ந்து சொன்னாரா? ச‌ப‌ரிம‌லை அய்ய‌ப்ப‌ன் சிவ‌னின் உல்ல‌ங்கையில் உண்டான‌தாக‌ வேத‌ம் சொல்கிற‌து. அந்த‌ க‌தை ரொம்ப‌ ஆபாச‌மான‌தால் இங்கே சொல்ல‌ விரும்ப‌வில்லை.
ம‌னித‌னை விட‌ மோச‌மான‌து இறைவ‌னின் க‌தைக‌ள்.

ஒருவ‌னுக்கு ஒரு துய‌ர‌ம் வ‌ந்தால் ச‌க‌ம‌னித‌ன் உத‌வுகிறான்.
இது ம‌னித‌ நிய‌தி. ஒரு இய‌ற்கை சீற்ற‌ம் வ‌ந்தால் அது ஒரு இட‌த்தையே அழிக்கிற‌து. இது இய‌ற்கை விதி. ம‌னித‌னுக்கோ உல‌குக்கோ இறைவ‌ன் வ‌ந்து உத‌வுவ‌தில்லை.

இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்
« Last Edit: September 03, 2011, 05:32:19 PM by thamilan »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அப்போ வேதங்களை நீங்கள் அதரம் காட்டிநிர்களே  அதை எழுதியது யார் .... அதுல் உண்மை இல்லையா
...உண்மை இலாத ஒன்றில் இருந்து நீங்கள் எப்டி ஆதாரம் காடியது ...?

தமிழன் ரொஸ் சூப்பர் பிகுர் என்றது தெரிய வரும் போது சப்ப சுமார் இப்டி சொனவங்களும் சூப்பர் என்று ஒத்து கொள்ள செய்வார்கள் ...இதே போல்தான் கடவுள் இல்லை .. இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் என சொல்பவர்களும் ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள் இருக்குறதை ஒப்பு கொள்கிறார்கள் ..
                    

Arya

  • Guest
Angel cycle gab la rose super fig nu solura :D ithana mater ah nan chat la deal panikuren  :D

Angel ipa neenka solura mathiri kadavul irukaruna intha ulakathula theeviravaatham en varanum ??
iyarkai seetrankal etharku??
entha oru sirpiyum thaan padaitha sirpathai thaaney azhika maatan
apadi irukurapa uyirkalai padaithu athai en azhikanum
eli kalai padaitha iraivan athai kolum poonaiyai padaithathen ??
Naam perithum mathipathu thaaimai aanal antha thaaiye than muttaiyai unumaru paambukalai padaithathu en ??
kadavul irukiraar entral kadavul peyarai solikondu ematrikondirupavarkalai en thandika vilai ???

Offline thamilan

ஏஞ்சல்
நான் வேதங்களை உதாரணமா எங்க காட்டினேன்? நான் கடவுளை நம்பினாலும் வேதங்களையும் வேதநூல்களையும்
நம்புவதில்லை.

ஆரியா நான் சொன்ன‌ உதார‌ண‌ங்க‌ளை நீங்க‌ளும் சொல்லி என‌து ந‌ண்ப‌ன் என்று நிருபிச்சிட்டீங்க‌.
உல‌கத்தில் அத‌ர்ம‌ம் த‌லை விரித்தாடுகிற‌து.க‌ட‌வுள் உல‌கை ப‌டைத்த‌தோடு த‌ன‌து க‌ட‌மை முடிந்து விட்ட‌தாக‌ க‌ண்ணை மூடிக்கொண்டாரா? க‌ட‌வுள் உல‌க‌ம் அழிந்த்த‌தும் அவ‌ர்க‌ள் பாவ‌புண்ணிய‌த்துக்கேற்ப‌ த‌ண்ட‌ணை கொடுப்பார் என்று சொல்லுகிறார்க‌ள் க‌ட‌வுளை ந‌ம்புவோர். உல‌க‌த்தில் உயிரோடிருக்கும் போது செய்த‌ பாவ‌த்துக்கு த‌ண்ட‌ணை கொடுக்காம‌ல் இற‌ந்த‌ பின் கொடுத்து என்ன‌ ப‌ய‌ன்?

