Author Topic: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?  (Read 22692 times)

Arya

  • Guest
யூசுப் நாங்க ஏன் தீவிரவாதம் உருவாகிறது என்று கேட்கவில்லை.

கடவுள் இருக்கிறார் என்றால் அவர் ஏன் இந்த தீவிரவாதத்தை தடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம்?

கடவுள் பெயரால் எதற்கு இந்தனை மதங்கள் மற்றும் சண்டைகள்??

கடவுள் இருக்கிறார் என்றால் நம்மை இயக்குவதும் அவர்தானே ? நம்மை அவர் ஏன் தவறாக இயக்கவேண்டும் ??

தான் படைத்த உலகத்தை தனது பெயரால் சிலர் அழிபதை அவர் ஏன் பார்த்துகொண்டிருக்க வேண்டும்??

தவறு செய்தவர் இறந்தபின் அவரை தண்டிப்பதை காட்டிலும் தவறு செய்யாமல் தடுப்பது மேல் அல்லவா?

தடுக்காமல் இறைவன் தண்டிப்பது ஏன்??

உங்கள் பெயரை சொல்லி யாராவது தவறு செய்தால் அதை தட்டிகேட்டு தடுத்து நிறுத்தவேண்டியது உங்கள் கடமை தானே?? அதை கடவுள் இருந்தால் ஏன் செய்யவில்லை

நான் கடவுள்லால் தீவிரவாதம் உருவாகிறது என்று சொல்லவில்லை ஆனால் கடவுள் நம்பிக்கையும் ஒரு காரணம் என்பது என் கருத்து.

நீங்கள் சொன்ன புத்தர் சிலை கதையும் நல்ல உதாரணம், அங்கு இருந்த கடவுள் நம்பிக்கை தானே பட்டினியில் வாடும் மக்களுக்கு உதவாமல் சிலையை புதுபிக்க தூண்டியது!!!

முன்னோர்கள் தவறை குறைக்கத்தான் கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி அவர் நாம் இறந்தபின்பு தண்டிப்பார் என்று பயங்காட்டி தவறு செய்வதை தடுத்தனர்.

ஆனால்

இன்று வேலியே பயிரை மேய்வது போல தவறை குறைக்க ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கையே தவறை அதிகரிப்பது நியாயமா???

நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட அந்த நம்பிக்கை தவறாக பயன்படுத்தப்படும் போது அந்த நம்பிக்கை இப்பொது தேவையா ?? என்பது தான் என் கேள்வி??

Offline Yousuf

ஆர்யா உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்...!!!

கடவுள் இருக்கிறார் என்றால் அவர் ஏன் இந்த தீவிரவாதத்தை தடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம்?

இறைவன் தீவிரவாதத்தை ஏன் தடுக்கவில்லை என்று கேட்கிறீர்கள். இதற்க்கு என்னுடைய பதில் ஆட்சியாளர்கள் தவறு செய்வதால் தீவிரவாதம் உருவாக்கப் படுகிறது அதற்காக்க தீவிரவாதத்தை நான் சரி காண வில்லை இருவர் செய்வதும் தவறு தான். தீவிரவாத்தத்தால் மட்டும் உலகத்தில் குழப்பங்கள் இல்லை அதை மீறி எத்தனையோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று தவறுகள் நடந்து கொடுத்தான் இருக்கிறது. இதற்க்கு அணைத்திருக்கும் இறைவன் தண்டனை வழங்க நாடினால்...

இந்த பூமியில் ஒரு மனிதன் கூட மிஞ்சி இருக்க மாட்டான் என்று கடைசி இறைவேதமான திருக்குர்'ஆனில் தெளிவுபட கூறுகிறான். மேலும் கூறுகையில் அவன் போருமையலர்களுகேல்லாம் போருமையாலனாக இருக்க கூடிய காரணத்தால் மனிதர்களுக்காக ஒரு தவணையை ஒதுக்கி இருக்கிறான். அந்த தவணை முடிவதற்குள் மனிதன் தானாக பார்த்து இறைவன் நாளை நம்மை விசாரிப்பானே என்ற அச்சத்தோடு திருந்தி விட்டால் அவன் மன்னிபவனாக இருக்கிறான். திருந்த வில்லை என்றால் இந்த பூமியில் தீவிரவாதத்தின்  பெயரால் மட்டும் அல்ல இன்னும் எத்தனை எத்தனை அநியாயங்கள் செய்த மனிதனாக இருந்தாலும் படைத்தவனின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவனது தண்டனை கடுமையானது எந்த அளவிற்கென்றால் இங்கு பூமியில் ஒரு மனிதன் 100 கொலைகள் செய்தால் அவனை ஒரு முறை தான் தூக்கில் போடா முடியும். ஆனால் அந்த இறைவனின் நீதி மன்றத்திலே அவன் மரணிக்காமல் வேதனையை கடுமையாக அனுபவித்து கொண்டு இருப்பான் இது தான் அவன் செய்த கொலைகளுக்கான சரியான தண்டனையாக இருக்க முடியும்.

ஆகவே இந்த பூமியில் தவறு செய்பவர்கள் நிச்சயம் தப்பித்து கொள்ள முடியாது ஆர்யா...


கடவுள் பெயரால் எதற்கு இந்தனை மதங்கள் மற்றும் சண்டைகள்??

ஆர்யா மதங்களை பற்றி நாம் ஆராய்ச்சி செய்வோமேயானால் ஆரம்பகாலத்தில் மதம் என்ற ஒன்றே கிடையாது. இது இடைக்காலத்தில் மனிதர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்டது. இறைவன் முதல் மனிதரையும் அவருடைய துனுயையும் இந்த பூமிக்கு அனுப்பிய பொது வாழ்வதற்கான வாழ்கை நெறியை தான் கற்று கொடுத்தான் வேதங்கள் மூலமாக.

