துவைத்து போட்டா டைட்டாவும்,துவைக்காம போட்டா லூசாவும் இருக்குறதுதான் ஜீன்ஸ் பேண்ட்-ன் சிறப்பம்சம் !
பெவிலியனில் தோனி - "அமைச்சரே... என்னைப் போல உங்களுக்கும் காய்ச்சலடிக்கிறதா! நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம்! நமக்கு மட்டும் ஏன் இப்படி...
சரக்கடித்து சாயும் நண்பனைப் பார்த்து நான் என்றுமே கோபப்பட்டதில்லை. ஏனென்றால் அவன் மட்டையான பின்பு மிச்சமிருக்கும் ஒரு கட்டிங் எனக்குத்தான்!
சனிக்கிழமை மதியமே ஞாயிறுக்கான சந்தோஷமும், ஞாயிறு மதியமே திங்களுக்கான திகிலும் வந்துடுது...
உன் பார்வை கனிவாய்தான் இருக்கிறது, இருந்தும் தீப்பந்தமாய் எரிகிறது என் உடல் # கவிதா ஸாரி கவித
சனிக்கிழமை அதுவுமாய் மனைவியின் அலுவலகத்திற்கு விடுமுறைவிட்ட அவளது மேனேஜரை வன்மையாக கண்டிக்கிறேன் # சரக்கடிக்க வழியில்லாம் கிடப்போர் சங்கம்
விநாயகர் சதுர்த்தின்றது அருகம்புல், கொழுக்கட்டையோட அழகா நிறைவு பெற்றுக் கொண்டிருந்தது சில வருடங்கள் முன்பு வரை
மனைவி குளிக்கப்போகும்போது மட்டும், அவளுடன் சின்மயியும் ஸ்ரேயா கோஷலும் சேர்ந்து கொள்கிறார்கள் #பாத்ரூம் சிங்கிங்ல காது நோவுது மைலார்ட்
காஃபி போட்டது மனைவியின் தங்கை! "நல்லாருக்கா?" என்கிறாள் மனைவி! இல்லை என்றாலும் பிரச்சனை ஆமாம் என்றாலும் பிரச்சனை #ஆனந்தம் ப்ரூவுடன் ஆரம்பம்
'நான் எங்க அம்மா மாதிரி' என்றுஅடிக்கடி சொல்கிறாள் மனைவி! செய்வினை செய்தமாதிரியே திரியும் மாமனாரை பார்த்ததுமே நான் அதை கண்டுபிடித்துவிட்டேன்
ஆபிசில் மேனேஜரும்... வீட்டில் மனைவியும் வேலை வாங்குகிறார்கள்... #பேச்சிலராவே இருந்திருக்கலாம்...
ஆவி பறக்க டீ போட்டுக் கொடுத்தால் அது டீக்கடை... ஆவியே டீ போட்டுக் கொடுத்தால் அது வீடு... # மனைவி
இடை தேர்தல்ல குஷ்பு போட்டியாமே..? எடை தேர்தலா இருந்தா கண்டிப்பா வெற்றிதான் :-)
நாட்டுக்காக ஓட்டு போட்டு ஏமாறுறது போதாதா,பாட்டுக்காக வேற ஓட்டு போடனுமா செலவு பண்ணி # சூப்பர் சிங்கர்
எங்க வேலை செய்யுறன்னு கேட்டுட்டு உடனே சம்பளம் எவ்ளோ ன்னு கேக்குறவங்ககிட்ட, 'என்ன பொண்ணு தர போறீங்களா' ன்னு கேட்கனும்போல இருக்கு # கடுப்பு
பூனை கண்ண மூடிக்கிச்சுனா உலகமே இருட்டிடுச்சுனு நினைக்குமாம்., பூனையே இவனுககிட்ட சொன்ன மாதிரி சொல்றானுக!
'பாடிகார்ட்'-ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூல்! # ஆமா, அண்ணனும் பாடி காட்டுவாரு, அக்காவும் பாடி காட்டுவாங்க, அப்புறம் வசூல் ஆகாதா?
களவும் கற்று மறந்துவிடக்கூடாது... களவாடிய பொருளை விற்று, பின் மறந்து விடலாம்...
மந்திரங்கள் மோட்சம் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை உன் பெயர் சொல்லும்போது சொர்க்கம் தெரிகிறது # கவித கவித
பல குடும்பத்தில்,பெண்கள் சொந்த வாழ்க்கையோடு சீரியல் வாழ்க்கையையும் சேர்த்து வாழ்கிறார்கள் # செல்லம்மாவுக்கு என்னாச்சோ!
பாசமான தோழியைக் காட்டிலும்... மாசமான மனைவியே முக்கியம்... #ஆயிரம் இருந்தாலும் அவள் போல வருமா...?
கன்னங்களா இல்லை பன்'னங்களா! இவ்வளவுமிருதுவாக இருந்தால் முத்தம் கொடுக்கத்தோன்றாது! கடித்துப்பார்க்கத்தான் தோன்றும் #தாமதத்திற்கானசமாளிப்பு
முகத்தை மூடுவது முகமூடி என்றால்... தலையை மூடுவது தலைமூடி-தானே... அப்புறம் ஏன் ஹெல்மெட்டுன்றாங்க... # ஒரு டவுட்டு
நண்பன் குடித்தால் தப்பில்லை... அவனே காதலன் ஆகிவிட்டால் குடிப்பது தவறு... கணவனாகவே ஆகி விட்டால் சோலி சுத்தம்... #என்னகொடுமைசார்இது
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான் பெண்... காதலி கடவுள்... அவளே மனைவி ஆகும்போது மிருகம்... #என்ன்ன்னா அடி விழுது...
காதலியின் கைப்பை அடியும், மனைவியின் பூரிக்கட்டை அடியும் ஏறத்தாழ ஒன்றுதான்! ஆனால் முன்னது முடிந்தால் முத்தம், அடுத்தது முடிந்தால் ரத்தம்...
அளவுக்கதிகமான டிஸ்டர்பன்சும் அன்பாகிப்போகிறது காதலிக்கையில், அதிகப்படியான அன்பும் டிஸ்டர்பஸாகி விடுகிறது, மண வாழ்க்கையில்
வீட்டிலிருந்து போன் பண்ணும்போது மட்டும் வேற பாட்டு கேட்கிறமாதிரி காலர்ட்யூன் வெக்கமுடியாதா? எங்கம்மா சந்தேகமாவே பேசுறாங்கப்பா.
சில பெண்களின் உருவங்களைப் பார்த்தால், அவர்கள் கொண்டு செல்லும் குடைகள்... உருட்டுக் கட்டைகளாக கிராபிக்சில் மாறி பயமுறுத்துகின்றன...