இப்போ நான் உங்க‌ கூட‌ பேசுவ‌தால் நான் த‌ழிழ‌ன் என்று உங்க‌ளுக்கு தெரியும். என்னை பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு நான் ம‌னித‌ன் என்று தெரியும். என்னை பார்க்காம‌ல் என்னோடு பேசாம‌ல் த‌ழிழ‌ன் என்று ஒருத்த‌ன் இருப்ப‌தாக‌ சொன்னால் நீங்க‌ள் எப்ப‌டி ந‌ம்புவீர்க‌ள்? ஒன்றில் க‌ண்ட‌வ‌ர்க‌ள் சொல்ல‌னும் இல்லாவிட்டால் பேசி ச‌ரி கேட்க‌னும்.
க‌ட‌வுளை க‌ண்ட‌வ‌ர் யார்? க‌ட‌வுளுட‌ன் பேசிய‌து யார்? காணாம‌ல் பேசாம‌ல் இப்ப‌டி க‌ட‌வுள் இருப்ப‌தாக‌ சொல்ல‌முடியும்?ச‌ரி இற‌ந்து
ப‌ர‌லோக‌ம் போன‌ யாராவ‌து வ‌ந்து ச‌ரி அங்கே க‌ட‌வுள் இருப்ப‌தாக‌ சொன்னார்க‌ளா? அதும் இல்லை. வெறும் ந‌ம்பிக்கைக‌ள் உண்மையாகாது.
விந்த‌ணுக்க‌ள் இல்லாம‌ல் எப்ப‌டி குழாயில் குழ‌ந்தை உண்டான‌து
என்று கேட்டிருந்தீர்க‌ள். நீங்க‌ள் சொன்ன‌து போல‌ விந்த‌ணு இல்லாம‌ல் கோழிகுஞ்சு பொரிக்காது என்ற‌ நிய‌தியை மாற்றி விஞ்ஞான‌ம் அந்த் விந்த‌ணு இல்ல‌ம‌ல் கோழிக்குஞ்சுக‌ளை உண்டாக்க‌வில்லையா விஞ்ஞான‌ம் ம‌னித‌னிலும் அதை நிருபிக்கும்.

Offline Yousuf

Quote
இந்த உலகத்தை படைத்த இறைவன் ஏன் துன்பதை படைத்தான் என்று கேட்கிறார்கள். மனிதன் இன்பத்தை முழுமையாக அறிந்து கொள்ளவே இறைவன் துன்பத்தை படைத்தான்.

இந்த பதிலை உங்களிடம் இருந்துதான் எடுத்தேன் தமிழன் மச்சி!

தவறுகளை ஏன் கடவுள் இங்க தண்டிக்காமல் மறுமையில் தண்டிக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறீர்கள். இங்கு ஒருவர் செய்யும் தவறுக்கு உடனுக்குடன் தண்டிக வேண்டும் என்று இறைவன் நாடினால் நீங்களும் தவறு செய்ய கூடியவர் தான் நானும் தவறு செய்ய கூடியவன் தான் உலகில் உள்ள அனைவரும் தவறு செய்ய கூடியவர்கள் தான் ஆகா இறைவன் தண்டனை கொடுக்க நாடினால் இந்த உலகத்தில் ஒரு மனிதர் கூட மிஞ்சி இருக்க மாட்டார். ஆகவே தான் பொருமையலனான இறைவன் மனிதர்களை இங்கு தண்டிக்காமல் அவர்களின் மரணம் வரை அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பாளித்து அவர்கள் அதிலும் திருந்தாவிட்டால் மறுமையில் தண்டிக்கிறான். இதை கடைசி இறைவேதமான திருக்குர்'ஆண் மூலம் என்னால் நிரூபிக்க முடியும்.