இறுதி இறைவேதம் திருக்குர்'ஆண் கூறுகிறது மாந்தர்களே உங்களை நாம் ஒரு ஆண் பெண்ணில் இருந்தே படைத்தோம் என்று. இதில் இருந்து நாம் விளங்கி கொள்வது என்னவென்றால். இறைவன் மனிதர்கள் அனைவரும் சமம் என்று கூறி விட்டான். அணைத்து மனிதர்களுக்கும் ஒரே இறைவன் தான் எனபது தெளிவாகுகிறது.

நாம் வேதங்களை ஆராய்ச்சி செய்தோமேயானால் இறைவன் மக்கள் வழி தவறும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களை நெறிமுறை படுத்த நல்வழி படுத்த இறை தூதர்களை அனுப்பி இருக்கிறான்.இன்று உணகில் காணப்படும் மதங்கள் எல்லாமே முந்தய இறை தூதர்கள் கொண்டு வந்த ஒரே வாழ்வியல் நெறி தான். ஆனால் பிற்காலத்தில் இறை தூதர்களின் பெயர்களையும், அவர்கள் இனத்தையும், இடத்தையும் மையமாக கொண்டு மதங்கள் ஆகி விட்டன.

நாம் ரிக், யசுர், சமா, அதர்வண வேதங்களை ஆராய்ச்சி செய்தோமேயானால் அதில் ஒரு இடத்தில் கூட இந்து மதம் என்ற பெயர் காணப்படவில்லை. அது இடைக்காலத்தில் உருவான பெயர் தான் என்று விவேகானந்தர் என்று கொள்கிறார். சரி இந்த வேதங்கள் வழங்கப்பட்ட மார்க்கத்தின் பெயர் என்ன என்று ஆராச்சி செய்தால் நமக்கு கிடைக்கும் பெயர் சனாதன தர்மம் என்பதாகும்.

சனாதன என்னும் சமஸ்கிருத சொல்லின் பொருள் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்பதாகும். தர்மம் என்றால் மார்க்கம். இதை இறுதி வேதமான குர்'ஆண் கூறும் பொது தீனுல்கையும் என்று கூறுகிறது. இதன் பொருள் நிலையான மார்க்கம். ஆகவே மனிதன் பேசும் மொழி தான் விதியாசப்படுகிரதே தவிர இறைவன் மனிதர்களுக்கு வழிகாட்ட அனுப்பிய மார்க்கம் வேறு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் மனிதர்களுக்கு ஒரே மார்கத்தை தான் கூறியுள்ளான். மனிதர்கள் தங்களுடைய சுயநல போக்கால் அதை மதங்களாக மாற்றி விட்டார்கள். இறைவன் மதங்களை உருவாக்க வில்லை மதத்தின் பெயரால் மனிதர்களை அடித்து கொள்ளவும் சொல்ல வில்லை. மாறாக நீங்கள் அனைவரும் ஒரு தாய் தந்தை மக்கள் என்றே கூறுகிறான். மதத்தின் பேரிறால் நடக்கும் சண்டைகளுக்கு இறைவன் பொறுப்பும் அல்ல. இந்த சண்டைகளுக்கும் இறுதி தீர்ப்பு நாளில் அவன் தீர்ப்பளிப்பான்.


கடவுள் இருக்கிறார் என்றால் நம்மை இயக்குவதும் அவர்தானே ? நம்மை அவர் ஏன் தவறாக இயக்கவேண்டும் ??

இறைவன் நம்மை மட்டும் இயக்கவில்லை ஆர்யா. இந்த பேரண்டத்தையும் இயக்குவது இறைவன் தான். ஆனால் மற்றவற்றை விட மனிதர்களுக்கு ஒரு அறிவை அதிகமாக வழங்கி சிந்திக்கும் ஆற்றலை கொடுத்து அவன் இப்படி வாழ்ந்தால் நேர்வழியில் வாழலாம் என அவர்களுக்கு கற்றுகொடுக்க இறைதூதர்களையும் இறை வேதங்களையும் கொடுத்து இனியாவது சிந்தித்து வாழ்ந்து கொள் என்று நேர் வழி காட்டி இந்த நேர்வழியை விட்டு நீ விளங்கினால் கடுமையான தண்டனைக்கு உட்ட்படுவாய் என்று எச்சரித்தும் உள்ளன். அனால் இன்று மனிதர்கள் இதை எல்லாம் அலட்ச்சியமாக கருதி தன்னுடைய சுயநல வாழ்கையை வாழ்கிறார்கள். இதற்க்கு நீங்கள் இறைவனை பொறுப்பாளியாக ஆக்க முடியாது. இறைவனின் போதனையை மறுத்து வாழ்பவர்களுக்கு நிச்சயம் மறுமையில் தண்டனை உண்டு.

தான் படைத்த உலகத்தை தனது பெயரால் சிலர் அளிப்பதை அவர் ஏன் பார்த்துகொண்டிருக்க வேண்டும்??

