Author Topic: ஓட்டல் ஸ்பெஷல் சாம்பார்  (Read 333 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு - 1/4 கப்,
தனியா - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 8,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
பட்டை - 1,
கசகசா - 1/2 டீஸ்பூன் (ஒவ்வொன்றாக எண்ணெயில் வறுத்து, பின் பொடி செய்து கொள்ளவும்),
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
கொத்தமல்லி - சிறிது.

தாளிக்க...

கடுகு - 2 டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிதளவு,
கறிவேப்பிலை - 1 பிடி,
காய்ந்த மிளகாய் - 4,
எண்ணெய் - 1/4 கப்.
காய் - முருங்கை, கத்தரி, வெண்டைக்காய் ஏதேனும் ஒன்று.

எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு, காய்கறிகளைப் போட்டு, தக்காளி போட்டு வதக்கி புளியை கரைத்து உப்புச் சேர்க்கவும். கொதி வந்தவுடன் பொடித்ததைப் போட்டு, புளி பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த பருப்பைப் போட்டு, நன்றாக 5 நிமிடம் கொதித்த பின் இறக்கி கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும்.