நீங்கள் சொல்வது போல் கடவுள் இல்லை என்று வைத்துகொள்வோம் இந்த உலகில் தவறு செய்ய கூடியவர்களும் மரணிகிரார்கள் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்பவர்களும் மரணிக்கிறார்கள். மனிதர்களை கொன்று குவித்த கொடுங்கோலர்களும் இருந்து இருக்கிறார்கள் மரணித்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்ந்த்த மனிதனுக்கும் என்ன வேறுபாடு? மரணத்திருக்கு பின்னல் ஒன்றும் இல்லை என்றால் ஏன் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் காட்டு மிராண்டிகளாக வாழலாமே? யார் நம்மை என்ன செய்ய முடியும்? இப்படி ஒரு சிந்தனை இறைவன் இல்லை என்ற காரணத்தால் பெருக்கெடுத்தால் இந்த பூமி தாங்குமா?

ஆர்யா மச்சி நீங்கள் தீவிறேவாதம் ஏன் வளர்கிறது என்று கேட்கிறீர்கள். முதலில் தீவிர வாதம் எப்படி தொடங்கியது என்று பார்த்தோமேயானால். உதரனத்திற்க்கு உங்கள் வீட்டில் நான் வந்து இருந்து கொண்டு இது ஏன் வீடு நீ வெளியே போ என்று உங்களை நான் வெளியேற சொன்னால் நீங்கள் என்னை சும்மா விடுவீர்களா? நிச்சயம் விடமடீர்கள். இன்று தீவிரவாதம் வளர்வதற்கு காரனம ஒடுக்கப்பட்ட மனிதனுக்கு சரியான நீதி கிடைக்காதது தான். வல்லரசுகள் தங்கள் சுயநலத்திற்காக சில நாடுகளை ஆக்கிரமிக்கிறது அந்த நாட்டில் உள்ள குடிமகன் இதை எதிர்த்து போராடுகிறான் இது அவன் உரிமை. உதாரணமாக இந்தியாவில் விடுதலை பெரும் முன் நாம் எப்படி வெள்ளையர்களிடம் போரடிநோமோ அதே போல் இன்று ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற இராக்கும், ஆப்கானிஸ்தானும் போராடுகிறது அதே போல் இலங்கையில் தமிழ் இனம் அழிவதை எதிர்த்து விடுதலை புலிகள் போராடினார்கள். இன்றும் சம நீதி வேண்டும் என்று நம் இந்தியாவில் நக்சலைட்டுகள் போராடுகிறார்கள். அநியாயம் மிக்க ஆட்சியாளர்களிடம் இருந்து தங்களை பாதுகாக்க போராடுவது தீவிரவாதமா அல்லது மக்களை ஒடுக்கும் ஏகாதிபத்திய அரசுகள் செய்வது தீவரவாதமா? இறைவன் இருந்தால் நிச்சயம் இங்கு நீதி கிடைக்காமல் போராடி மடிந்த அந்த எண்ணற்ற உயிர்களுக்கு இறுதி நீதி மன்றமான இறைவனின் நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் அல்லவா?

கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்காக கடவுளே இல்லை என்று சொல்வது சரியா? கடுவுளின் பெயரால் ஏமாற்றுபவர்களை களையெடுப்பது அறிவார்ந்த செயலா அல்லது கடவுள் இல்லை என்று சொல்வது அறிவார்ந்த செயலா? சற்று சிந்திக்க வேண்டும் ஆர்யா மச்சி...!!!

உங்களின் பதிலை எதிர்பார்த்து அடுத்த பதிவை தொடருகிறேன் இறைவன் நாடினால்...!!!

Offline thamilan

யூசுப் மச்சி
உங்க வாதம் நல்லா தான் இருக்கு. உங்க வாதத்தின் வழியே நானும் சில கேள்விகளை கேட்கிறேன்.