முதலில் இறைவனை பற்றி அதிகமான மக்கள் தவறாக விளங்கி வைத்துள்ளர்கள். இறைவனை மனிதனின் குண நலன்களோடு ஒப்பிடுகிறார்கள். இறைவன் மனிதனை போன்று பலவீனங்கள் உள்ளவன் அல்ல அவன் சுயநல வாதியும் இல்லை எல்ல விடயங்களிலும் அவசர படுபனவனும் இல்லை அவன் பொறுமையாளன் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். அவன் படைத்த உலகத்தை அவன் பெயரை சொல்லி அளிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இது இந்த உலகத்தை படைக்கும் முன்பே மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொலைசெய்து கொண்டு தான் அநியாயம் செய்து கொண்டு தான் வாழ்வார்கள் என்று அவனுக்கு தெரியும். இதை தெளிவாக இறுதி வேதமான குர்'ஆனில் கூறிவிட்டான். இருந்தாலும் மனிதர்களுக்கு இப்படி நடக்க கூடாது என்ற எச்சரிக்கையும் செய்து விட்டான். இறைவன் அவனுடைய பெயரால் மக்களை ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டு வாழுங்கள் என்று எந்த வேதத்திலும் கூறுயது இல்லை. மனிதர்கள் தங்களுடைய அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலை நாட்டி கொள்ள அடித்து கொள்கிறார்கள் அவர்கள் ஜாதியால் வேறு பட்டிருந்தால் அது ஜாதி சண்டையாகவும் மதத்தால் வேறு பட்டு இருந்தால் அது மத சண்டையாகவும் சித்தரிக்க படுகிறது. இதற்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம்? இதில் இறைவனை ஏன் இழுக்கிறீர்கள்.

நான் முன்பு கூறியது போல் மதங்கள் இடைக்காலத்தில் தோன்றியது. மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். நம்மை படைத்த இறைவன் ஒரே இறைவனே. நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணம் வந்து விட்டால் இந்த சண்டைகள் நடை பெறாது. இதை தான் கடைசி வேதமான திருக்குர்'ஆண் முன் மொழிகிறது.

நீங்கள் இன்றும் பார்க்கலாம் ஹஜ்ஜு பயணத்தின் பொது ஆப்ரிக்க கருப்பரும் ஐரோப்பிய வெள்ளையரும் ஆசியாவின் மானிறத்தவரும்  ஒன்றாக சகோதரத்துவத்துடன் ஹஜ்ஜு செய்கிறார்கள். இதே போல் ஒவ்வொரு மனிதரும் நிறத்தால், மொழியால், இனத்தால் உயர்ந்தவர்கள் அல்ல நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று உணர்ந்து விட்டால் உலகம் அமைதி பூங்காவாக மாறிவிடும்.

இறைவன் இல்லை என்று சொல்லும் கொள்கையால் இந்த அமைதியை நிச்சயம் கொண்டு வர முடியாது. அது விபரீதமான ஒரு பேரழிவை இந்த பூமியில் ஏற்ப்படுத்தி விடும்.

தவறு செய்தவர் இறந்தபின் அவரை தண்டிப்பதை காட்டிலும் தவறு செய்யாமல் தடுப்பது மேல் அல்லவா?

மேலே சொன்ன பதில் தான் இந்த கேள்விக்கும் மனிதன் தவறு செய்யாமல் இருக்க இறைவன் இறைவேதங்களையும் கொடுத்து இறை தூதர்களையும் அனுப்பி அதற்க்கு மேலாக மனிதனுக்கு சிந்திக்கும் அறிவையும் கொடுத்து நீ தவறு செய்யாதே என்று சொல்லிய பின்னும் தவறு செய்தால் தண்டிக்க படுவாய் என்று சொல்லிய பின்னும் மனிதன் அதையும் மீறி தவறு செய்தால் பிறருக்கு அநியாயம் செய்தால் இறைவன் அதற்கும் அவகாசம் கொடுத்து அவன் திருந்த வாய்பளிக்கிறான். அதிலும் திருந்தாதவர்களை தான் தண்டிக்கிறான்.

ஆகவே இறைவன் தவறு செய்யாமல் இருக்கும் வழி முறைகளை மனிதனுக்கு சொல்லி விட்டான். இது தான் உங்கள் கேள்விக்கு பதில்.

உங்கள் பெயரை சொல்லி யாராவது தவறு செய்தால் அதை தட்டிகேட்டு தடுத்து நிறுத்தவேண்டியது உங்கள் கடமை தானே?? அதை கடவுள் இருந்தால் ஏன் செய்யவில்லை

இறைவனின் பெயரால் தவறு செய்பவர்களை நேரடியாக தட்டி கேட்க வேண்டும் என்ற அவசியம் கடவுளுக்கு கிடையாது. நீங்க இந்த கேள்வியை கேட்கும் பொழுதே இறைவனுடைய இலக்கானம் உங்களுக்கு புரியவில்லை எனபது தெரிகிறது இறைவனை நீங்கள் மனிதனை போல் கற்பனை செய்கிறீர்கள்.

இறைவனின் பெயரால் நடக்கும் தவறுகளை தட்டி கேட்ட்கத்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைவன் இறைதூதர்களை அனுப்பினான். இறைதூதர்களின் மரணத்திற்கு பிறகு மக்கள் மீண்டும் தவறு செய்ய முனைகிறார்கள். இப்பொழுது இறை தூதுத்துவம் கடைசி இறை தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களோடு முடிவு பெற்று விட்டது. இறைவன் கடைசி வேதமான குர்'ஆனில் கூறும் பொழுது  இறைவனின் பெயரால் தவறு செபவர்களை தடுப்பது இறைவேதத்தை கற்ற உங்களின் கடமை என்று கூறி விட்டான்.

இந்த தவறுகளை நேரடியாக தடுக்க வேண்டியது இறைவனுக்கு அவசியம் இல்லை மனிதர்களிலேயே அவனுடைய பிரதிநிதிகளை உண்டாக்கி தடுக்க சொல்கிறான். அப்பொழுது கூட உங்கள் கடமை தவறை சுட்டி கட்டுவது மட்டும் தான் அவர்களை நல் வழி படுத்துவது அல்ல. அவர்கள் சிந்தித்து திருத்தி விட்டால் நல்லது இல்லை என்றால் அவர்கள் வேதனையை சுவைப்பார்கள் என்றும் கூறி விட்டான்.

ஆகவே இறைவன் அவன் பெயரால் நடக்கும் தவறுகளை தடுக்காமலும் விட்டு விட வில்லை.

