Author Topic: புற்று நோய்..  (Read 233 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 181
  • Total likes: 552
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
புற்று நோய்..
« on: November 18, 2023, 12:00:29 PM »

மண்ணிலே உயிராய் பிறந்தது
முதலே
பெண்ணுக்கு குழந்தை உலகமென

மாறியும் போகும் நிலையதன் பெயரே
தாய்மை பாசம் எனவாகும்

பெற்ற குழந்தை பேணி வளர்க்க
நித்தம் அவளும் பாடுபட்டு

அத்துணை அறிவும் ஊட்டி வளர்த்து
கண்ணென பிள்ளை காத்திடுவால்

அப்படி பிள்ளை வளர்த்திட்ட தாய்க்கு
துயரென வந்த கதை இதுவே

உற்ற அன்பினை கொட்டி வளர்த்திட்ட
பிள்ளையை புற்று நோய் தாக்கியதே

சற்றும் இதையே எதிர்பாராத
தாயும் அங்கே கலங்கி நின்றாள்

எத்துனை தெய்வம் உலகினில்
உண்டோ
அத்தனையும் அவள் வேண்டுகிறாள்

பித்தென மனமும் ஆகிடவே அவள்
பேச்சறு நிலையில் முடங்குகிறாள்

சத்தென உள்ள பொருளாய் கொடுத்து
வித்தகனாக வளர்ந்த பிள்ளை

சதையதை புற்று நோயும் திங்க
சித்திரை வெயிலாய் மனம் கொதிக்க

எத்துனை துன்பம் அவளுக்கும் நேரும்
என்பதை சொல்ல வார்த்தை இல்லை

எறும்பு ஈ என எதுவும் தீண்டா
நிலையில் காத்த தன் பிள்ளை

உடலை ஒரு நோய் தீண்டி திங்க
தடுத்திட அவளுக்கும் வழி இல்லை

பத்தினி அவளும் பதியிடம் நிலையை
சொல்லியே நாளும் புலம்புகிறாள்

அவனும் அவளது நிலையை கண்டு
ஆற்ற முடியாமல் தோற்று நின்றான்

கதறியும் பதறியும் என் செய்ய
அந்த நோய்க்கு இங்கே மருந்தில்லை

கடவுளை வணங்கியும் பலனில்லை
அதை தீர்க்க இங்கே வழி ஏது?

எத்துனை நோய்கள் உலகினில்
உண்டு
எல்லாவற்றிலும் கொடியதிது

வந்தால் காக்க மருந்தே இல்லை
என்னும் நிலையால் கடிது இது ..

சக்தி மிகுந்த அறிவியலாளர்
கண்டு நான் கேட்பது ஒன்று மட்டும்

புற்று நோய் இல்லா உலகம் படைக்க
நமக்கு வழியாய் இருப்பதெது?

அத்தாய் நிலை போல் இனியும் எவரும்
கலங்கா வண்ணம் காத்திடவே

முத்தாய் மருந்தை கண்டு பிடித்தே
உலகிற்கு பரிசாய் தான் தாரீர்!!



(இது ஒரு தோழி கேட்டதற்கு இனங்க எழுதியது. ஏதேனும் பிழை இருந்தால் தெரிய படுத்தவும்.
புற்று நோய் பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது ஆனால் எனக்கு தெரிந்த வகையில் தீர்க்க முடியா பிணி என்பதை நான் அறிந்ததால் அதை மைய படுத்தி இதை எழுதி உள்ளேன். தன் பிள்ளைக்கு புற்று நோய் வந்தால் அந்த பிள்ளையின் தாயின் மன நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்ல முற்பட்டிருகிறேன்.
நன்றாக இருந்தால் உங்கள் விருப்பங்களை அளிக்கவும் நன்றி)
(இது எழுதும் போது என் கண்ணில் நீர்த்துளி எட்டி பார்த்தது)
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5182
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: புற்று நோய்..
« Reply #1 on: November 18, 2023, 01:41:37 PM »
புற்றுநோயின் வலியை நேரில் பார்த்து உணர்ந்தவள் நான்..... மிஞ்சுவது சாம்பலும் கண்ணீரும் மட்டுமே.... :'(


"கதறியும் பதறியும் என் செய்ய
அந்த நோய்க்கு இங்கே மருந்தில்லை
கடவுளை வணங்கியும் பலனில்லை
அதை தீர்க்க இங்கே வழி ஏது?
எத்துனை நோய்கள் உலகினில்
உண்டு
எல்லாவற்றிலும் கொடியதிது
வந்தால் காக்க மருந்தே இல்லை
என்னும் நிலையால் கடிது இது .."

விழியோரம் கண்ணீர் தேங்கியது இந்த வரிகளைப் படிக்கையில்...!!

ஒரு தாயின் வலியை வரிகளில்
வெளிப்படுத்திருக்கிர்கள் நண்பா....

நல்ல கவிதை!!!