நீங்கள் சொல்வது போல் கடவுள் இல்லை என்று வைத்துகொள்வோம் இந்த உலகில் தவறு செய்ய கூடியவர்களும் மரணிகிரார்கள் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்பவர்களும் மரணிக்கிறார்கள். மனிதர்களை கொன்று குவித்த கொடுங்கோலர்களும் இருந்து இருக்கிறார்கள் மரணித்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்ந்த்த மனிதனுக்கும் என்ன வேறுபாடு? மரணத்திருக்கு பின்னல் ஒன்றும் இல்லை என்றால் ஏன் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் காட்டு மிராண்டிகளாக வாழலாமே? யார் நம்மை என்ன செய்ய முடியும்? இப்படி ஒரு சிந்தனை இறைவன் இல்லை என்ற காரணத்தால் பெருக்கெடுத்தால் இந்த பூமி தாங்குமா?

மரணித்ததற்கு பிறகு தண்டனை என் வைத்துக் கொள்ளுவோம்.
மரணித்த பிறகு தானே தண்டனை இருக்கும் வரை எப்படி வேண்டுமானாலும் வாழுவேம் என் ஒவ்வொரு மனிதனும் நினைத்தால் அப்போது இந்த பூமி தாங்குமா?
உலகில் நானும் பிழை செய்பவன் தான் நீங்களும் பிழை செய்வவர் தான். செய்யும் பிழைக்கு உயிரை எடுக்க வேண்டுமா என்ன? அப்படி செய்தால் தான் உலகில் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அவரவர் பிழைக்கு ஏற்ப தண்டனை கொடுக்கலாம் தானே.

சவூதியை எடுத்துக் கொள்ளுங்கள்.அங்கே களவெடுத்தால் கை வெட்டப்படும். கொலை செய்தால் தலை வெட்டப்படும். அதற்காக அங்கே இருப்பவர் எல்லோரும் தலை இல்லாமல், கை இல்லாமலா இருக்கிறார்கள்?

ஒருவ‌ன் கையை வெட்டும் போது ம‌ற்ற‌வ‌ன் ப‌ய‌ப்ப‌டுவான்.ஒருவ‌ன் த‌லையை எடுக்கும் போது அடுத்த‌வ‌ன் கொலை செய்ய‌ அஞ்சுவான். இந்த‌ த‌ண்ட‌னைக‌ளால் தான் ச‌வூதியில் குற்ற‌ங்க‌ள் குறைந்திருக்கிற‌து. உங்க‌ள் வாத‌ப்ப‌டி ம‌றுமையில் தான் த‌ண்ட‌னை என்றிருந்தால் ச‌வூதியில் ஒரு பெண்ணைக் கூட‌ விட்டு வ‌த்திருக்க‌ மாட்டார்க‌ள்.

இறைவ‌ன் இருக்கிறான், ம‌றுமையில் அவ‌ன் த‌ண்ட‌னை த‌ருவான் என்ற‌ எண்ண‌ம் ம‌ட்டும் இருந்திருந்தால் உல‌க‌மே த‌லை கீழாக‌ மாறியிருக்கும். அத‌ற்காக‌த்தான் ம‌னித‌ன் நீதிம‌ன்ற‌ங்களை உண்டாக்கினான்.அங்கே குற்ற‌ங்க‌ள் விசாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.அவ‌ன் அவ‌ன் குற்ற‌த்திற்கேற்ப‌ த‌ண்ட‌னை
வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.
இறைவ‌ன் இருந்தால் அவ‌னும் அப்ப‌டி செய்ய‌லாம் தானே?

ஒழுக்க‌த்தோடு வாழ்வ‌வ‌ரும் கொடுங்கோல‌ர்க‌ளும் இற‌ந்த‌ பிற‌கு ஒருவ‌ரே. இற‌ந்த‌ பிற‌கு இருவ‌ருக்கும் ஒரே பெய‌ர் தான். பிண‌ம்.
இருக்கும் போது கொடுங்கோல‌னாக‌ இருந்த‌வ‌ன் பிண‌மான‌ பிற‌கு த‌ண்ட‌னை அனுப‌வித்தால் என்ன‌ அனுப‌விக்காவிட்டால் என்ன‌?
உல‌க‌த்தில் ஒழுக்க‌மாக‌ இருந்து துன்ப‌த்தை அனுவ‌வித்த‌வ‌ன் பிண‌மான‌ பின்னால் சொர்க்க‌ம் போனால் தான் என்ன‌ போகாவிட்டால் தான் என்ன‌?
முத‌லில் சொர்க‌ம் இருக்கிற‌தா? வ‌ந்து சொன்ன‌வ‌ர் யாரும் இல்லை. ந‌ர‌க‌மும் சொர்க்க‌மும் நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிற‌து.