முன்னோர்கள் தவறை குறைக்கத்தான் கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி அவர் நாம் இறந்தபின்பு தண்டிப்பார் என்று பயங்காட்டி தவறு செய்வதை தடுத்தனர்.

இதை நீங்கள் எந்த ஆதாரத்தோடு சொல்கிறீர்கள் தவறை குறைக்கத்தான் இறைவனை உண்டாக்கினார்கள் என்று?
 உங்களிடம் நான் ஒரு கேளிவியை முன் வைக்கிறேன் நீங்கள் அணியும் ஆடையை கூட ஒருவரின் உதவி இல்லாமல் தானாக வராது என்ற நிலை இருக்கும் போது இந்த பேரண்டம் எப்படி தானாக வந்தது? இதற்க்கு நீங்கள் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் ஆர்யா.


கடைசியாக ஒன்றை கூறுகிறேன் கடவுளின் பெர்யரால் தவறுகள் நடக்கிறது என்றால் தவறுகளையும் தவறு செய்பவர்களையும் கலை எடுப்பது தான் அறிவார்ந்த செயலே தவிர அந்த தவறுகளை பார்த்து விட்டு கடவுளே இல்லை என்று சொல்வது அறிவார்ந்த செயல் கிடையாது.

நீங்கள் சொல்வது போல் கடவுள் இல்லை என்று சொன்னான் நான் ஏற்கனே கூறியது போல் இப்பொது நடக்கும் அநியாயங்களை விட நிச்சயம் அதிகமான அநியாயங்கள் நடை பெரும். இதில் மற்று கருத்திற்கே இடம் இல்லை.

அனைத்து மக்களும் இறைவன் ஒருவனே. நாம் ஒரு தாய் மக்கள்.  நாம் அனைவரும் சகோதர்கள் என்ற நிலைபாட்டிற்கு வந்து விட்டால் இந்த பூமி அமைதி பூங்காவாக மாறும் இறைவன் நாடினால்...!!!

Arya

  • Guest
தோழர் யூசுப், உங்கள் பதிவை படித்தேன் உங்கள் கேள்விக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் கேட்டது இந்த பேரண்டத்தை உருவாகியவன் யார்??

இந்த பேரண்டம் அணுக்களால் உருவானது. இது அறிவியல். இதை தாங்களும் அறிவீர்கள். நீங்கள் மீண்டும் கேட்கலாம் அணுக்களால் உருவானது என்றால் அந்த அணுக்களை உருவாகியவன் யார் என்று?

அதற்கும் இங்கு என் கருத்தை தெளிவுபடுத்துகிறேன். பேரண்டத்தை உருவாகிய அணுக்களை வேண்டுமானால் கடவுள் என்று கூறலாம்.

நான் கடவுள் கொடுக்கும் தண்டனைகளை பற்றி கேட்கவில்லை, அவன் தான் எல்லா தவறுக்கும் காரணம் என்றும் கூறவில்லை. நீங்கள் கூறியது போல அனைவரும் தவறு செய்பவர்கள் தான், அதற்கு உடனுக்குடன் தண்டனை என்றால் இவ்வுலகில் மனிதர் யாரும் இருக்க மாட்டார்கள்.

 ஆனால் என் கேள்வி அதுவல்ல, ஒரு மனிதனை இயக்குவது அவன் மூளை தானே, ஒருவனை தவறு செய்ய தூண்டுவதும், நல்லது செய்ய தூண்டுவதும், ஏன் நமக்கு பசிக்கவைப்பதும், நம்மை உணவு உண்ண வைப்பதும் கூட மூளை தானே??

கடவுள் இருக்கிறார் என்று கூறும் நீங்கள் இந்த பேரண்டத்தையும், அதிலுள்ள நம்மையும் அதாவது நம்மை இயக்கும் மூளையையும் இயக்குவது கடவுள் என்று கூறுகிறீர்கள். என் கேள்வி இதுதான் நம்மை இயக்கும் நம் மூளை நம்மை தவறு செய்யாமல் தடுக்க முடியுமல்லவா ? அதை ஏன் இறைவன் செய்வதில்லை.

கடவுள் இருக்கிறார் அனைத்தையும் இயக்குகிறார் என்றால் தவறு செய்ய கட்டளை இடுவதும் அவர்தானா???

 உங்கள் நம்பிக்கையை நான் தெரிந்தோ தெரியாமலோ காயப்படுதிருந்தால் மன்னிக்கவும்

Offline Yousuf

கடவுள் இருக்கிறார் என்று கூறும் நீங்கள் இந்த பேரண்டத்தையும், அதிலுள்ள நம்மையும் அதாவது நம்மை இயக்கும் மூளையையும் இயக்குவது கடவுள் என்று கூறுகிறீர்கள். என் கேள்வி இதுதான் நம்மை இயக்கும் நம் மூளை நம்மை தவறு செய்யாமல் தடுக்க முடியுமல்லவா ? அதை ஏன் இறைவன் செய்வதில்லை.

நம்மை மூளை இயக்குகிறது என்றும் அது நம்மை தவறு செய்யாமல் தடக்க முடியும் என்றும் கூறுகிறீர்கள் ஆர்யா. உண்மைதான் ஆனால் தவறில் இருந்து தடுக்கும் என்று எப்படி கூற முடியும் இன்று உலகில் தவறுகளை அதிகம் செய்வது படித்த புத்தி மான்கள் தானே அவர்களுக்கும் மூளை இருக்கிறது அல்லவே அதை வைத்து இது நல்லது இது கேட்டது என்று பிரித்து அறிய முடியும் அல்லவே ஆர்யா. அப்படி இருக்கும் போது ஏன் அவர்கள் கேட்டதை விட்டு விட்டு நல்லதை செய்ய முன்வராமல் கேட்டதை மட்டும் செய்கிறார்கள் இதை அவர்கள் மூளை அவர்களுக்கு சொல்ல வில்லையா ??

