Author Topic: எதெல்லாம் வரதட்சணை?  (Read 3963 times)

Offline Yousuf

எதெல்லாம் வரதட்சணை?
« on: September 26, 2011, 06:36:24 PM »
பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை!

பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும்
பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!

வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது,
வளைகுடா நாடுகளுக்குச்செல்வது – வேலை தட்சணை!

வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!

ஆயிரம் பொய்சொல்லி யாவது ஒரு கல்யாணத்தை முடிக்க நினைப்பது - பொய் தட்சணை

வரதட்சணை கொடுக்க முடியாதவர்கள் தம்மகளுடைய திருமணத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று நினைப்பது கடன்படுவது - கடன் தட்சணை

அப்படியும் கடன் எடுக்க முடியாதவர்கள் வங்கிகளில் வட்டிக்கு கடன் எடுப்பது - வட்டி தட்சணை

என்னுடைய மகன் பெரும் டாக்டர், எஞ்சினியர், லோயர், அதிகாரி என்று மாப்பிள்ளையின் தகப்பனார் பேரம் பேசுவது - பெருமை தட்சணை.

மாப்பிள்ளையைப் பற்றித்தரகர் பெரிதாகப்பேசிப் பெண்வீட்டாரிடம் அதிக கூலி பெற நினைப்பது - தரக தட்சணை.

பெண்பிள்ளையைப் பெத்தவர் அனைத்தையும் கொடுத்துவிட்டு கடைசியில் தங்களிடம் ஒன்றும் இல்லாமல் வீதிக்கு வருவது - விதி தட்சணை


வளைகுடாநாடுகளில் வேலைசெய்பவர் என்று பெரிய தங்க வளையல் கேட்பது - வளையல் தட்சணை

சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்று ஆணவம் பேசுவது - ஆணவ தட்சணை

நாங்கள் வரதட்சணை கேட்கவில்லை உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் என்று நாசூக்காக சொல்வது - சொற்திறன் தட்சணை

தன் உடன் பிறந்த சகோதரிகளுக்காய் தன் வாழ்வைத் தியாகம் செய்து வாழ நினைப்பது -தியாக தட்சணை

வரதட்சணை வாங்காதே என்று அறிஞர்கள் எவ்வளுவுதான் கூறினாலும் அதைக் கவனத்தில் கொள்ளாது காரியத்தில் கண்ணாயிருப்பது - காரிய தட்சணை

அரபு நாடுகளுக்குப் போய்வந்தும் அங்கு மாதிரி கொடுத்து செய்யாமல் எடுத்து செய்ய நினைக்கும் மானங்கெட்டவனை மாப்பிள்ளையாய் எடுப்பது - மடமை தட்சணை

கையைநீட்டிப் பிச்சை கேட்பவனை பிச்சைகாரன் என்னும் சமுதாயம் கையை நீட்ட்டாமல் பிச்சை கேட்கும் இவனை மாப்பிள்ளை என்கிறதைச்சொல்வது - சமுதாய தட்சணை

ஈத், தீபாவளி, இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – பண்டிகை தட்சிணை!

முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத்
தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!

குழந்தை பிறந்தால் அதற்கும் காது குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!

மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!

மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை!




……… மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை! ................

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: எதெல்லாம் வரதட்சணை?
« Reply #1 on: September 26, 2011, 06:44:48 PM »
வறியவன் வீதியிலிருந்தும்
வந்த மாப்பிள்ளை
வீட்டிலிருந்தும்
கேட்பது வரதட்சணை(பிச்சை)


நல்ல பதிவு

யாராலும் மாத்த இயலாதது சில சம்பிரதாயங்களை

சிலர் நினைத்தால் மாற்றலாம்
வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்று உணரவேண்டும்  :)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

Re: எதெல்லாம் வரதட்சணை?
« Reply #2 on: September 26, 2011, 06:59:30 PM »
வரதட்சணை வாங்குவது தவறு ஆண்மை அற்ற செயல் என்று அண்களும் வரதட்சணை வாங்கும் ஆண்மை அற்றவனை நான் திருமணம் செய்யமாட்டேன் என்று பெண்களும் முடிவெடுத்தால் நிச்சயம் வரதட்சனையை ஒழித்துவிடலாம் சுருதி...!!!

நன்றிகள்...!!!

Offline Faizal

Re: எதெல்லாம் வரதட்சணை?
« Reply #3 on: September 27, 2011, 03:54:33 AM »
Good Messag & Nice solution to eliminate this evil. Thanks Yousuf for your informations.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எதெல்லாம் வரதட்சணை?
« Reply #4 on: September 27, 2011, 03:56:38 AM »
amma kodukura varathadsanaila 1 chein korancha purusan keetaruu solli atha vaangura ponunga irukum vara kastam.. ;)