யூசுப் ம‌ச்சி ஆரியா கேட்ட‌தின் பொருள் உங்க‌ளுக்கு விளங்க‌வில்லை என்று நினைக்கிறேன். ஆரியா எப்ப‌டி தீவிர‌வாத‌ம் உண்டான‌து என்று கேட்க‌வில்லை. அது ம‌னித‌ செய‌ல். ஆனால் இறைவ‌ன் என்று ஒருவ‌ன் இருந்தால் அதை ஏன் த‌டை செய்ய‌வில்லை? இது தான் ஆரியாவின் கேள்வி எந்த‌
ஒரு க‌லைஞ‌னும் தான் ப‌டைத்த‌ ஒரு ப‌டைப்பு அல‌ங்கோல‌மாவ‌தை விரும்ப‌ மாட்டான். உங்க‌ள் க‌ருத்துப்ப‌டி இறைவ‌ன் இந்த‌ உல‌கை ப‌டைத்திருந்தால் ஏன் இத்த‌னை அல‌ங்கோல‌மாகினான்?
உல‌கில் தீவிர‌வாத‌மும் த‌லைதூக்க‌ முக்கிய‌ கார‌ண‌ம் இன்த‌ ம‌த‌மும் க‌ட‌வுளும் தான். இதை நீங்க‌ள் ஒத்துக்கொண்டே ஆக‌வேண்டும். இல்லை எனில் நான் புள்ளி விவ‌ர‌ங்க‌ளுட‌ன் த‌ருகிறேன்.

ந‌ம்மை பெற்ற‌வ‌ர்க‌ளை க‌ட‌வுள் என்று சொல்லுங்க‌ள் ஒத்துக்கொள்கிறேன். அவ‌ர்க‌ளை நாம் க‌ண்ணால் காண்கிறோம்.
நாம் காண‌முடியாத‌ ஒன்றை இருக்கிறானா இல்லையா என்று தெரியாத‌ ஒன்றை க‌ட‌வுள் என்று சொல்ல‌ நான் த‌யாராக‌ இல்லை.ஆரியா முன்பு சொன்ன‌து போல‌ எவ‌ன் ஒருவ‌ன் ம‌ற்ற‌வ‌னுக்கு உத‌வுகிறானோ அவ‌னை க‌ட‌வுளாக‌ நினைப்போம்.

Offline Yousuf

தமிழன் மச்சி உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தர கடமை பட்டுள்ளேன். நீங்கள் சவுதியில் தண்டனை வழங்குகிறார்கள் என்று சொல்கிறீர்கள் அந்த தண்டனை எங்கிருந்து வழங்க படுகிறாது எதன் அடிப்படையில் வழங்க படுகிறது என்று சற்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் சொல்ல கூடிய தண்டனைகள் அனைத்தும் இறுதி இறை வேதமான திருக்குர்'ஆனில் இருந்து தான் வழங்க படுகிறாது. இதை மனிதன் உருவாக்கவில்லை இறைவனால் வழிவகுத்து கொடுக்கப் பட்டது. நீங்கள் திருக்குர்'ஆண் இறைவேதம் என்பதை எப்படி நாங்கள் ஏற்றுகொள்வது என்று கேள்வி எழுப்பலாம் அப்படி நீங்கள் எழுப்பும் பட்சத்தில் அதை நான் புள்ளி விவரங்களோடு உங்களுக்கு பதிவு செய்கிறேன்.