மூளை இருக்க கூடிய மனிதர்கள் ஏன் தப்பை மட்டுமே செய்கிறார்கள் ஏன் அவர்கள் மூளைகள் செயலிழந்து விட்டதா??? ஆர்யா மூளை இருந்தால் மட்டும் போதாது ஒரு மனிதன் தவறு செய்யாமல் இருப்பதற்கு தவறு செய்தால் நாளை நாம் மட்டிகொல்வோமே நம்மை படைத்தவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறானே என்ற இறையச்சமும் தேவை அப்படி அந்த இறையச்சம் யாரிடம் உள்ளதோ அவர் நிச்சயமாக தவறு செய்வதில் இருந்து தப்பி கொள்வார். வெறும் மூளை மட்டும் நம்மை நல்வழி படுத்தி விட முடியாது ஆர்யா.

இறைவன் தவறு செய்வதை ஏன் தடுக்க வில்லை என்று கேட்கிறீர்கள் அதற்க்கு நான் முன்பே பதில் அளித்தேன். மனிதன் தவறு செய்யும் பொழுதெல்லாம் இறைதூதர்களையும் இறைவேதங்களையும் அளித்து மனிதனை நேர்வழி படுத்தினான் என்று. இறைவன் நேரடியாக வந்து மனிதனை நல்வழி படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை அது அவனுடைய ஆற்றலுக்கு அழகும் அல்ல ஆகையால் தான் மனிதர்கள் மூலமே தவறு செய்பவர்களை எச்சரிக்கை செய்ய ஒரு தூதரையும் அனுப்பி அவர்கள் திருந்தி கொள்ள ஒரு அவகாசமும் அளிக்கிறான். இதில் திருந்திகொல்வோரும் உண்டு திருந்தாதொரும் உண்டு ஆர்யா. திருந்தாதொருக்கு தண்டனையை இறைவன் முடிவு செய்து கொள்வான்.

மனிதனை இறைவன் படைத்து அவனை சுதந்திரமாக விட்டு அவனுக்கு நேர்வழி கட்டி விட்ட இறைவனை அஞ்சி கொள்ளாமல் மனிதர்கள் தவறு செய்வதற்கு நீங்கள் இறைவனை எப்படி குற்றம் சொல்ல முடியும். இறைவன் அவனுடைய நேர்வழியை காண்பிக்க வில்லை என்றால் நீங்க கேட்பது சரி. ஆனால் நீங்கள் அந்த நேர்வழியை புரிந்து கொள்ளாமல் இறைவன் ஏன் தவறை தடுக்க வில்லை என்று கேட்ட்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும் ஆர்யா.

இறைவனை குற்றம் பிடிப்பதை விட்டு விட்டு இறைவனின் நேர்வழியை பின்பற்ற தயங்கி சுயநலத்தோடு இறைவனை அஞ்சாமல் வாழக்கூடிய இந்த மனிதர்களை தான் நீங்க குற்றம் காண வேண்டும் ஆர்யா.


ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.(அல் குர்ஆன் 7:179)

இந்த இறை வசனத்தில் இறைவன் கூறியது போல் இப்படி பட்ட மனிதர்கள் இறைவனின் நேர்வழியை பற்றி சிந்திப்பதும் இல்லை கண்களால் பார்த்தாவது திருந்துவதும் இல்லை. காதுகளால் நல்ல உபதேசங்களை கேட்டாவதும் திருந்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இப்படி பட்ட மனிதர்களை குறை சொல்வதை விட்டு விட்டு நேர்வழி காண்பித்து நமக்கு உணவளித்து கொண்டு நம்மை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும் இறைவனை குறை சொல்லலாமா ஆர்யா??

கடவுள் இருக்கிறார் அனைத்தையும் இயக்குகிறார் என்றால் தவறு செய்ய கட்டளை இடுவதும் அவர்தானா???

மனிதனை இறைவன் ஒரு சிறப்பான படைப்பாக படைதுல்லன் ஆர்யா. அப்படி பட்ட மனிதனுக்கு தானாக சிந்தித்து செயல்படும் அறிவையும் கொடுத்துள்ளான். இது மட்டும் அல்லாமல் அவன் நெறிமுறை தவறாமல் ஒழுக்கமுடைய மனிதானக வாழ இறை வேதத்தையும் தந்துள்ளான். உலகம் அழியும் வரை மனிதனை சுதந்திரமாக விட்டு வைத்துள்ள இறைவன் மனிதனை இயக்கவில்லை. மனிதன் இறைவன் வழங்கியுள்ள ஆறாவது அறிவின் மூலம் சிந்தித்து மற்ற உயிரினங்களை விட்டு வேறுபட்டு இயங்குகிறான். இப்படி இயங்கும் மனிதனுக்கு தவறான வழியில் செல்ல கூடாது என்பதற்காகவே இறைவேதத்தையும் இறை தூதர்களையும் ஒவ்வோவ்று காலகட்டத்திலும் இறைவன் அனுப்பினான்.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.(அல் குர்ஆன் 7:179)

மறுபடியும் இந்த வசனத்தை உதாரணம் காட்டி மனிதனைத்தான் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர இறைவனை அல்ல ஆர்யா...!!!

இறைவனின் இறுதி வேதத்தை படிக்க முயற்சி செய்யுங்கள். இறுதி வேதம் குர்'ஆண் தனிப்பட சமுதாயத்தின் வேதம் எனபது தவறு அது ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் நேர்வழி காட்டி என்பதை நாம் அனைவரும் புரிந்தது கொள்ள வேண்டும் ஆர்யா. இதை இறைவனே தன்னுடைய வேதத்தில் கூறுவதை பாருங்கள்.


