Author Topic: பென் டிரைவ் இன் வாழ்நாள் எவ்வளவு?  (Read 467 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook

ப்ளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு ப்ளாஷ் ட்ரைவிற்கு மாறியவரா நீங்கள்? உங்களின் ப்ளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா?
ஏனென்றால் ப்ளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிளாப்பியில் மேற்கொள்வது போல ப்ளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம், அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து ப்ளாஷ் ட்ரைவிற்கு வயதாகி விட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்பதனை எதிர்பார்க்கலாம். ஆனால், அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது.

எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் ப்ளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும். கவலைப் படாதீர்கள்.
பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப ப்ளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.

பென்டிரைவ் இனை கம்பியூட்டரில் பொருத்தி உபயோகித்த பின்.. பென்டிரைவ் இன் இயக்கத்தை நிறுத்தாமல் அதாவது eject பண்ணாமல் பென் டிரைவ் ஐ நீக்காதீர்கள்…