நான் முதலாவதாக எழுப்பிய கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை தமிழன் மச்சி. ஒரு எழுதுகோல் கூட தானாக வர முடியாது என்ற நிலை இருக்கும் பொது இப்படி பட்ட பிரபஞ்சம் எப்படி தானாக வந்தது என்ற கேள்விக்கு நீங்கள் பதில் தர வேண்டும் மேலுமிது தான் நாத்திகர்களின் பகுத்தறிவு சிந்தனைய என்று எனக்கு தெளிவு படுத்த வேண்டும்.

மனிதனுக்கு மனிதர்களே தீர்ப்பு வழங்கி கொண்டுதானே இருக்கிறார்கள் இதை ஏன் இறைவன் வழங்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். மனிதர்களின் தீர்ப்பில் குற்றவாளியும் தண்டிக்க பாடுகிறான் நிரபராதியும் வஞ்சிக்க படுகிறான். ஆனால் இறைவனின் தீர்ப்பில் யாருக்கும் ஒரு எள் ஆளவும் தீமை செய்யப்பட மட்டது. அவர்கள் செய்தவற்றின் கூலியை அவர்கள் நிச்சயம் பெறுவார்கள். இது மனிதனால் செய்ய இயலுமா?

அடுத்து இறந்து விட்டால் அனைவரும் பிணம் தான் நல்லவன் என்ன கேட்டவன் என்ன என்று கூறுகிறீர்கள். சரி இதை ஒரு நல்லவன் நினைத்தால் நாம் இறந்து விட்டால் பிணம் தானே நாம் ஏன் நல்லவனாக வாழ வேண்டும் மற்றவர்கள் கெட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது நாம் ஏன் நல்லவனாக வாழ வேண்டும் அவர்களை போல் கொலை கொள்ளை அனைத்தையும் நாமும் செய்வோம் என்று உங்களை போல உள்ள நல்லவர்கள் கிளம்பிவிட்டாள் மீண்டும் கேட்கிறேன் இந்த உலகத்தின் கதி என்ன?

இறைவன் தான் படைத்ததை ஏன் அலங்கோல படுத்துகிறான் என்று கேட்கிறீர்கள் தமிழன் மச்சி. இதற்க்கு நான் திருக்குர்'ஆண் வழியில் பதில் தர விரும்புகிறேன். இறைவன் மனிதர்களை படைத்து அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் அவனுடைய வேதங்கள் மூலம் தெளிவு படுத்தி விட்டன. அப்படி இருக்கையில், மனிதன் இறைவனுக்கு அஞ்சி மற்றவர்களுக்கு துன்பம் தராமல் வாழ்ந்தால் ஏன் கொலைகள் நடக்க போகிறது?
மைந்தர்களில் அநேகமானோர் இதை அறியாதவர்களாக உள்ளார்கள்.

தீவிரவாதம் வளர்வதற்கு கடவுள் தான் கரணம் என்று கூறுகிறீர்கள். கடவுள் எந்த வேதத்திலாவது தீவிரவாதிகளாக மறுங்கள் என்று கூறினாரா? எனக்கு இதற்க்கு பதில் வேண்டும். கடவுளின் பெயரால் சண்டை நடக்கிறது என்று கூறுகிறீர்கள் ஒரு குறிப்பிட இனத்தை வல்லாதிக்க சகிதிகள் ஒடுக்கப்ப் பட்டவனை தாக்கும் பொது அவன் அவர்களை எதிர்த்து போரிட்டால் அந்த ஒடுக்கப் பட்டவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களோ உடனே அவர்கள் அந்த மதத்தின் பெயரால் தீவிரவாதிகள் ஆக்க படுகிறார்கள். இது தான் உண்மை ஏன் அந்த ஒடுக்கப்பட்ட மனிதனுக்கு இறைனம்ம்பிக்கை இருக்க கூடாதா?