(நாம் உம்மீது இறக்கிவைதுள்ள இவ்வேதம்) இது, அகிலத்தாருக்கு நல் உபதேசமே தவிர (வேறு) இல்லை. (அல்-குர்'ஆண்:- 68 ;52 )

இறைவனை குறை சொல்வதை விட்டு விட்டு மனிதனை வேடுமானால் குறை காணலாம் ஆர்யா...!!!

அகிலங்களை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட பிரார்த்தனை செய்கிறேன்...!!!

Offline KungfuMaster

  • Sr. Member
  • *
  • Posts: 277
  • Total likes: 1
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!
enaku ore oru doubt........
oruthan nallavana, ellarukum nallathu seiravana, santhosama ,, puthisaliya iruntha enna solluvinga ellarum
"avan punniyam senjavan, kadavul avanuku ellam kuduthurukaru, kadavul arul iruku avanuku, athanalathan ipadi nalla irukan, puthisalaiya irukanu" solli nalla vishayathuku mattum kadavula karanam aakuvinga...

aana oruthan thappanavana, muttala  iruntha udane neenga soldra vaarthaigal ennava irukum
"athu oru kedu kettathu, urupadava poguthu, ithellam epdi vaaazha poguthu theriyala, enga kidanthu vanthucho" koyyala ipa enga ponaru antha kadavul? nallathuku mattum avaru pangu poduvaru matha vishayathuku odi poiduvara? apdi oru selfish kadavul intha manusanuku thevaya?

oru accidentla epdiyo thappi thavari oruthan polachitanna kadavul punniyathula polachitan soluvinga,,, koyyala tsunami, boogambam ithellam vanthapa vaaya pothikitu poiruvinga... appo kadavul enna honey moonka poiruntharu....

athe accidentla avan sethuruntha enna theriyuma solirupinga "avan enna pavam pannano poi sernthutan, avan aayusu avalavuthan pola" ipo kadavul grate escape thana? appo kumbal kumbal ah sethangale namma makkal avanga ellarume paavam pannavangala? pacha kulanthainga thudi thudika sethangale kumbakonathula avanga enna enna pavam panirunthanga? Tsumani allitu poche athana per athula yaru yaru ena enna pavam pannirunthanga? list thara mudiyuma unga kadavullala? illa kadavula kumbudura yaralayachum list thara mudiyuma? hmmm ithuku neenga soldra pathi enna theriyuma "vithi".

kadavul kalla poi vilunthu kumbuttu, nodikoru murai ninaithu... ithellam senjathan kadavul vanthu manusangaluku nalla puthiya kuduparam... illana manasan thappa yosikirathuku avaru porupu ethuka mattaram... ennaya ithu kodumai... apo kadavuluku sidela ethachum kuduthathan avaru kadamaiya olunga seivara... apo kadavuluthan first thandanai kodukanum because lanjam vangurathuku avaru than munnodiya irukaru...
"enna kumbudu unaku nallathu nadakum" - kumbudalaina thappu ethachum nadakum, so kumbudathavangala pazhivanguru kadavul ? adpithana? enna oru nalla ennam kadavuluku... kadamaiyai sei palanai ethir parathe ithu manusanuku manusane sollikondathu... hmm manusanuku irukura intha parantha ennam kuda kadavuluku illa pola... aana kadavul romba nallavaru...rightu...

kadavul, matham, kotpadu ithellam vanthathu manusana nerimurai paduthurathuku than but entha mathamum athan sariyaana pathaila pogavum illa, mathathai parapuravangalum athai sariyana paathaila parapurathum illa... kadavul kadavul nu kaaladiyil kidakuravan than athigama thappu seiran....

kadavulnu oru vishayatha mathichi vazhi padurathula ethana per manusangala paathu ozhunga mathikirom.... oruvamillatha oru vishayathukum, kallukum thaan naam mathipu kudukurom, aanal konja naal vaazha pora manusana evanum mathikirathu illa apram ennaya kadavul? 

kadavul kadavulnu kadavuluke kondu poi kotturan manusan, itha ketta kadavula kekuraru neenga than kudukuringanu soluringa... sari manusan than kodukuran ok.. unaku than sakthi irukkulla unaku vara porula epdiyachum kashta paduravangaluku poi sekkura pola seiyalamla... alavuku athigama sothu serka kudathunu manusanuku advice pandrom, OC la varatha vanga kudathunu solurom but kadavul mattum OC la ethu koduthalum vangiparu?

nammaloda saavu nichayikka patta onnu... athukulla evalo nalla vishayangala pannanumo atha pannalam... kadavuluku selavidura neratha vera nalla vishayathuku selavu panna kadavul kochipara enna ungala? apdi kochikitaruna athuku per kadavul illa... aaga epdi pathalum kadavul concept engayo idikuthu... kadavul pinnala alairatha vittutu, kadavul moolama solla vantha nalla vishayangala mattum kadai pudicha pothum ellarum nalla irukalam...

ennoda karuthukal yarukachum kashtama iruntha mannithukollavum...

Offline Yousuf

உங்கள் பதிவிற்கு நன்றி மாஸ்டர்!

உங்களுடைய வேதனை கடவுளின் பெயரால் மக்கள் செய்யும் தவறுகள் இது அனைத்தும் நன்றாக புரிகிறது மாஸ்டர்.

உங்களுடைய பதிவில் நீங்க எந்த கடவுளை சொல்லி இப்படி ஒரு கடவுள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் என்று சொல்கிறீர்களோ அதே கடவுளை நானும் இல்லாமல் இருப்பதே மேல் என்று தான் கூறுகிறேன்.

ஆனால் நான் சொல்லும் கடவுள் கொள்கை சற்று வித்தியாசமானது மாஸ்டர்!

நீங்கள் சொன்னீர்கள் கடவுளுக்கு கொண்டுபோய் அனைத்தையும் கொடுகிறார்கள் கடவுள் என் நம்மிடம் கேட்க வேண்டும் என்று மிகவும் சரியான கேள்வி. இறைவன் தேவைகள் அற்றவன் என்ற அந்த உண்மை புரியாத மக்கள் தான் கடவுளுக்கு கொண்டு போய் செய்கிறோம் என்ற பெயரில் கோவில் உண்டியலில் போட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நான் இங்கு வாதிட்டு கொண்டிருக்கும் கடவுள் இறைமறை குர்'ஆணின் கூற்றுப்படி இறைவன் தேவைகள் அற்றவன். அவன் மனிதர்களிடம் எதையும் கேட்ட்கவில்லை. மாறாக அவனே இந்த மனிதர்களுக்கு வழங்கி கொண்டிருக்க கூடியவன்.

கடவுள் யார்கிட்டயும் எதையும் கேட்கவில்லை மாஸ்டர் மாறாக அவன் மனிதர்களுக்குத்தான் கொடுக்க சொல்கிறான்.

இதோ இறை மறை கூறுகிறது:

''உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், இறைவனின் பாதையில் நாடு துறந்தொருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். இறைவன் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனும் (24:22)

இந்த வசனத்திற்கு ஏற்றார் போல் இறைத்தூதரின் போதனையை பாருங்கள்:


பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6539)

''தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1426)


இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது ஏழையின் சிரிப்பில் தான் இறைவனை காண முடியும் என்பதை.

நீங்கள் சொல்வது அனைத்தும் இந்த உலகில் குறிப்பாக இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் செய்து கொடிருக்கும் மூட பழக்க வழக்கங்களை வைத்து இப்படி ஒரு இறைவன் தேவை இல்லை என்று சொல்கிறீர்கள்.

இது சரியான வாதாமாக இருக்காது ஏனென்றால் ஒரு குறிப்பிட வட்டத்திற்குள் ஆய்வு செய்து விட்டு கருத்து சொல்வதை விட ஒரு கருத்து சொல்வதற்கு முன் நன்றாக ஆராய்ந்து கருத்து சொல்வது சிறந்தது.

ஒருவன் நல்லவன் என்பதையோ கேட்டவன் என்பதையோ தீர்மானிக்க வேண்டியது மக்கள் அல்ல அனைத்தையும் படைத்தவன் தான் மாஸ்டர்.

ஒருவனுடைய வெளி பண்புகளை வைத்து அவன் நல்லவன் என்பதையும் கேட்டவன் என்பதையும் மக்கள் கூறுகிறார்கள் என்பதற்காக நாம் அவனுக்கு சான்று வழங்கி விட முடியாது ஆகவே இந்த விடயத்தில் நல்லவன் கெட்டவனை அடையாளம் காண்பது மனிதர்களால் இயலாத ஒன்று!

ஒருவர் இறந்துவிட்டால் அவர் பாவம் செய்தவர் ஒருவர் ஆபத்தில் இருந்து பிழைத்து விட்டால் அவர் புண்ணியம் செய்தவர் என்று மக்கள் கூறும் இந்த மூட பழக்கத்தை நானும் கடுமையாக எதிர்க்கிறேன் மாஸ்டர்.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆகவே அதில் இருந்து நல்லவன் கேட்டவன் என்று யாரும் தப்பி விட முடியாது.

அவர்களுக்குரிய நேரம் வந்து விட்டால் அவர்கள் மரணத்திற்கு பயந்து இரும்பு கோட்டைகளில் ஒளிந்திருந்தாலும் மரணமா அவர்களை அடைந்தே தீரும்!

மாஸ்டர் நான் இங்க எந்த கடவுளை வைத்து வாதிட்டுகொன்டிருக்கிறேனோ அந்த கடவுள் தனக்காக ஒன்றும் செய்ய சொல்ல வில்லை மாறாக நல்ல விடயங்களை மற்றவர்களுக்கு பயன் தரக்கூடிய விடங்களை செய்து நீங்கள் இறைவனின் நேசத்தை பெறுங்கள் என்று தான் கற்று கொடுக்கிறானே தவிர நீங்கள் இருபத்தி நான்கு மணிநேரமும் என் பாதத்தில் இருந்து கொண்டே இருங்கள் நீங்கள் வெற்றி பெற்று விடலாம் என்று கூற வில்லை.

அதற்க்கு பதிலாக இறைவனின் நேசத்தை எதில் பெறலாம் என்று இறைவனின் தூதர் கூறினார்கள் ஒரு சின்ன விடயம் என்று மக்கள் அலட்சியமாக கருதும் ஒரு விடயம் என்னவென்றால்,

ஒரு பாதையில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் ஒரு தடுப்பை அகற்றினால் அதன் மூலம் நீங்கள் இறைவனின் நேசத்தை பெற முடியும் என்று இறைவனின் தூதர் எங்களுக்கு கற்று கொடுத்தார்கள்.

ஆகவே நான் இங்கே கூறி கொண்டிருக்க கூடிய கடவுள் கொள்கை உங்களுக்கு இது வரை அறியாத கடவுள் கொள்கை என்று நினைக்கிறன்

நான் கூறும் கடவுள் கொள்கையின் மூலாம் மற்றவர்களுக்கு உதவுவதும் மட்டும் தான் இறைவனின் நேசத்தை பெற முடியும் என்ற கடவுள் கொள்கை.

மற்றபடி உங்கள் பெரும்பான்மையான கேள்விகளுக்கு நான் ஏற்கனவே உள்ள பதிவுகளில் பதில் கொடுத்து விட்டேன்.

நீங்கள் வேண்டுமானால் ஆரம்பத்தில் இருந்து ஒரு முறை அனைத்தையும் படித்து விட்டு உங்கள் பதிவை பதிவு செய்தால் அடுத்த பதிவிற்கு வசதியாக இருக்கும்.