மதத்தின் பெயரால் தீவிரவாதம் உருவாக்கபடுகிறது என்று கூறுகிறீர்கள். நான் ஒரு சம்பவத்தை கூறுகிறேன் தமிழன் மச்சி ஆப்கானிஸ்தானில் நடந்தது. அங்கு ஒரு புத்தர் சிலை இருந்தது அதன் மூக்கு உடைந்து விட்டதாம். இதற்காக அமெரிக்காவின் UNESCO 100 கோடி ரூபாய் நீதி ஓதிக்கியதாம் புத்தர் சிலையின் மூக்கை சரி செய்ய. அங்கு உள்ள தலிபான்கள் எங்கள் மக்கள் பசியாலும் பஞ்சத்தாலும் வாடுகிறார்கள் ஒரு ஒரு கோடி ரூபாய் கொடுங்கள் எங்கள் மக்களின் பஞ்சத்தை நீக்க என்று கேட்டார்கள். இதற்க்கு UNESCO சொல்லியதாம் அதெல்லாம் ஒதுக்க முடியாது என்று. தலிபான்கள்  உடனடியாகள் எங்கள் மக்கள் பஞ்சத்தில் வாடும் பொது இவ்வளவு தொகை செலவழித்து இந்த புத்தர் சிலையை ஒன்றும் நீங்கள் சரி செய்ய வேண்டாம் அது எங்களின் நாட்டில் கூட இருக்க வேண்டாம் என்று கூறி அந்த புத்தர் சிலையை தகர்த்து எறிந்தார்கள். இதை ஊடகங்கள் எப்படி பரப்பியது தெரியுமா மதத்தின் பெயரால் முஸ்லிம் தாலிபான்கள் புத்தர் சிலையை தகர்த்து விட்டார்கள் என்று. சற்று சிந்தித்து பாருங்கள் இங்கு மதத்தை புகுத்தியவர்கள் யார் பட்டினிக்காக மனிதநேயத்தோடு மன்றாடியவர்கள் யார் என்று. இவர்களை எப்படி இந்த உலகம் தீவிரவாதிகள் என்று சொல்கிறது அதுவும் மதத்தின் பெயரால். ஏன் அவர்கள் ஏற்று கொண்ட கொள்கை வல்லாதிக்க சக்திகளான அமெரிக்கா போன்ற நாடுகள் வளர்ச்சி அடைவதற்கு தடைகல்லாக இருக்குயறது என்பதற்காகவா? இது தான் மத தீவிரவாதமா? பட்டினியில் வாடும் மக்களின் குரலா? நீங்கள் புள்ளி விவரங்கள் தருகிறேன் என்று சொன்னீர்கள். இந்த புள்ளி விவரத்தை தந்தது யார் இந்த ஊடகங்கள் தானே இந்த ஊடகங்கள் என்றுமே சரியான புள்ளி விவரங்களை தந்து இல்லை. நீங்கள் தந்தாலும் அதை நான் ஏற்று கொள்ள மாட்டேன். ஊடகங்கள் ஒரு சாராருக்கு ஆதரவான நிலையில் தான் உள்ளது அவற்றின் கூற்றுகளை நான் ஏற்றுகொள்வதாக இல்லை.

என்னை பொறுத்தவரை நான் மற்றவர்களை போல் கண்டதை எல்லாம் கடுவுளாக, கல்லை எல்லாம் கடுவுளாக நினைக்க மாட்டேன் அது பகுத்தறிவுக்கு சரியானதும் இல்லை. மனிதர்களில் யாரையும் கடவுளாக கருதமாட்டேன். என்னுடைய கடவுள் கொள்கையை நான் உங்களுக்கு சொல்லி ஏன் பதிவை இறுதியாக நிறையவு செய்கிறேன்.


Quote
இறைவன் ஒருவனே! அவன் தேவைகள் அற்றவன்! அவன் யாரையும் பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இறைவன் பிறக்கவும் இல்லை மரணிக்கவும் இல்லை.

நான் அஞ்சுவதும் அடிபணிவதும் எவன் இந்த அகிலங்களை படைத்தது பரிபாளிக்கிரானோ அந்த ஒரே இறைவனுக்கே!!!

அந்த ஒரே இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழியை தருவானாக!!!
« Last Edit: September 07, 2011, 06:26:23 PM by Yousuf »