மாஸ்டர் நீங்கள் எந்த கடவுளை மறுக்கிரீர்களோ அந்த கடவுளை நானும் மறுக்கிறேன். நான் கூறும் கடவுள் தேவைகள் அற்றவன். அவன் தான் மனிதனுக்கு கொடுப்பவன். மனிதனிடம் இருந்து பெறுபவன் அல்ல.

ஏழைகளுக்கு உதவுவதன் மூல இறைவனின் நேசத்தை பெற முடியும் என்பது இங்கு நான் முன் வைக்கும் கடவுள் கொள்கை!

Offline KungfuMaster

  • Sr. Member
  • *
  • Posts: 277
  • Total likes: 1
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!
sari yousuf :D:D

but enaku kadavul nu kettale kovam kovama varuthu :D

Offline Yousuf

உங்களுக்கு கடவுளின் பெயரை கேட்டால் கோபம் வருகிறது எனக்கு கடவுளின் பெயரை சொல்லி எமற்றுபவர்களை பார்த்தால் கோபம் வருகிறது மாஸ்டர்!

இது தான் உங்களுக்கு எனக்கும் உள்ள வேறுபாடு! :D

நன்றி!

Ra-One

  • Guest
KAdavul irukiraR :)

Offline suresh

ellorum ivalo perusa type pani irukinga enala padichi reply koduka mudiala athanala enaku enna thonutho atha solren.... kadavul irukinrar enru solli nam manathai naam katupaduthikollavum,,, mirugam ponru yaarum nammai katupadutha mudiathu enru sinthanaigal varamal iruka munorgal thuvaki vaitha oru achani than kadavul... atharkaga pala naadagangalum kadavul peyaril thiruvizha , pandigai enru nadatha paduginrana .... palveru mozhigalilum,, palveru kadavul peyargalilum inru varai nadatha paduginrana..... pinjila irunthe namaku mel yaaro oruthar irukanganu kozhanthaikaluku oru bayathai paalooti varuginrargal,, appa amma matrum ulagam yaaro oruvaruku bayanthu nadapathai parthu siruvargalum kadavul enru yaaro irukirar pola enru thanai ariyamale thanai control seiya palagi kolgirargal....ulagil iyarkai, ulagam,, ithai aarayave namaku theriavillai,,, kannuku therinja vishayathaiye namala aaraya mudiala aanal kannil parkatha vishayathuku oru uruvam koduthu,, pandigai naatkal kurithi vaithu,, viratham,, enru anaithume nadagathin oru seyalpaadu than....manathai sariyaga thanvasa pada therinjavan entha vishayam seithalum sariyaga mudivu tharum athu vetriya irunthalum sari tholviya irunthalum sari,,,, ithai theriyamal mudivukaga kaduviln paathangalil vilunthu thaan seitha seyaluku mudivu theriamal irupathu sari alla....naanum intha samuthayathin vithi vilaku alla petrorgalin varpurathalin perilum,,samuthayathin paarvayil puthithai theriyakoodathu enbathal naanum veru vazhi inri kadavulai vanangukinren.... ennai ponru evalovo peru varpurathalin peyaril vanangugirargal :) :) :)
« Last Edit: January 15, 2012, 01:38:57 PM by suresh »
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline shaM

Kadavul irukirar
Naama  paavikira ovvaru upakaranathaium  oruvaakiyathukku orutharu erukirathu pola :S nama   vaazukira  inta  ulakathai oruvaakiyathukkum ore oru kadavul than erukiraN

Offline supernatural

nitchayamaaga kadavul irukirar.!!!
oru karu urvaathu muthal avan vaaznaalai nitchayippathu yar?
oruvan pirapathum , irapathum nitchaippavan yaar?
kadavul endroru shakthiillavittal ithellam eppadi saathiyam?
naalai endrulla ethirpaarpey kadavul meethulla nambikai thaaney..
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline ooviya

கடவுள் இருக்கிறாரா  இல்லையா என்பது எனக்கு தெரியாது !!!

கடவுள் நமக்குள் இருக்கிறார்

தீயவர்களை அழிப்பது மனிதன்
நல்லது செய்பவன் மனிதன்
உதவி செய்பவன் மனிதன்
குற்றம் செய்பவரை தண்டிப்பதும் மனிதன்
உருவாகுவது மனிதன்
அழிப்பதும் மனிதன்

அப்போ நாம் தானே கடவுள்

பசின்னு வருபவர்களுக்கு ஒரு வாய்  சாப்பாடு போட்டால்
அங்கே நீ தான் கடவுள்

நீங்க கடவுள் இல்லாட்டி போங்கப்பா
இந்த ஓவியா ஒரு கடவுள் தான்

« Last Edit: February 20, 2012, 11:24:27 PM by ooviya »
கண்களே ஆண்களை நம்பாதே


Offline thamilan

ஓவியா
கலக்கிட்டீங்க. நாங்க சொன்னதும் இது தான்.
அன்பே சிவம். அப்போ நீங்க கடவுள் தான்

Offline Bommi

தீயவர்களை அழிப்பது மனிதன்
நல்லது செய்பவன் மனிதன்
உதவி செய்பவன் மனிதன்
குற்றம் செய்பவரை தண்டிப்பதும் மனிதன்
உருவாகுவது மனிதன்
அழிப்பதும் மனிதன்

ஓவிய நல்ல கருத்து
ஆனால் இது அந்த காலத்துக்கு
 மனிதர்களுக்கு ஓகே.....
இந்த காலத்து மனிதர்களுக்கு
மனிதாபிமானம் ரெம்ப குறைவு
சோ கடவுள் இருக்கிறாரா
இல்லையானு டவுட் தான்